புறநிலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநிலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 22, 2012

காலவரையற்ற வேலை நிறுத்தம் நிறைவுற்றது!

அஞ்சல் துறையுடன் நடைபெற்ற பேச்‌சுவார்த்தையின் படி  புறநிலை ஊழியர்களின் 16.10.2012 முதல் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்றுடன் (22.10.12)  நிறைவுபெறுகிறது!   

          போராட்டதில் முழு வீச்சுடன் பங்கெடுத்து,  நமது கோட்டத்தை பொறுத்தவரை 100 வீதம் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்து நமது கோட்டத்தின் ஒற்றுமையை  நிலைநிறுத்திய  அனைத்து தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள்!   ஒப்பந்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்!

நமது காலவரையற்ற வேலைநிறுத்தம்,  ஆர்பாட்டங்கள், மாபெரும் பேரணி,  இன்றைய உண்ணாவிரதம் அனைத்தையும் வெற்றிபெறச்செய்வதில் உடனிருந்த அஞ்சல் மூன்று,  அஞ்சல் நான்கு  தோழர்களுக்கு மிக்க நன்றி! 

ஒற்றுமை வலியது ,   அது தொடருமே எந்நாளும்!

தோழமையுடன் 
s.செல்வன்  செயலர், புறநிலை ஊழியர்சங்கம் 


ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்!


சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.







அக்டோபர் 21, 2012

INDEFINITE STRIKE ENTERED 6TH DAY TODAY THE 21ST Oct,2012.



INDEFINITE STRIKE ENTERED 6TH DAY TODAY THE 21ST Oct,2012.

The Striking employees’ organized meetings and processions all over the country.  In Karnataka massive rally was organized at Freedom park, Bangalore for the last two days attended by GDS in large number including comrades from the neighboring divisions of Bangalore. Com.P.S.Prasad, Gen.Secretary, COC and various local leaders addressed the meeting.

At all divisions mass rallies and processions are reported from Karnataka.  Hassan comrades visited the house of former Prime Minister Sri.H.D.Devegowda and submitted a memorandum.  There was naked procession also at Haradanahalli. 

In Channapatna division also there was a massive meeting and padayatra despite heavy downpour.

Massive meetings in Shimoga, Gadag, DHARWAD, Koppal, Chikmagalur and almost all divisions reported and the GDS went even to commence Rail rokho in Gadag.  

This time reportedly GDS employees are participating in Strike more enthusiastically, willfully and spontaneously.  Their only urge is that there should be honorable settlement! 

We also met several MPs and sought their help in bringing pressure upon all concerned.  Pressure needs to be brought on our Communication minister and Finance minister we strongly feel as the powers of the postal Directorate is limited. 

WE THEREFORE LOOK FORWARD FOR MASS MEETINGS AND DEMONSTRATION ON 22ND Oct, 2012 which will strengthen our talks.

Comrades, Follow the directions of the AIPEDEU WITHOUT FAIL AND HELP US FOR BETTER BARGAINING POWER.

MEMORANDUM TO THE COMMUNICATION MINISTER Hon’ble Kapil Sibal at UJJAIN in Madhyapradesh:
 Our comrades submitted a memorandum to the Hon’ble Minister at a function in Ujjain.  There was a press news in the new paper today about our GDS demands including Bonus ceiling of Rs.3500/-
MINISTER APPEARED IN TOTAL T.V & PRINT MEDIA AND ASSURED OF FAVOURABLE ACTION YESTERDAY.
Comrades, continue strike till honorable settlement. 

With warm regards,

-S.S.Mahadevaiah,GeneralSecretary,   AIPEDEU. 


அக்டோபர் 20, 2012

அஞ்சல் புறநிலை ஊழியர்கள் மாபெரும் பேரணி

16.10.2012 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் ஒரு அங்கமாக,  சிவகங்கை அஞ்சல் கொட்ட புறநிலை ஊழியர்கள் மாபெரும் பேரணி சிவகங்கையில்  19.10.2012 அன்று நடைபெற்றது














அக்டோபர் 19, 2012

புறநிலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-தினகரன் செய்தி







நன்றி : தினகரன் 

நான்காவது நாளாக புறநிலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக தொடர்கிறது !

தோழர்கள் அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள்!

                          நமது புறநிலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் அகில இந்திய அளவில் நான்காவது நாளாக வெற்றிகரமாக தொடர்கிறது.   இலாக்கா இதுவரை நியாயமான கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை. பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.  

                      பொதுச்செயலாளர்  s .s  தோழர்  மகாதேவைய்யா  தலைமையில் டெல்லி மற்றும் அருகில் உள்ள  மாநிலங்களை சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட தோழர்கள் DELHI DAK  BHAVAN முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.   

                     நமது கோட்டத்தை  பொறுத்தவரை தோழர்கள் போராட்டம் என்றால் பின்வாங்காமல் வெற்றியோ அது தோல்வியோ முழு வீச்சில் 100 சதவீதம் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.  வாழ்கையே  போர்க்களம். போராடாமல் எதுவும் கிடைக்காது.    கனி தானாக பழுத்து விழும் என்று காத்திருந்தால் காலம் கடந்து விழுந்து பயன் இல்லை.  அல்லது விழாமல் அலுகிப் போகலாம்.  வழக்கம் போல் நமது தோழர்கள் உணர்வு பூர்வமாக 100  சதவீதம் போரட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள்.  அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு தோழர்கள் புறநிலை ஊழியர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம்  இருந்தாலும்,  ஆங்காங்கே ஆர்பாட்டத்திலும் பல்வேருவகைகளிலும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.   

                    சிவகங்கை HO(16.10.2012), மானாமதுரை HO(17.10.2012), மற்றும் திருப்பத்தூர் SO(18.10.2012)  முன்பாக கடந்த மூன்று நாட்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் மூன்று சங்கங்களின் தோழர் தோழியர்களும் திரளாக கலந்து  ஆவேசமாக பேசி, கோஷமிட்டனர்.    

                   நமது நியாமான கோரிக்கைகளை வென்றெடுக்க எவ்வித சஞ்சலங்களும் இல்லாமல் போராடும் தோழர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

தோழமையுடன் 

S.செல்வன் 
செயலர், புறநிலை ஊழியர் சங்கம் 
                            

அக்டோபர் 18, 2012

புறநிலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-தினமணி செய்தி


மானாமதுரையில் ஈ.டி. தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

First Published : 18 October 2012 11:20 AM IST
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் தபால் துறை ஈ.டி. ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 சிவகங்கை தபால் கோட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் பணிபுரிந்துவரும் 550-க்கும் மேற்பட்ட ஈ.டி. தபால் ஊழியர்கள் அகில இந்திய ஈ.டி தபால் ஊழியர்கள் மத்திய சங்கம் அறைகூவலின்படி செவ்வாய்க்கிழமை முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட தபால் நிலையங்ளில் ஈ.டி. ஊழியர்களால் நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தபால் ஊழியர்களுக்கு இணையாக ஈ.டி. ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பை ரூ. 3,500 என உயர்த்த வேண்டும், இறந்த ஜி.டி.எஸ் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 மானாமதுரை காந்தி சிலை அருகேயுள்ள தலைமை தபால் அலுவலகம் முன் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈ.டி தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை கோட்டத் தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் செல்வன், உதவித் தலைவர் சத்தியமூர்த்தி, பார்த்திபனூர் கிளை பொறுப்பாளர் நாகரெத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் பிரிவு 3-ன் கோட்டச் செயலர் கருப்புச்சாமி, பிரிவு 4-ன் செயலர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஈ.டி ஊழியர்களும், இவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
புறநிலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-தினமணி செய்தி 

