ஒன்றுபடுவோம்
23.02.2023 ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்வோம்!கோரிக்கைகளை வென்றெடுப்போம்!!!
✊🏼🤝🏼💪🏼✊🏼🤝🏼💪🏼✊🏼🤝🏼
அன்பார்ந்த அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு தோழமைகளே!!..
நமது கோட்ட தோழமை சங்கமான AIGDSU சங்கமானது, தமது மாநில சங்கத்தின் அறைகூவல்படி அதிகாரிகளின் டார்கெட் டார்ச்சர் போக்கை கண்டித்து நாளை 23.02.2023 மாலை 5 மணியளவில் கோட்ட அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
தலமட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை பற்றி அறியாமல், சாத்தியமில்லா இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய நமக்கு அடுத்தடுத்து ஏவுகனைகளாக புதுப்புது டார்கெட் டார்ச்சர் கொடுத்து இயந்திரங்கள் போல் வேலைவாங்கி மன உளைச்சலை கொடுக்கும் நமது மேலதிகாரிகளின் மனிதாபிமான மற்ற ஊழியர் விரோதபோக்கை கண்டித்து அஞ்சல் மூன்று மற்றும் நான்கு தோழர் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்வோம்!
நம் தோழமைகளுடன் கைகோர்ப்போம்.
இது நம் அனைவருக்குமான பிரச்சனை, எனவே அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்!
தோழமை போராட்ட வாழ்த்துக்களுடன்!
🔸K. மதிவாணன்
செயலாளர்
அஞ்சல் மூன்று.
🔸P. நடராஜன்
செயலாளர்
அஞ்சல் நான்கு.
சிவகங்கை கோட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக