மானாமதுரையில் ஈ.டி. தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By மானாமதுரை
First Published : 18 October 2012 11:20 AM IST
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் தபால் துறை ஈ.டி. ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை தபால் கோட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் பணிபுரிந்துவரும் 550-க்கும் மேற்பட்ட ஈ.டி. தபால் ஊழியர்கள் அகில இந்திய ஈ.டி தபால் ஊழியர்கள் மத்திய சங்கம் அறைகூவலின்படி செவ்வாய்க்கிழமை முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட தபால் நிலையங்ளில் ஈ.டி. ஊழியர்களால் நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தபால் ஊழியர்களுக்கு இணையாக ஈ.டி. ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பை ரூ. 3,500 என உயர்த்த வேண்டும், இறந்த ஜி.டி.எஸ் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை காந்தி சிலை அருகேயுள்ள தலைமை தபால் அலுவலகம் முன் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈ.டி தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை கோட்டத் தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் செல்வன், உதவித் தலைவர் சத்தியமூர்த்தி, பார்த்திபனூர் கிளை பொறுப்பாளர் நாகரெத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் பிரிவு 3-ன் கோட்டச் செயலர் கருப்புச்சாமி, பிரிவு 4-ன் செயலர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஈ.டி ஊழியர்களும், இவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

புறநிலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-தினமணி செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக