சிவகங்கை ஈடிச் சங்க கோட்டச் செயலர் தோழர் எஸ்.செல்வன் மாண்புமிகு நிதி அமைச்சருக்கு போனஸ் குறித்து அனுப்பிய மனு பற்றிய தினமணி செய்தி
தீபாவளி போனஸ் ரூ 3500 வழங்க தபால் துறை ஈ.டி ஊழியர்கள் கோரிக்கை
By மானாமதுரை
First Published : 12 November 2012 10:36 AM IST
தபால்துறையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஈ.டி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 3500 வழங்க மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஈ.டி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் மாநில உதவிச் செயலர் மற்றும் சிவகங்கை கோட்டச் செயலர் செல்வன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தபால் துறையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தபால் பட்டுவாடா, முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் பணிகளை இவர்கள் செய்கின்றனர்.
எங்களுக்கு சம்பளம் என்று வழங்காமல் அலவன்ஸ் என குறைந்தபட்சமாக ரூ.1200-ம் அதிகபட்சமாக ரூ.3500-ம் வழங்கப்படுகிறது. பணி நேரம் 8 மணி நேரத்துக்கு மேல் வழங்கப்படுகிறது. ஈ.டி ஊழியர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அரசு ஊழியர் என்ற அந்தஸ்து இல்லாமலேயே பணி செய்து வருகின்றனர்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் மட்டும் 3500-க்கும் மேற்பட்ட ஈ.டி ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
விழாக் காலங்களில் ஆண்டுக்கு ரூ.3500 போனசாக வழங்கப்பட்டு வந்தது. அது மறுக்கப்பட்டு தற்போது ரூ.2500 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளிப் பண்டிகை வருவதால் முன்புபோல ஈ.டி தபால் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.3500 வழங்க மத்திய நிதிமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.டி தபால் ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி 12.11.2012

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக