செப்டம்பர் 28, 2012

அன்பிகினிய தோழர்களே 
  01.07.2012  லிருந்து மத்திய அரசு உழியர்களுக்கு  Dearness Allowance 72%  சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது .Dearness Allowance ஐ தமிழில் பஞ்சப்படி என்கிறோம் .அனைத்து பத்திரிக்கைகளும் அவ்வாறே அழைக்கின்றன .
விலைவாசி உயர்வுக்காக வழங்கப்படும் இந்த அலவன்சை  ஏதோ பஞ்ச காலத்தில் வழங்கப்படும் அலவன்ஸ் போல பஞ்சப்படி என இப்போது    அழைத்து வருவது சரியில்லை .அந்தக் காலத்தில் பஞ்சத்தில் தாறுமாறாக ஏறிப் போன விலைவாசி உயர்வுக்காக அரசு உழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்சை பஞ்சப்படி என தமிழில் அழைக்கபட்டிருக்கலாம் அந்தக் காலத்திலே. இன்னும் அச் சொல் மாறவில்லை .  Dearness Allowance ஐ குறிக்க பஞ்சம் இல்லாத இக்காலத்தில்பஞ்சப்படிக்கு பதிலாக புதியதோர் சொல் தேவை  .இப்போதைக்கு இதை 
          .நமக்கு வழங்கப்படும் இந்த  Dearness Allowance உயர்வு  கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசியை முழுமையாக ஈடு கட்டுவதில்லை  என்பது நாம் அறிந்ததே . இம்மாதிரி  சலுகை ஏதுமற்ற  தனியார் அமைப்புகளில்   பணிசெய்யும்  திரட்டப்படாத உழியர்களின்  நிலைமையை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது .
 ஒருகாலத்தில்  ஒவ்வொரு Dearness Allowance  உயர்வுக் காக  நாம்  போராட வேண்டி இருந்தது . இப்போது ஆட்டோமேட்டிக்காக  ஆண்டுக்கு   இருமுறை   Dearness Allowance க்கான உத்தரவை அரசு வெளியிட்டு விடுகிறது . இது சும்மா வரவில்லை .இதற்க்கான  தொடர்  போராட்டங்களை  நடத்திய NFPE உள்ளிட்ட  மத்திய அரசு ஊழியர்களின்  தொழிற்சங்கங்களுக்கு  நாம் நன்றி செலுத்த வேண்டும் .
மதிய அரசு ஊழியர்கள்  ஒவ்வொருவரும்  Dearness Allowance எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது  அவசியம் .
3
மத்திய அரசின் தொழிலார் அமைச்சகம் இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களிலுள்ள 78 நகரங்களில் விலைவாசி குறித்த புள்ளி விபரங்களை சேகரிக்கிறது .
புள்ளி விவரங்கள் எடுக்குபோது கீழ்க்கண்ட வற்றின் விலை உயர்வுகளை கணக்கில் எடுக்கப்  படுகின்றன .

IA -  Food...உணவுப் பொருள்கள் 

IB -  Pan, Supari, Tobacco & Intoxicants.... சுபாரி,புகையிலை போன்ற லாகிரி வஸ்துகள் 

II  -  Fuel and Light... எரிபொருள்  , மின்சாரம் 

III -  Housing ... வீட்டு வாடகை 

IV -  Clothing, Bedding and Footwear... உடை,படுக்கை விரிப்புகள்  காலணி 

V  -  Miscellaneous....இதர செலவீனங்கள் 

Food Group: கீழ்க்கண்ட உணவுப்  பொருட்களின் விலை கணக்கில் எடுக்கப் படும் 

அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ,
 மாமிசம் , மீன் ,முட்டை
பால் ,பால் சார்ந்த பொருட்கள் 
காய்கறி, பழங்கள் 
மசால் சாமான்கள் ,ஊறுகாய் 
 Miscellaneous....இதர செலவீனங்களில் கீழ்க்கண்டவற்றின் விலை கணக்கில் எடுக்கப் படும் .

மரு த்துவ செலவுகள் 
கல்விக்கான செலவுகள் 
பொழுது போக்கு,கேளிக்கை செலவுகள் 

.
விலை வாசிபுள்ளி விபரங்கள் சேகரிக்கப்படும்  78 நகரங்கள் பட்டியல் 
AP 1 GODAVARIKHANI MP 40 BHOPAL
  2 GUNTUR   41 CHHINDWARA
  3 HYDERABAD   42 INDORE
  4 VIJAYAWADA   43 JABALPUR
  5 VISHAKHAPATANAM MHR 44 MUMBAI
  6 WARRANGAL   45 NAGPUR
ASM 7 DOOM DOOMA- TINSUKIA   46 NASIK
  8 GUWAHATI   47 PUNE
  9 LABAC- SILCHAR   48 SHOLAPUR
  10 MARIANI-JORHAT ORI 49 ANGUL-TALCHER
  11 RANGAPARA- TEZPUR   50 ROURKELA
BIH 12 MONGHYR- JAMALPUR PND 51 PONDICHERRY
CHD 13 CHANDIGARH PUN 52 AMRITSAR
CHS 14 BHILAI   53 JALANDHAR
DLH 15 DELHI   54 LUDHIANA
GOA 16 GOA RJN 55 AJMER
GUJ 17 AHMEDABAD   56 BHILWARA
  18 BHAVNAGAR   57 JAIPUR
  19 RAJKOT TN 58 CHENNAI
  20 SURAT   59 COIMBATORE
  21 VADODARA   60 COONOOR
HRY 22 FARIDABAD   61 MADURAI
  23 YAMUNANAGAR   62 SALEM
HP 24 HIMACHAL PRADESH   63 TIRUCHIRAPALLY
J & K 25 SRINAGAR TRP 64 TRIPURA
JRK 26 BOKARO UP 65 AGRA
  27 GIRIDIH   66 GHAZIABAD
  28 JAMSHEDPUR   67 KANPUR
  29 JHARIA   68 LUCKNOW
  30 KODARMA   69 VARANASI
  31 RANCHI HATIA WB 70 ASANSOL
KNT 32 BELGAUM   71 DARJEELING
  33 BENGLURU   72 DURGAPUR
  34 HUBLI DHARWAR   73 HALDIA
  35 MERCARRA   74 HOWRAH
  36 MYSORE   75 JALPAIGURI
KRL 37 ERNAKULAM   76 KOLKATA
  38 MUNDAKAYAM   77 RANIGANJ
  39 QUILON   78 SILIGURI





ஜூன் 2012,  ஜூலை 2012 ஆகிய மாதங்களுக்கு மேற்கண்ட நகரங்களில் எடுக்கப்பட்டு விலைவாசிப் புள்ளிகளும்  அவற்றின் தேசிய சராசரியும் கீழே தரப்பட்டுள்ளது 



கருத்துகள் இல்லை: