ஜூலை 13, 2009

தோழர்களே உங்களை வாழ்த்துகிறோம்!

தோழர்களே உங்களை வாழ்த்துகிறோம்!

1) நமது கோட்டச் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் ,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசியச் செயலரும், K.S என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவருமான தோழர் கே.செல்வராஜ் LSG APM (Accounts) ஆக Regular Promotion பெற்று மானாமதுரை தலைமைத் தபால் நிலையதிலேயே இப்போது பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு பெற்ற அவரை வாழ்த்துகிறோம்!.

2) நமது கோட்டத்தில் P4 சங்கத்தின் செயலராக இருந்து பின்னர் மதுரை கோட்டத்திற்கு மாறுதலில் சென்று அவனியாபுரம் அஞ்சலகத்தில்
தபால்காரராக இருந்து வந்த தோழர் C.ஜெய்கணேஷ் எழுத்தராகப் பதவி உயர்வு பெற்று மதுரைக் கோட்டம் T. குன்னத்தூர் SO வில் SPM பணியாற்றி வருகிறார்.அவருக்கு நம் வாழ்த்துக்கள்!

3) நம் கோட்டச் சங்கதின் P4 சங்கப் பொறுப்பாளரும் மானாமதுரை HPO வில் தபால்காராரகப் பணி செய்துவரும் தோழர் A.அம்பேத்கார் எழுத்தராகப் பதவி உயர்வு பெற்று இராமநாதபுரக் கோட்டத்திற்கு
allot செய்யப்பட்டுள்ளார்.அவரைப் பாரட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!!

4)நமது இயக்கதின் மீது அதீத நம்பிக்கை கொண்டவரும்,தனது இயல்பான அன்பாலும் பாசத்தாலும் ,விருந்தோம்பல் பண்பாலும் அனைவரையும் கவர்ந்தவ்ர் தோழர்.N.சாகுல் ஹமீது (SPM SURANAM SO) . அவர் கடந்த 30.06.2009 அன்று பணி ஓய்வு பெற்றார். சூராணம் அஞ்சலக வளாகத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் P3,P4,GDS சங்கங்களின் பொறுப்பாளர்களும் ,பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கோட்டச் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசியச் செயலர் கே.செல்வராஜ் , முன்னாள் P3 சங்க கோட்டச் செயலரும் தற்போது வாடிப்பட்டி LSG அஞ்சலத்தில் SPM ஆக பணி செய்துவரும் பி.சேர்முக பாண்டியன் ஆகியோரும் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . சிறிய ஊர்;நிறைந்த விழா! வாழ்த்துகிறோம் ,பாராட்டுகிறோம் தோழரே உங்களை. எங்களுக்கு எப்போதும் போல் வழிகாட்டுங்கள். சமூகப் பணிகளைத் தொடருங்கள்.

5)நமது இயக்கதின் மீது நம்பிக்கை கொண்டு எல்லாவிதமான போராட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டவரும் ,இளையாங்குடி LSG அஞ்சலத்தின் தபால்காரர் தோழர் பெரியசாமி 30.06.2009 அன்று பணி ஓய்வு பெற்றார். இளையாங்குடி LSG அஞ்சலத்தில்நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் நமது தொழிற் சங்கங்களின் பொறுப்பாளர்களும் ,பொது மக்களும் கலந்து கொண்டு பாராட்டினர்.தோழரே உங்களை நாங்கள் நெஞ்சார வாழ்த்துகிறோம் ; பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: