மார்ச் 03, 2021

26.11.2020 -All India Strike

 அன்பான தோழர்களே !தோழியர்களே !! வணக்கம்..


1996 க்கு பிறகு அஞ்சல்,RMS பிரிவுகளில் பல்லாயிரக்கணக்கில் PA/SA/PM/MTS பதவிகளை நிரப்பாமல் அரசின் கொள்கை முடிவாக காலியாகவே அஞ்சல் துறை வைத்திருந்தது.. 


 மேற்கண்ட காலி இடங்களை நிரப்பு ! நிரப்பு என்று நாடு முழுவதும் நமது தொழிற்சங்கங்கள் நடத்திய தொடர்ந்த  போராட்டங்கள மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலமாகத்தான் 2007,2010,2011,2015 வருடங்களில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் புதிய ஊழியர்களாக நியமனம் பெற்றது என்பது வரலாறு.,


 பிறகு சென்ற வருடம் தேர்வு எழுதி PM to PA/SA மற்றும் GDS to PA/SA/PM/MG அஞ்சல் துறை மட்டுமல்லாது RMS பிரிவிலும் ஆயிரக்கணக்கான தோழர்கள்  இவ்வருடம் பதவி உயர்வு பெற்று இலாகா அந்தஸ்து பெற்று PA/SA/PM/MG பதவிகளில் பணியில் சேர்ந்ததும் NFPE போராடி பெற்று தந்தது வரலாறு..


மெக்கன்சியின் சிபாரிசு என்று சொல்லி மத்திய அரசு அஞ்சல் துறையில் நாடு முழுவதும் RMS ல் 89 அலுவலகங்கள் (L1,NSH) போதும் என்றும் அஞ்சல் துறையில் 9797 அஞ்சல் அலுவலகங்களை மூடுவதற்கும் முனைப்பு காட்டி நடவடிக்கைகளை எடுத்தபோது அஞ்சல் சேவையை பாதுகாத்திட, ஊழியர்கள் நலன் காத்திட 2012 ஜீலையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு கொடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தி அலுவலகங்கள் மூடலை தடுத்து நிறுத்தி வரலாறு படைத்தது நமது தொழிற்சங்கம்.


 புதிய பென்சன் திட்டம் ரத்து செய் ! ரத்து செய் என்று ஒவ்வொரு வேலை நிறுத்தத்திலும் கோரிக்கையாக வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.


.அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த 2.9.2016 ஒருநாள் வேலைநிறுத்தத்திலும் புதிய பென்சன் திட்டம் ரத்து செய் என்ற கோரிக்கை இருந்தது. 

நாமும் அவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றோம்..

 அதன் பயனாக புதிய பென்சன் திட்டத்தில் இருக்கும் தோழர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தில் இருப்பதைப்போல கிராஜிட்டி பெற்றதும் பணியில் இறந்த ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டப்படி குடும்ப ஓய்வூதியம் பெற்றதும் என்பதும் வரலாற்று சாதனை.


 இருப்பினும NPS ரத்து செய்யப்பட்டு பழைய திட்டம் என்பதே நமக்கு பயன் தரும் என்பதால் NPS ரத்து செய்யும் வரை நமது போராட்டம் தொடர வேண்டும்.


 அதேபோல போனஸ் உச்சவரம்பினை ரத்து செய்திட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடத்துகிறபோது போது நாமும் பங்கேற்றதால் இன்றைக்கு மாத போனஸ் ரூ.7000 பெற்றதும் வரலாறு..


 இவ்வருடம் போனஸ் கொடுக்காமல் மத்திய அரசு மெத்தனம் காட்டியபோதும் காலதாமதம் செய்த போதும் மத்திய அரசு ஊழியர் மகா மகாசம்மேளனம் மற்றும் NFPE சம்மேளனம் போராட்ட அறிவிப்புகளை கொடுத்து சிறப்பாக நாமும் பங்கேற்றதால் இவ்வருடம் போனஸ் பெற்றதும் வரலாறு..


   இன்றைய மத்திய அரசு போராடிப் பெற்ற DA வினை 18 மாதங்கள் முடக்கியது மட்டுமல்லாமல் விலைவாசிப்புள்ளி கணக்கிட அடிப்படையாக 2016 ஆண்டினை எடுத்திருப்பதன் மூலம் நாம் பெறும் DA ல் பெரும் இழப்பு ஏற்பட உள்ளது..

 

தொழிலாளர் நலச் சட்டங்கள் நமக்கு விரோதமாக திருத்தப்பட்டுள்ளன.


நமது பணிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது..

 தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் நடத்தப்படாமலே உள்ளது.


அரசு துறைகள்/பொது துறைகளில் தனியார் மயம் தீவிரப்படுத்தப் படுகின்றன..அரசு துறைகள் இருப்பதால்தான் நம்மில் பலர் MBC,SC/ST இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றோம்..

இங்கே தனியார் மயமானால்  இட ஒதுக்கீடு அமுல்படுத்துவார்களா ? 


 MACP பெறுவதற்கு Very Good பெஞ்ச் மார்க் என்பது நீக்கப்பட வேண்டும்..


 பல மூத்த GDS ஊழியர்களின்  வெயிட்டேஜ் உடபட இலாகா ஊழியர்களின் பல கோரிக்கைகள் அரசின் கவனம் ஈர்த்திட போராட வேண்டி உள்ளது..


 எனவே தோழர்களே! தியாகங்கள் பல செய்து போராடிப் பெற்ற சலுகைகளை நாம் நினைவில் கொண்டு அவைகளை தக்க வைத்திடவும்


 நாம் நமது காலத்தில்


 அரசு துறைகளை பாதுகாத்திட!


 புதிய பென்சன் திட்டம் ரத்து செய்திட !!


நமது அனைத்து கோரிக்கைகள் மத்திய அரசின் கவனம் ஈர்த்திட வரும் நவமபர்

26 வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது அனைவரின் தலையாய கடமையாகும்.

K Mathivanan P3 Divisional Secretary  P.Natarajan  P4 Divisional Secretary  S Selvan DS AIGDSU
                                                              Sivagangai Postal Division 

கருத்துகள் இல்லை: