ஊழியர் நலன் சார்ந்த தொழிற்சங்க கூட்டம்:
புதிதாக GDS பதவியில் சேர்ந்து பணியாற்றி வரும் Al GDSU பேரியக்க உறுப்பினர்களான தோழர்/தோழியர் அனைவருக்கும் இன்று 02 - 02 - 23 சிவகங்கையில் உறுப்பினர் அறிமுகம் , தொழிற்சங்க வரலாறு மற்றும் இலாக்கா விதிமுறைகள் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டது.
கூட்டம் மாலை 4.00 மணிக்கு தொடங்கி இரவு 7.20 மணிவரையில் தொடர்ந்து நடைபெற்றது.
முக்கியமாக இளந் தோழியர்கள் 52 பேர்கள், பெரும் மழையினையும் பொருட்படுத்தாமல் கடைக்கோடி Boவிலிருந்து உணர்வுபூர்வாக/ஆர்வமாக கலந்துகொண்டது நமது சங்கத்தின் மீதுள்ள அளவிலா பற்றுதலை வெளிக்கொணர்ந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.
நமது சங்க வழிகாட்டிகளான மூத்த தோழர்கள் திரு.P.சேர்முகப்பாண்டியன், திரு.K.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு புதியதோழர்களிடத்தில் தொழிற்சங்க வரலாற்றோடு, அவர்களின் அனுபவத்தினை சுவைபட பேசி, பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தினில் NFPE - P3 செயலர் தோழர். மதிவாணன் மற்றும் NFPE - P4 செயலர் தோழர்.நடராஜன் அவர்களும் கலந்துகொண்டு, தொழிற்சங்க வரலாற்று நிகழ்வினை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தினை AIG DSUன் தலைவர், தோழர், அம்பிகாபதி அவர்கள் சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி முடித்தார்.
பகுதிவாரியாக சங்க பகுதி தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
இறுதியாக Al GDSUன்கோட்ட உதவி செயலர் தோழர்,m. மணிவண்ணன் அவர்கள் நன்றி கூறி இனிதே முடித்து வைத்தார்.
இயற்கை சீற்றங்களையும் தாண்டி , கலந்துகொண்ட தோழர்கள்/தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக