28.7.
2009 அன்று GDS ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்தை போக்க தமிழக முதல்வர் தலையிட கோரி, சென்னையின் முக்கிய தெருக்கள் வழியாக கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது.
7000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
நமது சிவகங்கை கோட்டத்திலிருந்து 80 க்கும் மேற்பட்ட தோழர்கள் புறநிலை சங்க செயலர் தோழர் செல்வன் தலைமையில் பேரணியில் பங்கேற்று பேரணியை வெற்றிபெறச் செய்தனர். கலந்துகொண்ட தோழர்களுக்கு சிவகங்கை கோட்டத்தின் மூன்று சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்கள்! பேரணியை அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்
s.s. மகாதேவயா, அகில இந்திய தலைவர் தோழர் M.ராஜாங்கம், மாநில செயலர் தோழர் ஜான் பிரிட்டோ மற்றும் தலைமை ஆலோசகர்கள் தோழர் N.பாலசுப்ரமணியன் மற்றும் தோழர் c.அமிதலிங்கம் ஆகியோர் தலைமையேற்று பேரணியை வழி நடத்தினர். முடிவில் புறநிலை ஊழியர்களுக்கு தாமத படுத்துவதன் மூலம் மறுக்கப்படும் நீதி கோரிய மனு தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்டது . புறநிலை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் தமது கட்சி மத்திய அமைச்சரான திரு ராசா அவர்களிடம் அன்புக் கட்டளை இடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
-----------------------------------------------------------------------------------------

ஈழத் தமிழர்களின் அவலநிலை குறித்த ஜூனியர் விகடனில் வெளியான கவிதைகள் --- நன்றி ஜுனியர் விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக