NFPE NFPE NFPE
அகிலஇந்தியஅஞ்சல் ஊழியர்கள் சங்கம்
(P3,P4,GDS)
சிவகங்கை
கோட்டம்,சிவகங்கை-630561
www.nfpesivaganga.blogspot.com

18.10.2012 அன்று ஒரு நாள் மாநிலம்
தழுவிய வேலைநிறுத்தம்
அன்புத்தோழர்களே !
தோழியர்களே.!
வணக்கம். நமது
அஞ்சல் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வரும் நேரத்தில், COMPUTERIZATION/MODERNIZATION என்ற
பெயரில் அஞ்சல் ஊழியர்களை தற்பொழுது கொடுமை(TORTURE) படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுப்புது SERVICE-களையும்
புகுத்தி நாளுக்குநாள் ஊழியர்களை கொடுமை படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது
கடுமையான மின்வெட்டு நேரங்களில் UPS/GENERATOR முறையாக
இயங்கப்படாமல் இருப்பதால் P3 ஊழியர்ககள்
அன்றாட வேலையை முடிப்பது என்பது கேள்விக் குறியாக உள்ளது. TRAINING என்ற பெயரில் PTC சென்றால் அங்கு நடக்கும் கொடுமை அளவிட முடியாதது.
சிரமதானம்(?) என்ற பெயரில் ஊழியர்களை அங்கு கடுமையான கஷ்டத்துக்கு உள்ளாக்கி,
இறுதியில் FNPO வைச்
சார்ந்த ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கடுமையாக கண்டித்து மாநிலம் தழுவிய JCA அமைத்து, அனைத்து சங்கங்களும் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டு, 25.09.2012 அன்று NOTICE
வழங்கப்பட்டது. . கீழ்க்கண்ட கோரிக்கைகளை
உடனடியாக நிறைவேற்றும் படி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வதென, 08.10.2012
அன்று நடந்த நமது கூட்டு பொதுக் குழுக்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்:
1.
MADURAI PTC -இல் மரணம் அடைந்த திரு. ஜெயகுமாரின்
மரணம் பற்றி DIRECTORATE அளவிலான
இலாக்கா பூர்வ விசாரணையையும், CB CID
விசாரணையையும் ,
PTC
DIRECTOR M/s, NIRMALA DEVI மீதும் , DPS, THIRU. V.S. JEYASANKAR மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2.
சுதந்திரமான,
நியாயமான விசாரணை நடைபெறுவதற்காக இருவரையும் தமிழகத்தை விட்டே மாறுதல் செய்ய
வேண்டும். எனவே, தோழர்களே! தோழியர்களே! கொடுமைக்கு முடிவு கட்ட தமிழகம் தழுவிய ஒரு
நாள் வேலை நிறுத்ததில் (P3, P4) அனைவரும் கலந்து கொண்டு வெற்றியடைய
செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
S.செல்வன் G.மீனாட்சிசுந்தரம் M.கருப்புச்சாமி
(GDS மாநில உதவி மண்டல (P4,செயலாளர் ) (P3செயலாளர்)
செயலாளர்)
9788451803 9976793531 9486072824
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக