ஜூலை 24, 2009

பாராட்டுகிறோம் தோழர்களே!காரைக்குடி கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

This is the news item appared in Dinamani dated 22.07.2009 on the programme of Fast conduced by NFPE

Kudos to Coms A.Ramesh P3,Com.R.Rajagopal P4,S.Arumugam GDS,the Divisional Secretaries Of Karaikudi Division and also to their advisor com.K.Alagappan. They are brave enough to arrange full day programme in a successful manner at this time of acute shortage,while other divisions chose to conduct demonstration etc.In Sivaganga Division too we conducted Demo on that date.

இதோ தினமணி செய்தி

""காரைக்குடி, ஜூலை 21: காரைக்குடியில் அகில இந்திய அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத்தினர் (என்எப்பிஇ) காரைக்குடி கோட்ட அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).

சம்பளக்குழு அறிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியம், இலாகா அந்தஸ்து, பெண் ஊழியர்கள் பேறுகால விடுப்பு, இலாகா ஊழியர்களைப் போன்று போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு காரைக்குடி கோட்டத் தலைவர் எஸ். பூமிநாதன் தலைமை வகித்தார். ஜிடிஎஸ் செயலர் எஸ். ஆறுமுகம், பி-3 கோட்டத் தலைவர் வி. தங்கவேலு, செயலர் ஏ. ரமேஷ், பி-4 கோட்டத் தலைவர் எஸ். முத்தையா, செயலர் ஆர். ராஜகோபால், மூன்று சங்கங்களின் ஆலோசகர் கே. அழகப்பன், சூப்பர்வைசர் சங்கச் செயலர் என். பெரியசாமி உள்பட நிர்வாகிகள் பேசினர். ஜூலை 28-ம் தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனுவை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.""

கருத்துகள் இல்லை: