அக்டோபர் 26, 2008

ஈடி தோழர்களுக்கு போனஸ் கணக்கீட்டு உச்சவரம்பு உயர்த்தப்பட்டது -ஒற்றுமைக்கான வெற்றி இது

ஈடி தோழர்களுக்கு போனஸ் கணக்கீட்டு உச்சவரம்பில் அநீதி இழைக்கப்பட்டவுடன் தோழர் மகாதேவ்வையா தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள் தொடர் உண்ணவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.NFPE ,FNPO சம்மேளனத் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர் . இந்தியா முழுவதும் தபால் ஊழியர்கள்கொதித்தெழுந்த்தனர். ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. வெளிநாடு பயணம் முடித்து திரும்பிய DG (POSTS) திருமதி ராதிகா துரைச்சாமி போராட்டத்தின் வலிமை உணர்ந்து உடனடியாக ஈடி தோழர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு ஆணை பொருந்தும் என உத்தரவிட்டார் .
ஒற்றுமையே வலிமை என உலகிற்கு நாம் பறைசாற்றினோம் . ஈடி சங்க பொதுச்செயலர் தோழர் மகாதேவ்வையா அவர்களுக்கு நமது கோட்ட சங்கங்களின் சார்பில் நன்றி.

கருத்துகள் இல்லை: