அக்டோபர் 19, 2012

நான்காவது நாளாக புறநிலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக தொடர்கிறது !

தோழர்கள் அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள்!

                          நமது புறநிலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் அகில இந்திய அளவில் நான்காவது நாளாக வெற்றிகரமாக தொடர்கிறது.   இலாக்கா இதுவரை நியாயமான கோரிக்கைகளை  ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை. பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.  

                      பொதுச்செயலாளர்  s .s  தோழர்  மகாதேவைய்யா  தலைமையில் டெல்லி மற்றும் அருகில் உள்ள  மாநிலங்களை சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட தோழர்கள் DELHI DAK  BHAVAN முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.   

                     நமது கோட்டத்தை  பொறுத்தவரை தோழர்கள் போராட்டம் என்றால் பின்வாங்காமல் வெற்றியோ அது தோல்வியோ முழு வீச்சில் 100 சதவீதம் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.  வாழ்கையே  போர்க்களம். போராடாமல் எதுவும் கிடைக்காது.    கனி தானாக பழுத்து விழும் என்று காத்திருந்தால் காலம் கடந்து விழுந்து பயன் இல்லை.  அல்லது விழாமல் அலுகிப் போகலாம்.  வழக்கம் போல் நமது தோழர்கள் உணர்வு பூர்வமாக 100  சதவீதம் போரட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள்.  அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு தோழர்கள் புறநிலை ஊழியர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம்  இருந்தாலும்,  ஆங்காங்கே ஆர்பாட்டத்திலும் பல்வேருவகைகளிலும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.   

                    சிவகங்கை HO(16.10.2012), மானாமதுரை HO(17.10.2012), மற்றும் திருப்பத்தூர் SO(18.10.2012)  முன்பாக கடந்த மூன்று நாட்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் மூன்று சங்கங்களின் தோழர் தோழியர்களும் திரளாக கலந்து  ஆவேசமாக பேசி, கோஷமிட்டனர்.    

                   நமது நியாமான கோரிக்கைகளை வென்றெடுக்க எவ்வித சஞ்சலங்களும் இல்லாமல் போராடும் தோழர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

தோழமையுடன் 

S.செல்வன் 
செயலர், புறநிலை ஊழியர் சங்கம் 
                            

கருத்துகள் இல்லை: