ஜனவரி 20, 2010

மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்ற நமது மத்திய சங்க செயற்குழுவின் முடிவுப்படி, GDS ஊழியர்களுக்கு கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி


1. இலாக்கா ஊழியர் அந்தஸ்து, மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ வசதி, வீட்டு வாடகைப்படி போன்றவற்றில் அரசின் மீதான போக்கை கண்டித்து

2. GDS -BPM தோழர்களின் வேலைப்பளுவை கணக்கிடுவதில் அலுவலகத்தில் கையாளப்படும் தொகையில் ரூ. 1 க்கு 1 புள்ளி என்பதை ரூ. 20000 க்கு 1 புள்ளி என இலாக்கா மிகவும் கடுமையக்கியத்தை கண்டித்து,

3. GDSMD , MC பதவிகளில் Foot beat -ஐ சைக்கிள் பீட் ஆக மாற்றி உத்தரவு போடுவதை கண்டித்து

4 . போனஸ் உச்ச வரம்பை மாற்றியதை கண்டித்து,


20.1.2010 அன்று  சிவகங்கை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.   சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்  தோழர்  குணசேகரன் MLA (CPI ) அவர்கள் பழரசம் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.  அவர் தம் பேச்சினிடையே "இடதுசாரிகள் தொழிலாளர்களின் பட்டினி போராட்டத்தை தொடங்கி வைப்பவர்கள் அல்ல. முடித்து வைப்பவர்கள் எனவே நான் இந்த போராட்டத்தின் முடிவில்  கலந்துகொள்வது பொருத்தமாக இருக்கிறது"  என்று கூறியது குறிப்பிடும் படி இருந்தது. 

முன்னதாக கொடியேற்றத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கருத்துகள் இல்லை: