ஜூலை 23, 2009

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

21.07.2009 அன்று சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவல் படி ஈடிக் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக 21.07.2009 அன்று மாலை 6 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .P3 கோட்டத் தலைவர் தோழர் P.ஆதிமூலம்,P4 கோட்டத் தலைவர் தோழர் G.மீனாட்சிசுந்தரம்,GDS கோட்டத் தலைவர் தோழர் R.கண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுத் தலைமை ஏற்றனர்.P3 கோட்டச் செயலர் தோழர் V.மலைராஜ்,P4 கோட்டச் செயலர் தோழர் S.அழகர் ராஜா,GDS கோட்டச் செயலர் தோழர் S.செல்வன் ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்..சிவகங்கை கோட்ட NFPE சங்கங்களின் கன்வீனர் தோழர் S.இராஜேந்திரன் உட்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்ட முடிவில் தோழர் M.குருநாதன் நன்றி கூறினார்.கோரிக்கை முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன 120க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


கருத்துகள் இல்லை: