demonstration லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
demonstration லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 29, 2023

தொழிற்சங்க அங்கீகார ரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இடம்: சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக


நேரம் : மாலை 5 மணி


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி



அன்பார்ந்ததோழர்கள்/தோழியர்களுக்கு வணக்கம்!


அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகின்ற பேரியக்க சங்கங்களின் (NFPE & AlPEU- Group - C/தேசீய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்/அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்-குரூப்-சி,) அங்கீகாரத்தினை ரத்து செய்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒன்றிய மத்திய அரசு மற்றும் அஞ்சல் இலாக்காவினை கண்டிக்கும் வகையில் நாடெங்கிலும் பலதரப்பட்டபோராட்டத்தினை நடத்திட மத்திய, மாநில சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.


NFPE பேரியக்கத்தைபழிவாங்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஊழியர் நலனே பெரிதெனக் கொண்டு பலதரப்பட்ட வீரமிகு போராட்டங்களை நடத்தி, பாதுகாப்புமிக்க சலுகைகளை வென்றெடுத்தவரலாற்று பாரம்பரிய பேரியக்கம்தான் நமது தேசீய அஞ்சல் ஊழியர் சங்கம்.


 ஆட்சிக்கேற்ற, சீசனுக்கேற்ற, கானல்நீர் போன்று தோன்றி மறைந்திடும் காகித லெட்டர்பேர்டு சங்கத்தினில் அப்பாவி தோழர்கள் ஒரு சிலர் மாய்ந்து, வீழ்ந்து போய்கிடப்பதை எண்ணும்போது பரிதாபமாக இருக்கின்றது.


எனவே வரலாற்று பேரியக்க சங்கங்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்த மோசமான உத்தரவினை வாபஸ் வாங்கிட நாளை 01/05/23 மே தொழிலாளர் தின நாளன்று நமது NFPE சம்மேளன செங்கொடி ஏற்றி உரக்க கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திட திரண்டு வாரீர்! வாரீர்! தோழர்களே சிவகங்கை தபால் அலுவலகம் முன்பாக.


வழங்கம் போல நமது கோட்ட தோழமை சங்கங்களின் ஆதரவுடன் (Al GDSU மற்றும் NFPE - P4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதனை தெரியப்படுத்தி, அனைத்து தோழமை சொந்தங்களும் பெருவாரியாக கலந்துகொண்டுபோராட்டத்தினை வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மார்ச் 28, 2022

வேலை நிறுத்த ஆர்பாட்டம் 28.03.2022

 சிவகங்கை Ho முன்பாக இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், பஸ் போக்குவரத்து மிக குறைவாக இருந்தாலும்கூட, அதையும் தாண்டி, பல தோழர்கள் & தோழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது, மகிழ்ச்சியாக இருந்தது.


மேலும், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன கூட்டமைப்பின், மாவட்ட ஓய்வுபெற்ற பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு, பேருரை ஆற்றிய விதம் சிவகங்கையையே அதிர வைத்தது.


கூட்டத்தினில் துவக்கமாக, தோழர். G.நாகலிங்கம் கோட்ட உதவி செயலர்-P3 அவர்கள் எழிச்சி பொங்க , கோரிக்கைகளுடன் கூடிய கோஷம் எழுப்பிய விதம் மிக அருமையாக அமைந்தது.


கூட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்தியதோழர். K. மதிவாணன் செயலர் P3 அவர்களின் பங்கு மிக பிரமாதமாக அமைந்தது.


போராட்டத்தின் நோக்கத்தினை தெளிவாக, தோழர். P. நடராஜன் P4 செயலர்/S.செல்வன் செயலர் GDS ஆகியோர் விளக்கி பேசினர்.


போராட்டத்தில் கலந்துகொண்ட NFPE - P3/P4 மற்றும் Al GDSU தோழர்கள் & தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வீரம் செறிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


மானாமதுரை Ho/மானாமதுரை துணை அலுவலகம் மற்றும் மானாமதுரை சப்-டிவிசனைசார்ந்த துணை அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் அனைத்துமே 100% மூடுவிழா கண்டுள்ளது என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றோம்.


அதேபோல சிவகங்கை Ho மற்றும் துணை அலுவலகங்கள் முழுதும் அடைப்பு விழாகண்டதோடு, சிவகங்கை சப்-டிவிசனுக்கு உட்பட்ட அனைத்து துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள் முழுதுமே 100% மூடுவிழாகண்டிருக்கின்றது என்பதும் பெருமைபட சொல்லவேண்டும்.


சிவகங்கை கோட்டத்திற்கு ,இப்போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் எனலாம். பாரம்பரிய வழியினில் வழங்கம் போல 100% வெற்றி கண்டுள்ளது சிவகங்கை கோட்ட தொழிற்சங்கங்கள்.

பண்பாடும் , கலாச்சாரமும் மற்றும் பாரம்பரியமுமிக்க சிவகங்கை கோட்டத்தின் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் 100% ஒற்றுமையாக கடைபிடிக்கப்பட்டது.

