நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 29, 2023

தொழிற்சங்க அங்கீகார ரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இடம்: சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக


நேரம் : மாலை 5 மணி


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி



அன்பார்ந்ததோழர்கள்/தோழியர்களுக்கு வணக்கம்!


அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகின்ற பேரியக்க சங்கங்களின் (NFPE & AlPEU- Group - C/தேசீய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்/அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்-குரூப்-சி,) அங்கீகாரத்தினை ரத்து செய்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒன்றிய மத்திய அரசு மற்றும் அஞ்சல் இலாக்காவினை கண்டிக்கும் வகையில் நாடெங்கிலும் பலதரப்பட்டபோராட்டத்தினை நடத்திட மத்திய, மாநில சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.


NFPE பேரியக்கத்தைபழிவாங்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஊழியர் நலனே பெரிதெனக் கொண்டு பலதரப்பட்ட வீரமிகு போராட்டங்களை நடத்தி, பாதுகாப்புமிக்க சலுகைகளை வென்றெடுத்தவரலாற்று பாரம்பரிய பேரியக்கம்தான் நமது தேசீய அஞ்சல் ஊழியர் சங்கம்.


 ஆட்சிக்கேற்ற, சீசனுக்கேற்ற, கானல்நீர் போன்று தோன்றி மறைந்திடும் காகித லெட்டர்பேர்டு சங்கத்தினில் அப்பாவி தோழர்கள் ஒரு சிலர் மாய்ந்து, வீழ்ந்து போய்கிடப்பதை எண்ணும்போது பரிதாபமாக இருக்கின்றது.


எனவே வரலாற்று பேரியக்க சங்கங்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்த மோசமான உத்தரவினை வாபஸ் வாங்கிட நாளை 01/05/23 மே தொழிலாளர் தின நாளன்று நமது NFPE சம்மேளன செங்கொடி ஏற்றி உரக்க கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திட திரண்டு வாரீர்! வாரீர்! தோழர்களே சிவகங்கை தபால் அலுவலகம் முன்பாக.


வழங்கம் போல நமது கோட்ட தோழமை சங்கங்களின் ஆதரவுடன் (Al GDSU மற்றும் NFPE - P4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதனை தெரியப்படுத்தி, அனைத்து தோழமை சொந்தங்களும் பெருவாரியாக கலந்துகொண்டுபோராட்டத்தினை வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


பிப்ரவரி 02, 2023

தொழிற்சங்க வகுப்பு!

 ஊழியர் நலன் சார்ந்த தொழிற்சங்க கூட்டம்:

புதிதாக GDS பதவியில்  சேர்ந்து பணியாற்றி வரும் Al GDSU பேரியக்க உறுப்பினர்களான தோழர்/தோழியர் அனைவருக்கும் இன்று 02 - 02 - 23  சிவகங்கையில் உறுப்பினர் அறிமுகம் , தொழிற்சங்க வரலாறு மற்றும் இலாக்கா விதிமுறைகள் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டது.

கூட்டம் மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 7.20 மணிவரையில் தொடர்ந்து நடைபெற்றது.

முக்கியமாக இளந் தோழியர்கள் 52 பேர்கள், பெரும் மழையினையும் பொருட்படுத்தாமல் கடைக்கோடி Boவிலிருந்து உணர்வுபூர்வாக/ஆர்வமாக கலந்துகொண்டது நமது சங்கத்தின் மீதுள்ள அளவிலா பற்றுதலை வெளிக்கொணர்ந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

நமது சங்க வழிகாட்டிகளான மூத்த தோழர்கள் திரு.P.சேர்முகப்பாண்டியன், திரு.K.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு புதியதோழர்களிடத்தில் தொழிற்சங்க வரலாற்றோடு, அவர்களின் அனுபவத்தினை சுவைபட பேசி, பகிர்ந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்தினில் NFPE - P3 செயலர் தோழர். மதிவாணன் மற்றும் NFPE - P4 செயலர் தோழர்.நடராஜன் அவர்களும் கலந்துகொண்டு, தொழிற்சங்க வரலாற்று நிகழ்வினை பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தினை AIG DSUன் தலைவர், தோழர், அம்பிகாபதி அவர்கள் சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி முடித்தார்.

பகுதிவாரியாக சங்க பகுதி தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

இறுதியாக Al GDSUன்கோட்ட உதவி செயலர் தோழர்,m. மணிவண்ணன் அவர்கள் நன்றி கூறி இனிதே முடித்து வைத்தார்.

இயற்கை சீற்றங்களையும் தாண்டி , கலந்துகொண்ட தோழர்கள்/தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
























மார்ச் 08, 2022

மகளிர் தினம்

 சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்கவேண்டும் என்ற கற்பனை வரிகள் உண்மையாகிவிட்டது.


தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும்கூட பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மொத்த 21மேயர்களில் 11மேயர்கள் பெண்கள்தான்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் 102 பேர்கள் பதவியேற்றுள்ளனர்.


சொத்திலும் சரி, வேலைவாய்ப்பிலும் சரி, 30% இடஒதுக்கீடு முறை இப்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றது.


1989ல் துவங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.


அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி சரித்திரம் படைத்து வரும் பெண்களுக்கு/இன்றைய நாள் இனிய நாளாக, வீரம் விளைந்த நாளாக கருதி நமது தோழியர்கள் அனைவருக்கும், மகளிர் தின நல்வாழ்த்துக்களை கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

மார்ச் 13, 2014

தோழர் A.வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்!

கண்ணீர் அஞ்சலி 


தோழர் A.வெள்ளைச்சாமி முன்னாள் அஞ்சல் நான்கு கோட்டச்செயலாளர், நமது கோட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர், பணி ஓய்வுக்கு பின்பும், தமது தபால் காரர் பணிக்கு மட்டும் ஓய்வு கொடுத்து நமது இயக்கங்களில் தொடர்ந்து  பங்கெடுத்தவர்  உடல் நிலை குறைவு காரணமாக இன்று (13.3.2014)இயற்கை எய்தினார்.   

தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், சக தோழர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை நமது கோட்டச்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. 

                

நவம்பர் 16, 2013

தோழர் C.பன்னீர்செல்வம் விபத்தில் மறைவு ஒரு சோகம்!

தோழர் C. பன்னீர் செல்வம்,  உதவிச் செயலாளர்,   புறநிலை ஊழியர் சங்கம் , திருப்பத்தூர்-630211 
  
அவர்கள் 14.11.2013  அன்று ஒரு பேருந்து விபத்தில் காலமானார்.   தோழர் அவர்கள் நமது தொழிற்சங்கத்தில் தீவீர பற்று  கொண்டவர்.  அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தவர்.   குறிப்பாக அதிகப்படியான மனிதாபிமானமிக்கவர்.  தமது  GDSMD பணியிலும் சிறப்பாக பணியாற்றியவர்.   அவரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.  ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  

நிர்வாக விதி முறைகளின் படி GDS தோழர் மறைவின் பொழுது அவற்றின் இறுதி காரியங்களுக்கு எவ்வித தொகையும் வழங்க முடியாது என நமது இலாகாக்க கை விரித்து விட்டது.  இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

                அவரின் மறைவு இலக்காவுக்கும்,  தொழிற் சங்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

          

ஜூலை 19, 2013

GDS கோட்ட மாநாடு!





பணி நிறைவு பாராட்டு விழா

NFTE-BSNL அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் C.K.மதிவாணன் 
அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருச்சியில் 18.7.13 அன்று நடைபெற்றது.  நமது  கோட்ட அஞ்சல் துறை தோழர்கள் மற்றும்  தலைவர் K.R சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.


ஜூலை 17, 2013

தோழர் S.ராஜேந்திரன் அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள்!



நமது கோட்டத்தின் AIPEU P3 சங்க உதவிச்செயலாளர், கோட்ட அலுவலக Accountant, நமது மூன்று சங்கங்களின்(GDS, P4, & P3) செயலராக பணியாற்றிய பெருமைமிக்கவர்  பல்வேறு நிலைகளை கடந்த அயரா உழைப்பாளி தோழர் S.ராஜேந்திரன் அவர்களுக்கு  இன்று(17.7.2013)மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் வெற்றிகரகமாக இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது! 

நமது தோழர் தோழியர்களின்  இதயம் நிறைந்த அன்பில் தெம்புற்றுவிரைவில் குணமடைந்து வீடு திரும்பி, மீண்டும் அதே எழுச்சியுடன் தங்கள் பணியினை தொடர வாழ்த்துக்கள்!

                                                                தோழர் S.ராஜேந்திரன்

ஜூன் 30, 2012

அஞ்சல் பணி ஓய்வு பெரும் தலைவர்கள்!

 தோழர் P.ஆதிமூலம்!

நமது கோட்ட P3 சங்க தலைவர், பல நெருக்கடி காலங்களில் தொழிற் சங்கத்தை கட்டிக்காத்த தலைவர்!,  தொழிற்சங்க வழிகாட்டி!, சிறந்த கட்டுரையாளர்!, இலக்கிய ஆர்வலர்  தோழர் P.ஆதிமூலம் அவர்கள் இன்று அஞ்சல் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்!.  இந்த சிவகங்கை கோட்ட  AIPEU சங்கம் வழுவானதாகவும்,  மூன்று சங்கங்களும்(எழுத்தர், தபால்கரர், புறநில ஊழியர் )  ஒற்றுமையுடனும்  செயலாற்ற பாடுபட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்!  மாநில சங்கத்திலும் நிர்வாகியாக சிறப்பாக பணியாற்றியவர்!  இலக்கிய, தொழிற்சங்க அரங்குகளில் துடிப்புடன் ஒரு இளைழரை போல் பங்கு கொண்டு பல ஆக்கபூர்வமான  கருத்துக்களை பதிவு செய்தவர்! அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் இருந்து இந்த தொழிற்சங்கதிற்க்கு வழிகாட்ட வேண்டும் என்பதே அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விருப்பம்.  அவர் கட்டிக்காத்த தொழிற்சங்கம், அவர்  சுட்டிக்காட்டிய வழியில் அஞ்சல் ஊழியர்கள்  நலனுக்காக   தொடர்ந்து போராடும்!. 
தோழர் தங்கவேலு!

மானாமதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டரும், நமது P3 சங்க உதவி தலைவருமான தோழர் தங்கவேலு அவர்களும் இன்று  அஞ்சல் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்!.    மானமதுரை தலைமை அஞ்சலகத்தை ஒரு பசுஞ்சோலையாக மாற்றி பராமரித்தவர்,  இளமையில் மனைவியை இழந்தபோதும் தன மூன்று குழந்தைகலுக்காக மறு திருமணம் செய்யாமல் நன்கு வளர்த்து ஆளாக்கியவர்,  இவரை போன்றவர்கள் இந்த துறையில் இருப்பதால் தான் இந்த அஞ்சல் துறை ஒரு நேர்மையான  துறையாக விளங்குகிறது என்று கூறும் அளவிற்கு மிகவும் நேர்மையானவர். இறக்க குணம் படைத்தவர்.  அநீதி கண்டு கடும் கோபபும் மற்றவர்  துன்பம் கண்டு கண்ணீர் விடுவதும்  இவரின் இயல்பு.  நமது தொழிற்சங்கத்தின் மீது இறுதிவரை பற்று கொண்டவர்.  இவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ நமது AIPEU -ன்  மூன்று  சங்கங்களும் வாழ்த்துகிறது!