ஈடி ஊழியர்களின் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம்

ஈடி ஊழியர்களின் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் 
 .
 ஆம் தோழர்களே !   16.10.2012 முதல் தோழர் மகாதேவ்வையா  தலைமையிலான AIPEDEU சங்கம் நடத்திவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் எங்கு நோக்கினும் வெற்றி இதிலும் வெற்றி எங்கும் வெற்றி. வீறுகொண்டு எழுந்த ஈடித்  தொழிலாளர்கள் சுற்றி நடக்கும் துரோகங்களை  எல்லாம் பொருட்டாக கருதாமல் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என ஆவேச  போர் பரணி பாடி  வருகின்றனர் .

நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து ஈடித் தோழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர் .

அக்டோபர் 15, 2012

GDS ஊழியர்களுக்கான 16.10.2012 முதல் கால வரையரையற்ற வேலைநிறுத்தம்


அகில இந்திய புறநிலை அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
NOTICE: 16
DATE: 13.10.2012
GDS ஊழியர்களுக்கான 16.10.2012 முதல் கால
வரையரையற்ற வேலைநிறுத்தம்
அன்புத்தோழர்களே ! தோழியர்களே.!
                  வணக்கம். அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் S.S. MAHADEVAIYA அவர்களின் அறைகூவலின் படி GDS ஊழியர்களுக்கான இலாக்கா ஊழியர் அந்தஸ்து, BONUS  உச்சவரம்பை நீக்குதல் உள்ளிட்ட  எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 08.10.2012 நமது கூட்டு பொதுக் குழு முடிவின்படியும் அனைத்து GDS ஊழியர்களும் கால வரையரையற்ற வேலைநிறுத்தம் செய்வதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்:
1.        BONUS உச்சவரம்பை இலாக்கா ஊழியர்களுக்கு இணையாக ரூ.3500௦௦/- என்று உயர்த்த வேண்டும்.
2.        GDS ஊழியர்களுக்கு இலாக்கா ஊழியர் அந்தஸ்து – நீதிபதி தல்வார் குழுவின் அடிப்படையில் GDS ஊழியரை இலாக்கா ஊழியராக்கு.
3.        இறந்த GDS  ஊழியர்களின் வாரிசுகளுக்கு இப்போது இருக்கின்ற அளவீடுகளை தளர்த்தி கருணை அடிப்படியில் பணி நியமனம் உடனே செய்ய வேண்டும்.
4.        POSTMAN/GROUD D/MAIL GUARD ஊழியர்களுக்கான புதிய நியமன விதிகளை நீக்கி GDS ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படியில் பணி உயர்வு வழங்க வேண்டும்.
5.        BPMகளுக்கு 20,000துக்கு ஒரு புள்ளி என்பதை உடனடியாக நிறுத்துக.
6.        அனைத்து வகையான GDS  பதவிகளை ஒழிப்பதை நிறுத்தி,   காலியாக உள்ள GDS  பதவிகளை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
7.        GDS  ஊழியர்களின் TRCAயை குறைப்பதற்கு அளித்துள்ள சட்ட விரோதமான ஆணைகளை திரும்பப் பெற வேண்டும்.
8.        மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட (RSDY)  உடனடியாக அமல்படுத்துக.
9.        விகிதாச்சார ஊழியரின் பகுதி/முழு நேர ஊழியரின் ஊதியத்தை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
10.     நான்கு ஆண்டுகளாக CASUAL LABOURகளுக்கு வழங்கப்படாத DAயை உடனடியாக வழங்க வேண்டும்.
     எனவே நமது கோட்டத்தில் வழக்கம் போல் நூறு சதவீதம் வேலை நிறுத்தம் செய்து வெற்றியடைய   செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.


                போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!                    போராட்ட வாழ்த்துகளுடன்!


                                                                                                                    (S. செல்வன்)
                                                                                         மாநில உதவி/கோட்ட செயலாளர்
                                                                                                  சிவகங்கை. CELL NO: 9788451803.