2 தலைமை அஞ்சலகம்,

40 துணை அஞ்சலகம்,

155 கிளை அஞ்சலகம் என அனைத்து அலுவலகமும் மூடப்பட்டது..

முதல் நாள் போராட்டம் வெற்றிகராமாக முடிந்தது.


தமிழ் மாநில அளவில்  அதிகார வர்க்கத்திற்கு எதிராக சற்றும் சளைக்காத அளவில் ஒற்றுமையுடன் போராடும் குணம் உள்ள முதன்மையான கோட்டம் எதுவென்று கேட்டால் அது சிவகங்கை தான் என்ற பெருமையை பறைசாற்றும் கோட்டம் நமது கோட்டம்..,


நம் தொழிற்சங்க முன்னோடிகள் விதைத்து சென்ற ஒற்றுமையுடன் கூடிய வலிமை நமக்கு வழிகாட்டியாக போராட தூண்டுகிறது..💪


போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்கள் & தோழியர்களுக்கும் வீரவணக்கத்துடன் போராட்ட வாழ்த்துகள்













மார்ச் 15, 2022

Retired Govt employees demonstration Sivaganga

                           Com Mathivanan Divisional Secretary P3  is addressing large  gathering of TN State Retired Government Employees who held demonstration  in front of Aranmanai Vasal Sivagangai today evening against the New Health insurance scheme . His speech was appreciated by one and all.-com P.Sermugapandian



மே 21, 2020

நாடுதழுவிய எதிர்ப்பு நாள்! 22.05.2020

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*மத்திய அரசின்* 
*தொழிலாளர் விரோத,*
*தனியார்மய*
*நடவடிக்கைகளை*
*கண்டித்து*
*கருப்பு பேட்ஜ் அணிந்து* *போராட்டம்*
*ஆர்ப்பாட்டம்* :💪🔥
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தோழர்களே!, தோழியர்களே!! கரோணா என்னும் கட்டுக்குள் அடங்கா கொடிய வைரசுக்கு எதிராக நம்மையும் காத்துக்கொண்டு, மக்களுக்காக சேவையாற்றி வரும் சூழலில்,  இதுதான் சரியான தருணம் என்பதுபோல் பஞ்சப்படி ரத்து,  12 மணிநேரம் வேலை, தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்து நம் போராடும்  உரிமைகளை, சலுகைகளை பரித்தல் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த யத்தனிக்கிறது இந்த தொழிலாளர் விரோத மத்திய அரசு.
      பெரும் முதலாளிகளுக்கு சலுகை, வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கும் சலுகைகள்
இந்திய நாட்டின் பெரும் செல்வமான,   நிலக்கரி, தாதுப்பொருள், மின்விநியோகம், அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட பல அரசு மற்றும் பொது துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் பெரு-  முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்- படுகிறது.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எடுத்த முடிவின்படி,
நமது மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி ஆளுகின்ற  மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் , மற்றும் தனியார் துறை ஊழியர்கள் , யாவரும் வருகின்ற 22-05-2020 அன்று அலுவலக வேலை நேரங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் ,மாலை 4.00 மணியளவில், அலுவலக வாயில் முன்பாக, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதெனவும் முடிவெடுத்துள்ளார்கள்.

அதனடிப்படையில் நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து பிரிவு ஊழியர்களும்,  மத்திய , மாநில,  தொழிற்சங்கங்களின் அறைகூவலின் படி வரும் 22/05/2020 *வெள்ளிக்கிழமை* அன்று அனைவரும் இந்த தொழிலாளர், தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக கருப்பு பேட்ஜ்🌑💪 அணிந்து பணியாற்றுவதுடன் மாலையில் சமூக இடைவெளியிட்டு தலைமை தபால்  அலுவலகங்கள் முன்பாக *(சிவகங்கை* HO & *மானாமதுரை HO)* கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

*ஆர்ப்பாட்டத்தின்*
*முக்கிய நோக்கம் :*

👉🏻மத்திய அரசின் ஊழியர் விரோத போக்கு

👉🏻தவறான பொருளாதாரக் கொள்கை.

👉🏻மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும்  தனியாருக்கு தாரை வார்த்தல். 

👉🏻தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்து, ஊழியர்களின் உரிமைகளைப்பறித்தல்.(44வது சட்டத்தை வெறும் 4 சட்டமாக குறைத்தல்)

👉🏻போராட்டம் வாயிலாக நாம் பெற்ற உரிமைகள் / சலுகைகள் யாவும் ரத்து செய்ய முற்படும் சர்வாதிகார நடவடிக்கைகள்

👉🏻இன்னும் பல மோசமான மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம்..

*அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்*

போராட்ட வாழ்த்துக்களுடன் 💪

Kமதிவாணன் .
செயலர் P3

P நடராஜன்.
செயலர் P4
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