11/27/20, 7:58 PM:
அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!
அஞ்சல் இயக்குனரக உத்தரவுபடி தமிழ் மாநிலத்தில் 2020 ஆண்டிற்க்கான தபால்காரர்/மெயில் கார்டு தேர்வுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நாள்:- 10.01.2021
விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 18.12.2020.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படும் நாள்:- 04.01.2021.
காலிபணியிடங்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
***********************
Department of Posts Postmen &MailGuard Recuritment Rules 2018 "மத்திய அரசிதழில் 20.09.2018 ல் வெளியிடப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளின்படி தபால்காரர்/மெயில் கார்டு தேர்வு நடைபெறும்.
Postmen- 25% காலியிடங்கள் :-
2020 தபால்காரர்/மெயில் கார்டு
காலிபணியிடங்களுக்கு 2020 ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 6 ஆண்டுகள பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம்பணிமூப்பு(Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் நிரப்பபடாத இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
25% காலியிடங்கள் :-
2020 தபால்காரர்/மெயில் கார்டு காலியிடங்களுக்கு 2020 ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுவார்கள். இதில் அந்தந்த அஞ்சல் மற்றும் RMS கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் முறையே மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல மற்றும் RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத தபால்காரர்/மெயில்கார்டு காலியிடங்கள் மாநிலம் அளவில் RMS/அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறையில் பூர்த்தி செய்யப்படாத தபால்காரர்/மெயில் கார்டு காலியிடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
50%காலியிடங்கள் :-
2020 தபால்காரர்/மெயில் கார்டு
காலிபணியிடங்களுக்கு 2020 ஜனவரி மாதம் 1 ந் தேதிய குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் அந்தந்த அஞ்சல்/RMS கோட்டங்களில் பூர்த்தி செய்யபடா தபால்காரர்/மெயில் கார்டு இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல்/RMS கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத
தபால்காரர்/மெயில் கார்டு இடங்கள் மாநில அளவில் RMS/அஞ்சல் கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும்.
1. GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. அந்தந்த மாநில மொழிகளில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். (மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்மொழி குறித்து அஞ்சல் துறை உத்தரவு வெளியிட்டுள்ளது.)
4. கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
5. இருசக்கர வாகன உரிமம் அல்லது இலகுரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்)
10.05.2019 ல்வெளியிடப்பட்ட MTSஊழியர்கள்/GDS ஊழியர்கள் ஆகியோருக்கான தபால்காரர் பதவி தேர்வின் புதிய பாடதிட்டப்படியே தேர்வு நடைபெறும்.
தபால்காரர் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் படி தேர்வானது மூன்று தாள்களை கொண்டதாக அமைகிறது.
தாள்-1 -150 மதிப்பெண்களை கொண்டதாகவும்
தாள்-2- 60 மதிப்பெண்களை கொண்டதாகவும்
தாள்-3 -25 மதிப்பெண்கள் கொண்டதாகவும் அமைகிறது.
PAPER-1 க்கான தேர்வு நேரம்- 90 நிமிடங்களாகும்
PAPER-.-2 க்கான தேர்வு நேரம்- 45நிமிடங்கள்.
PAPER-3 க்கான தேர்வு நேரம்- 15 நிமிடங்கள்.
PAPER-1- மொத்த மதிப்பெண்கள் -150(75 வினாக்கள். ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டு மதிப்பெண்கள்)
100மதிப்பெண்கள் -அஞ்சல்துறை விதிகள் ,உத்தரவுகள்(50 வினாக்கள்)
20மதிப்பெண்கள்-பொது அறிவு(10வினாக்கள்)
20மதிப்பெண்கள் கணிதம்(10 வினாக்கள்)
10 மதிப்பெண்கள்-பகுப்பாய்வு திறன்.(5வினாக்கள்)
PAPER--2- மொத்த மதிப்பெண்கள் -50
15மதிப்பெண்கள்- ஆங்கிலத்திலிருந்து மொழி பாடத்திற்குமொழிபெயர்ப்பு
15 மதிப்பெண்கள்- மொழிப் பாடத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு.
15மதிப்பெண்கள்- கடிதம் எழுதுதல்(கொடுக்கப்பட்ட 3 ல் ஏதேனும் 1)
15 மதிப்பெண்கள்- குறிப்பிட்ட தலைப்பில் 80முதல் 100 வார்த்தைகளில்கட்டுரை (கொடுக்கப்பட்ட 3 ல் ஏதேனும் 1)
எழுத்தர் தேர்வில் தேர்ச்சிபெற ஒவ்வொரும் PAPER I&II லும் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களும்
இதர பிற்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம்
37 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் குறைந்தபட்சம்
33 சதவீத மதிப்பெண்களும்
பெற்றிருக்க வேண்டும்.
PAPER-3 - 25 மதிப்பெண்கள்
கணிணியில் நடத்தப்படும்
விசைப் பலகையில் (KEYBOARD) 15 நிமிடத்தில் 1000 (Key depressions) அழுத்தங்கள் .
PAPER III ல் தேர்ச்சி பெற குறைந்த பட்சம் மதிப்பெண்கள்
UR-75%
OBC/EWS-70%
SC/ST-65%
PAPER-1, 2 ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படும். PAPER 3 தனியாகவும் நடத்தப்படும்.
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மெரிட்(MERIT)அடிப்படையில் தபால்காரர்களாக தேர்வு செய்ய பெறுவார்கள்.
PAPER-2 ,PAPER-3ஆகியவற்றில் குறைந்தபட்சம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
PAPER-2 ,PAPER-3 ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள் மெரிட் அடிப்படையில் தேர்ச்சிக்கு சேர்க்கப்படாது.
தகுதியுள்ள தோழர்கள், தோழியர்கள் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
K Mathivanan P3 Divisional Secretary P.Natarajan P4 Divisional Secretary S Selvan DS AIGDSU
Sivagangai Division
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக