அஞ்சல் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி புறநிலை ஊழியர்களின் 16.10.2012 முதல் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்றுடன் (22.10.12) நிறைவுபெறுகிறது!
போராட்டதில் முழு வீச்சுடன் பங்கெடுத்து, நமது கோட்டத்தை பொறுத்தவரை 100 வீதம் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்து நமது கோட்டத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்திய அனைத்து தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள்! ஒப்பந்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்!
நமது காலவரையற்ற வேலைநிறுத்தம், ஆர்பாட்டங்கள், மாபெரும் பேரணி, இன்றைய உண்ணாவிரதம் அனைத்தையும் வெற்றிபெறச்செய்வதில் உடனிருந்த அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு தோழர்களுக்கு மிக்க நன்றி!
ஒற்றுமை வலியது , அது தொடருமே எந்நாளும்!
தோழமையுடன்
s.செல்வன் செயலர், புறநிலை ஊழியர்சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக