🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*மத்திய அரசின்*
*தொழிலாளர் விரோத,*
*தனியார்மய*
*நடவடிக்கைகளை*
*கண்டித்து*
*கருப்பு பேட்ஜ் அணிந்து* *போராட்டம்*
*ஆர்ப்பாட்டம்* :💪🔥
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தோழர்களே!, தோழியர்களே!! கரோணா என்னும் கட்டுக்குள் அடங்கா கொடிய வைரசுக்கு எதிராக நம்மையும் காத்துக்கொண்டு, மக்களுக்காக சேவையாற்றி வரும் சூழலில், இதுதான் சரியான தருணம் என்பதுபோல் பஞ்சப்படி ரத்து, 12 மணிநேரம் வேலை, தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்து நம் போராடும் உரிமைகளை, சலுகைகளை பரித்தல் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த யத்தனிக்கிறது இந்த தொழிலாளர் விரோத மத்திய அரசு.
பெரும் முதலாளிகளுக்கு சலுகை, வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கும் சலுகைகள்
இந்திய நாட்டின் பெரும் செல்வமான, நிலக்கரி, தாதுப்பொருள், மின்விநியோகம், அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட பல அரசு மற்றும் பொது துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் பெரு- முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்- படுகிறது.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எடுத்த முடிவின்படி,
நமது மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி ஆளுகின்ற மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் , மற்றும் தனியார் துறை ஊழியர்கள் , யாவரும் வருகின்ற 22-05-2020 அன்று அலுவலக வேலை நேரங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் ,மாலை 4.00 மணியளவில், அலுவலக வாயில் முன்பாக, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதெனவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதனடிப்படையில் நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து பிரிவு ஊழியர்களும், மத்திய , மாநில, தொழிற்சங்கங்களின் அறைகூவலின் படி வரும் 22/05/2020 *வெள்ளிக்கிழமை* அன்று அனைவரும் இந்த தொழிலாளர், தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக கருப்பு பேட்ஜ்🌑💪 அணிந்து பணியாற்றுவதுடன் மாலையில் சமூக இடைவெளியிட்டு தலைமை தபால் அலுவலகங்கள் முன்பாக *(சிவகங்கை* HO & *மானாமதுரை HO)* கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
*ஆர்ப்பாட்டத்தின்*
*முக்கிய நோக்கம் :*
👉🏻மத்திய அரசின் ஊழியர் விரோத போக்கு
👉🏻தவறான பொருளாதாரக் கொள்கை.
👉🏻மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்தல்.
👉🏻தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்து, ஊழியர்களின் உரிமைகளைப்பறித்தல்.(44வது சட்டத்தை வெறும் 4 சட்டமாக குறைத்தல்)
👉🏻போராட்டம் வாயிலாக நாம் பெற்ற உரிமைகள் / சலுகைகள் யாவும் ரத்து செய்ய முற்படும் சர்வாதிகார நடவடிக்கைகள்
👉🏻இன்னும் பல மோசமான மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம்..
*அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்*
போராட்ட வாழ்த்துக்களுடன் 💪
Kமதிவாணன் .
செயலர் P3
P நடராஜன்.
செயலர் P4
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக