மார்ச் 27, 2023

மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்


 நாள்: 27.3.2023 

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

வணக்கம்!

      நமது NFPE அஞ்சல் மூன்று மாநில செயலாளரின் அறைகூவல்படி தெலுங்கானா மாநில P3 செயலாளரின் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை  

நமது NFPE பேரியக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக கருத்தில் கொண்டு நமது சிவகங்கை கோட்டத்தில் இந்த அராஜக போக்கை கண்டித்து மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் நடைபெறும். அனைத்து அலுவலங்களிலும் இந்த ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். NDSO அலுவலகங்கள் அருகில் உள்ள HO /LSG அலுவலகங்களில் கலந்துகொள்ளவும். நமது தோழமை சங்கமான AIGDSEU சங்க தோழர்களையும் ஒருங்கிணைத்து. ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். சிவகங்கை கோட்ட அலுவலகம், கலெக்ட்ரேட் SO தோழர், தோழியர்கள் சிவகங்கை HO முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவும்.


தோழமை வாழ்த்துக்களுடன்,


க.மதிவாணன்

செயலாளர் அஞ்சல் மூன்று


P. நடராஜன்

செயலாளர்

அஞ்சல் நான்கு.

மாநில செயலாளரின் அறிக்கை 

 மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 


 நாள்: 27.3.2023 


அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு 

வணக்கம்.


 தெலுங்கானா மாநிலத்தில் P3 மாநில செயலாளர் தோழர் ஷரவண்குமார், அவர்கள் மாநில நிர்வாகத்தால்  கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருவதன் காரணமாக , அவர் மீது நிர்வாகம் இந்த பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய  தாக்குதலை நிர்வாகம்  தொடுத்துள்ளது. இது ஒரு நம் பேரியக்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாகும்.  எனவே இதனை முழுமையாக வெற்றிக்கொள்ள அகில இந்திய சங்கத்தின் அவசர கலந்தாலோசனை  கூட்டம் 24.3.2023 அன்று நடைபெற்றது. இதில் எடுத்த முடிவு படி வரும் திங்கட்கிழமை 27 3 2023 அன்று அகில இந்திய அளவில் அனைத்து கோட்டங்களிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்திட வேண்டும் என NFPE சம்மேளனம் மற்றும் அகில இந்திய சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் நமது மாநிலத்திலும் அனைத்து கோட்ட / கிளைகளிலும் பாதிக்கப்பட்ட அண்டை மாநில செயலாளர் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் போராட்டத்தை நடத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். போராட்டத்தின் முடிவில் தீர்மானம் ஒன்றினை துறை இயக்குனருக்கும் அனுப்பி வைத்திடவும் வேண்டும் . ஆர்ப்பாட்டப் போராட்டத்தை எந்தக் கோட்டமும் விடுதலின்றி கட்டாயம் நடத்தி அதன் புகைப்படங்களை மாநில சங்கத்திற்க்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கின்றோம்.


         A.வீரமணி

      அ.இ.தலைவர்/

  மாநிலச் செயலாளர்

கருத்துகள் இல்லை: