தோழர் எஸ்.சிவசண்முகராஜன் ,துணை அஞ்சலக அதிகாரி சரகணி S.O, 29.01.2012 அன்று இரவு மதுரை அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பு மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோயால் மரணம் அடைந்தார் .அவருக்கு மனைவியும் , எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் . .அவரது தந்தை தோழர் சுப்பிரமணியன். அவர் வேம்பத்தூர் அஞ்சலகத்தில் குருப் டி(வித் டெலிவரி பவர் ) ஆக பணியாற்றிய போது அகால மரணம் அடைந்ததால் தோழர் சிவசண்முக ராஜன் கருணை அடிப்படையில் எழுத்தராக தேர்வு செய்யப்பட்டார் .அதன் பின் 1996 லிருந்து RRR Candidate ஆக சிவகங்கை கோட்டத்தில் பணியாற்றி வந்தார் . பணி யில் அர்ப்பணிப்பு மிக்கவர் . எந்த பணி கொடுத்தாலும் மறுப்போ முணுமுணுப்போ இன்று பணிசெய்யக்கூடியவர் .பல ஆண்டுகள் சிவகங்கையிலும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள தபால் நிலையங்களில் பணி செய்து வந்தார் . எல்லோரிடமும் சுமுக மான அணுகுமுறையை மேற்கொள்பவர் .இரக்கமற்ற அரசின் கொள்கைகளால் கடுமையாக பதிக்கப் பட்டவர்களுள் அவரும் ஒருவர் .பதினைந்து ஆண்டுகள் RRR
Candidate ஆகவே பணிசெய்து வந்த அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டார் . அதுவும் நீதி மன்ற தீர்ப்பினால் தான் கிடைத்தது . RRR Candidate இருக்கும்போதும் சரி , பணி நிரந்தரம் ஆன பின்னும் சரி நமது NFPE இயக்கம் அறைகூவல் விடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர் அவர். அவர் கலந்து கொள்ளாத வேலை நிறுத்தம் ஏதுமில்லை .இறந்தபோது அவருக்கு வயது 40. இந்த குறைந்த வயதில் மரணம் அவரைத் தழுவிவிட்டது .அவரின் மறைவுக்கு நமது சங்கங்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றன . கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கை ஆக்குகின்றன .அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு கட்ட முடியாத பேரிழப்பு . நமது கோட்டச் சங்கம் நல்லதோர் தோழரையும் , சிறந்த பணியாளரையும்
இழந்து தவிக்கிறது
We red salute him. and convey our condolences to his family. We
assure the family we will render all possible help to it.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக