வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 26, 2022

வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டம்-kallal 26.03.2022

 வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டம்:


இடம்: கல்லல் அஞ்சலகம்.

26.03.22

சனிக்கிழமை

நேரம்' மாலை 5 மணி

கூட்டத்தினில் கலந்துகொள்ளும் துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்:


செம்பனூர் So மற்றும் கிளை அலுவலகங்கள்.


கல்லல் So மற்றும் கிளை அலுவலகங்கள்


பாகனேரி So மற்றும் கிளை அலுவலகம்.


நடராஜபுரம் So மற்றும் கிளை அலுவலகம்


வெற்றியூர் So மற்றும் கிளை அலுவலகம்


காளையார்கோவில் So மற்றும் கிளை அலுவலகம்.


நாட்டரசன்கோட்டை So மற்றும் கிளை அலுவலகம்


மற்றும் அருகில் உள்ள So/Boதோழர்களும் கலந்துகொள்ளலாம் என்பதனையும் தெரியப்பபடுத்திக்கொள்கின்றோம்.

____________________________________________________________________________

26.03.2022 மாலை 5 மணி 

கல்லல் SO வில் தொழிற்சங்க ஆயத்த விளக்க கூட்டம் முச்சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டச்செயலாளர் தோழர் மலைராஜ் அவர்களும்,


அஞ்சல் மூன்று செயலளாளர் தோழர் மதிவாணன்

அஞ்சல் மூன்று து.செயலாளர்

தோழர் நாகலிங்கம்

நான்கு செயலாளர் தோழர் நடராஜன் 

Aigdsu கோட்ட செயலாளர் & மாநில உதவித்தலைவர் தோழர் செல்வன் ஆகியோர் பங்கேற்று ஆயத்த விளக்கவுரை ஆற்றினர்





மார்ச் 25, 2022

வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் -மானமதுரை 25.03.2022

 மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் விளக்க கூட்டம்

மானாமதுரை HO போஸ்ட் மாஸ்டர் தோழியர் தர்மாம்பாள் அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது..

சிறப்பு விருந்தினராக 

முன்னாள் P3 கோட்ட செயலளார் தோழர் சேர்முக பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்..

P3 செயலர் தோழர் மதிவாணன்

P4 செயலாளர் தோழர் நடராஜன்

AIGDSU மாநில உதவி தலைவர் & கோட்டச் செயலர் 

தோழர் செல்வன் மற்றும்

P3 உதவி தலைவர் தோழர் சசிகுமார் விளக்கவுரை ஆற்றினர்..


வேலை நிறுத்த போராட்டம் நூறு சதவீத வெற்றி பெற அனைவரும் போராட்டத்தில் உத்வேகத்துடன் கலந்து கொள்ள தோழர்கள் & தோழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது 







மார்ச் 23, 2022

வேலைநிறுத்த விளக்கபகுதி கூட்டம்-Tiruppattur 23.03.2022

 வேலைநிறுத்த விளக்கபகுதி கூட்டம். :


இடம்: திருப்பத்தூர் So


நாள் :23.03.22

புதன்கிழமை


நேரம் : மாலை 4 மணி


கூட்டுதலை மை :

தோழர்.ராமர்.

போஸ்ட்மாஸ்டர்/தலைவர் NFPE -P3

தோழர்.முருகானந்தம்

போஸ்ட்மாஸ்டர். P3


கலந்துகொள்ளகூடிய அலுவலகம் மற்றும் Bos:


திருப்பத்தூர் So மற்றும் அதற்குட்பட்ட கிளை அலுவலக ஊழியர்கள்.

திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டு So மற்றும் GDS ஊழியர்கள்

SM.Hospital. So மற்றும் GDS ஊழியர்

கண்டவராயன்பட்டி So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்

கண்டரமாணிக்கம் So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்.

திருக்கோஷ்ட்டியூர். So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்.

ஏரியூர் So மற்றும் அதனை சார்ந்த கிளை அலுவலக ஊழியர்கள்

எனவே வேலைநிறுத்த விளக்க பகுதிக்கூட்டத்திற்கு மேற்கண்ட பகுதியை சேர்ந்ததோழர்கள் & தோழியர்கள் (NFPE - P3/NFPE - P4& Al GDSU தோழர்கள் உட்பட) திருப்பத்தூர் Soவிற்கு

மாலை 4 மணிக்குதவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.








நவம்பர் 08, 2020

காளையார்கோவில் பகுதி கூட்டம் 07.11.2020

                              அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கங்களின் சார்பில் காளையார்கோவில் SO -வில் பகுதி கூட்டம் நடைபெற்றது. காளையார்கோயில், சருகணி, திருவேகம்ப்பத்தூர், மற்றும் மங்களம்  அஞ்சல் அலுவலகங்கள், அதன் கீழுள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களின் தோழர், தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


                   ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்டறியப்பட்டது.  தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்து  26.11.2020 அன்று நாடுதழுவிய அளவில் நடைபெறும் ஒருநாள் வேளை நிறுத்தத்தின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.  தலமட்ட பிரச்சனைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.  நமது அஞ்சல் மூன்று முன்னாள் கோட்ட செயலாளரும் முன்னாள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்புச்செயலாளறுமாகிய தோழர் K.செல்வராஜ் அவர்கள் பகுதிகூட்டத்தில் கலந்துகொண்டு கோட்டச்சங்கங்களின் பாரம்பரியம்மிக்க செயல்பாடுகள் குறித்து   சிறப்புரை வழங்கினார்!  

   தோழர் K.S அவர்கள் எதிர்பாராமல் வந்திருந்து பகுதிக்கூட்டத்தை  சிறப்பித்தது அனைவருக்கும் எழுச்சியூட்டு வதாக இருந்தது.





நவம்பர் 03, 2020

திருப்பத்தூர் பகுதிக்கூட்டம் 03.11.2020

                        அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கங்களின் சார்பில் திருப்பத்தூர் SO -வில் பகுதிக்கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர், கண்டரமாணிக்கம், கண்டவராயன்பட்டி, திருகோஷ்டியூர், ஏரியூர், திருப்பத்தூர் B.S ,  SMH அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் கீழுள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும்  தோழர், தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். பகுதி நிர்வாகிகள் சிறப்பான ஏற்படுகளை செய்திருந்தனர். 

                        ஊழியர்களின் பிரச்சனைகள் கேட்டறியப்பட்டது.  தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்து  26.11.2020 அன்று நாடுதழுவிய அளவில் நடைபெறும் ஒருநாள் வேளை நிறுத்தத்தின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.  தலமட்ட பிரச்சனைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

                         கோட்ட மாநாட்டில் கலந்துகொள்வதுபோல், அனைத்து தோழர், தோழியர்களும் எழுச்சியுடன் கலந்துகொண்டது உத்வேகம் தருவதாக அமைந்தது.








செப்டம்பர் 03, 2015

வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி!

2.9.15-நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி! நமது கோட்டத்தில் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு, மாபெரும் வெற்றியடைய செய்த தோழர்களுக்கு போராட்ட வாழ்த்துக்கள்!!.

செப்டம்பர் 01, 2015

செப்டம்பர் 2 நாடுதழுவிய வேலை நிறுத்தம்!

தோழர்களே!, தோழியர்களே!!

                           
            செப்டம்பர் 2, 2015 அனைத்து தொழிற்சங்கங்களின்  ஒருநாள் 

வேலை நிறுத்தம் மகத்தான வெற்றிபெற உறுப்பினர்கள் 

முழுமனதுடன் பங்கெடுக்கவும்! 


       வழக்கம் போல் நமது கோட்டத்தில் 100 சதவீதம் 

 வெற்றிபெறசெய்து  நமது கோட்டத்தின் பாரம்பரிய தொழிற்சங்க 

போர்குணத்தை நிலைநாட்டிட போராட்ட வாழ்த்துக்கள்!



டிசம்பர் 13, 2012

12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம் 100 சதவீதம் வெற்றி !


வழக்கம் போல் நமது கோட்டத்தில் அனைத்து NFPE தோழர், தோழியரும் 12.12.2012  அன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு 100 சதவீதம் வெற்றியடைய செய்தனர்.  கலந்து கொண்ட அனைத்து தோழர், தோழியருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.