அக்டோபர் 15, 2012

GDS ஊழியர்களுக்கான 16.10.2012 முதல் கால வரையரையற்ற வேலைநிறுத்தம்


அகில இந்திய புறநிலை அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
NOTICE: 16
DATE: 13.10.2012
GDS ஊழியர்களுக்கான 16.10.2012 முதல் கால
வரையரையற்ற வேலைநிறுத்தம்
அன்புத்தோழர்களே ! தோழியர்களே.!
                  வணக்கம். அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் S.S. MAHADEVAIYA அவர்களின் அறைகூவலின் படி GDS ஊழியர்களுக்கான இலாக்கா ஊழியர் அந்தஸ்து, BONUS  உச்சவரம்பை நீக்குதல் உள்ளிட்ட  எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 08.10.2012 நமது கூட்டு பொதுக் குழு முடிவின்படியும் அனைத்து GDS ஊழியர்களும் கால வரையரையற்ற வேலைநிறுத்தம் செய்வதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்:
1.        BONUS உச்சவரம்பை இலாக்கா ஊழியர்களுக்கு இணையாக ரூ.3500௦௦/- என்று உயர்த்த வேண்டும்.
2.        GDS ஊழியர்களுக்கு இலாக்கா ஊழியர் அந்தஸ்து – நீதிபதி தல்வார் குழுவின் அடிப்படையில் GDS ஊழியரை இலாக்கா ஊழியராக்கு.
3.        இறந்த GDS  ஊழியர்களின் வாரிசுகளுக்கு இப்போது இருக்கின்ற அளவீடுகளை தளர்த்தி கருணை அடிப்படியில் பணி நியமனம் உடனே செய்ய வேண்டும்.
4.        POSTMAN/GROUD D/MAIL GUARD ஊழியர்களுக்கான புதிய நியமன விதிகளை நீக்கி GDS ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படியில் பணி உயர்வு வழங்க வேண்டும்.
5.        BPMகளுக்கு 20,000துக்கு ஒரு புள்ளி என்பதை உடனடியாக நிறுத்துக.
6.        அனைத்து வகையான GDS  பதவிகளை ஒழிப்பதை நிறுத்தி,   காலியாக உள்ள GDS  பதவிகளை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
7.        GDS  ஊழியர்களின் TRCAயை குறைப்பதற்கு அளித்துள்ள சட்ட விரோதமான ஆணைகளை திரும்பப் பெற வேண்டும்.
8.        மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட (RSDY)  உடனடியாக அமல்படுத்துக.
9.        விகிதாச்சார ஊழியரின் பகுதி/முழு நேர ஊழியரின் ஊதியத்தை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
10.     நான்கு ஆண்டுகளாக CASUAL LABOURகளுக்கு வழங்கப்படாத DAயை உடனடியாக வழங்க வேண்டும்.
     எனவே நமது கோட்டத்தில் வழக்கம் போல் நூறு சதவீதம் வேலை நிறுத்தம் செய்து வெற்றியடைய   செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.


                போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!                    போராட்ட வாழ்த்துகளுடன்!


                                                                                                                    (S. செல்வன்)
                                                                                         மாநில உதவி/கோட்ட செயலாளர்
                                                                                                  சிவகங்கை. CELL NO: 9788451803.

கருத்துகள் இல்லை: