ஆகஸ்ட் 20, 2025

...ப.சேர்முக பாண்டியன்- August 20.08.2025

*புதியன விரும்பு*

*புதியன விரும்பு* என்பது மகாகவி பாரதியின் வாக்கு .

புதுபுதிதாய் வருகின்ற தொழிற் நுட்பங்களோடு பயணித்து அவற்றை நம் இயக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் சிவகங்கை உருவானது எப்போதும் முன்னணியில் இருந்தே வந்துள்ளது.

  இணைய தளங்கள் Blogspot என்ற பெயரில் வந்த ஆரம்ப காலத்திலேயே *NFPE Sivaganga யின் இணையத்தளம் https://nfpesivaganga.blogspot.com/* 
உருவானது.
அதற்கு தோழர் கே. மதிவாணன் துணை புரிந்தார். தமிழகத்தில் அஞ்சல் அரங்கில் முதன் முதலாக தமிழில் வந்த இது தான் .

ட்விட்டர் என்ற பெயரில் Microblog வந்த போதும் அதையும் பயன்படுத்தியது நமது இயக்கம்.

WhatsApp இப்போது பல சங்கங்களின் இணையத்தளங்களை காணாமல் ஆக்கி விட்டது. நம் தளமும் சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படவில்லை.

 *இணையத் தளம் நிலையானது. அதிலிருந்து நாம் பதிந்தவற்றை எங்கும் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். அதை தொகுத்தாலே மாநாட்டு அறிக்கையை தயார் செய்திடலாம்.* Rulings செக் பண்ணிக்கொள்ளலாம். 

 *ஆனால் Whatsapp இல் பதிந்தவை மொத்தமாய் காணாமல் போய்விடும்.* 
எழுதியவை அனைத்தும் நீரில் எழுதிய எழுத்துக்களாக ஆகிவிடும்.


எனவே மீண்டும் *நமது சங்கத்தின் இணையத் தளத்தை தொடர்ந்து தினசரி அப்டேட் செய்து அதன் லிங்க்கை உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும்* . நம் இணையதளத்தை தினசரி பார்க்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டுமெனில் அதில் சங்கங்களின் மத்திய மாநில கோட்டச் குறித்த செய்திகள் தினமும் வரவேண்டும். அத்தோடு தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் அரசியல் கொள்கைகளை ஊழியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 

 *சங்கச் செயல்பாடுகளை இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீனப் படுத்துங்கள்.* கூகுள் மீட், ஜூம் மீட் மூலம் எல்லோருடனும் connect ஆக இருக்க வேண்டியது அவசியம். அந்த இணைப்பை பயன்படுத்தி நேரில் சந்தித்து பேச பகுதிக் கூட்டங்கள் நடத்துங்கள். இல்லையெனில் தொழில் நுட்பங்களை வாழ்வின் ஒரு பகுதியாக்கி கொண்ட இன்றைய புதிய தலைமுறை ஊழியர்களிடமிருந்து சங்கங்கள் விலகிப் போய்விடும். *சங்கங்களை நவீனப் படுத்துவதன் மூலமே அவர்களிடம் சங்கத்தலைமை கனெக்ட் ஆக முடியும்.* அதுவே அடுத்த கட்டத்துக்கு சங்கங்களை இட்டுச் செல்லும். இல்லையெனில் பின் தங்கி விடுவோம். 

மூத்த தோழர்கள் இதை உள்வாங்கிக் கொண்டு சங்கத்தை நவீனமயப் படுத்துவதில் புதிதாய் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைமுறை தோழர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் என் வேண்டுகோளாகும்.

 *Kudos to the new generation leadership for taking forward the Associations to the next level.* 


...ப.சேர்முக பாண்டியன்

கருத்துகள் இல்லை: