19.11.2020 11:47 AM : கூட்டு பொதுக்குழு மற்றும் நிதியளிப்பு
💥⭐💥⭐💥⭐💥💥
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே.🙏
நேற்று நடந்த (18.11.2020) முச்சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் தோழர். ராமர்-P3 தலைவர், M. குருநாதன் GDS தலைவர் அவர்களின் கூட்டுத் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக காரைக்குடி DN-மறைந்ததோழியர். காயத்ரி GDS அவர்களின் தாயாருக்கு நமது கோட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக 1 லட்சம் பணமாக நமது மூத்த தோழர். கவியொளி..K.செல்வராஜ் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.
அந்த நிகழ்வினில் காரைக்குடி கோட்டத்திலிருந்து தோழர்.முருகன்-செயலர்-GDS , தோழர்.சிவக்குமார் GDS-தலைவர், தோழர்.தர்மலிங்கம் - P4- செயலர், மற்றும் ஸ்ரீதர் - P4 தலைவர் ஆகியோர்களும் கலந்துகொண்டு கோட்ட சங்க செயல்பாட்டின் வரலாற்றினை பெருமைபட பேசினார்கள்.
மேலும் பொதுக்குழுவினில் முன்னால் கோட்ட செயலரும், ஆசிரியருமான தோழர். V. மலைராஜ் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
துவக்கவுரையாக தோழர் - கவியொளிசெம்மல் K.செல்வராஜ் அவர்களும் வழக்கம்போல் நீண்ட நெடியதொரு உரையாற்றினார்.
Inspector of Posts ஆக பதவி உயர்வினை பெற்றதோழர். போற்றி ராஜா-கோட்ட உதவி தலைவர் - P3 அவர்களுக்கு தொழிற்சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து, நினைவு பரிசு வழங்கி கெளரவித்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
கூட்டத்திற்கு தோழர் & தோழியர்கள் 65 பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு, சிறப்பித்தார்கள்.
இறுதியாக தோழர்.திருக்குமார் - P3 பொருளாளர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தினை இனிதே முடித்து வைத்தார்கள்.
தோழமையுடன்.....
K. மதிவாணன் செயலர் - P3 P. நடராஜன். செயலர் - P4 S.செல்வன்.செயலர்.
AlGDSU சிவகங்கை DN.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக