ஜூன் 14, 2020

தோழர்.T.பொன்னையா அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா


 தோழர்.T.பொன்னையா GDSBPM  T.புதுப்பட்டி  BO ,திருப்பத்தூர் அவர்களுக்கு  பணி ஓய்வு பாராட்டுவிழா 













               தோழர்.T.பொன்னையா அவர்களுக்கு  பணி ஓய்வு பாராட்டல்.

சிவகங்கை கோட்டம் - திருப்பத்தூர் so T. புதுப்பட்டி BO வில் GDSBPM ஆக கடந்த 40 வருடங்களாக பணிபுரிந்து வரும் அருமை தோழர்.T.பொன்னையா AIGDSU செயற்குழு உறுப்பினர் அவர்கள்  (05-06-2020) பணி நிறைவு பெற்றார் .அவருக்கு திருப்பத்தூர் அஞ்சலகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது . அதில் AIGDSU  கோட்டச் செயலர் தோழர்  S.செல்வன் உட்பட  பி 3 பி 4 AIGDSU  பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு அவரைகவுரவித்து பேசினார் .

தோழரின் பணி ஓய்வு காலங்கள் முழுதும் சீரும் சிறப்புமாக அமைந்திட தொழிற்சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றன🙏


K.மதிவாணன் 
செயலர் P3
P.நடராஜன்
செயலர் P4
S. செல்வன்
செயலர் AIGDSU
சிவகங்கை🙏💐


கா.செல்வராஜ் முன்னாள் கோட்டச்செயலர் அஞ்சல் மூன்று அவர்களது வாழ்த்து செய்தி 

அருமைத் தோழர் பொன்னையா அவர்களின் தந்தையார் திரு. தமிழ் மணி அவர்கள் திருப்பத்தூர் அஞ்சலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி  ஓய்வு பெற்ற மூத்த தோழர். அவர் பத்திரிகைகளுக்கும் துறை சார்ந்த கட்டுரை எழுதும் வழக்கமுடையவர்.

நமது PLI logo கைசின்னத்தையும் இரட்டை இலையையும் குறிப்பது போல் உள்ளது என  அவர் எழுதிய கட்டுரை நினைவில் வருகிறது.

அவரது புதல்வர் தோழர் பொன்னையா இன்று பணிநிறைவு எய்துகிறார். தனது உடல்நலம் பேனி குடும்பத்தினருடன் நீடு வாழ வாழ்த்துக்கள். 
💐💐💐💐💐💐💐
கா.செல்வராஜ் 
முன்னாள் கோட்டச்செயலர் அஞ்சல் மூன்று

கருத்துகள் இல்லை: