ஜனவரி 07, 2010

தோழர் .டி. ஞானையா வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்!

தோழர் .டி. ஞானையா  வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்!

                      ‘Comrade  D.G’ என  நம் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிற NFPTE அமைப்பின் முன்னாள் மாபொதுச்செயலர்  தோழர் டி.ஞானையா இன்று      ( 07.01.2010 ) 90 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது “நானும் ஓடினேன்” என்ற நூலைப் படித்து அவரின் வாழ்க்கை வரலாற்றை  நமது கோட்டச் சங்க உறுப்பினர்கள் பலரும் முழுமையாக அறிந்திருக்கிறோம்.
                                  
                                   " பேசாப் பொருளைப்  பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு இணங்க யாரும் பேசத் துணியாத விஷயங்களிலும் தன்னுடைய கருத்தை முன்வைப்பதில் எவ்வித தயக்கமும் இல்லாதவர்.
                                     
                                       தெளிந்த அரசியல் சிந்தனை,எதையும் கூர்மையாக ஆய்வு செய்யும் அறிவாற்றல், அபாரமான நினைவாற்றல், கனமான விஷயங்களையும் எளிமையாக சொல்லும் எழுத்தாற்றல், சக தோழர்கள் மீது அளவற்ற அன்பு காட்டும் பண்பாளர்  என அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நம்  இந்திய தேசத்தைப் பீடித்திருக்கும் மதவாதம், தீவிரவாதம் ,உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்து இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவி.தமிழிழும் ஆங்கிலத்திலும் எண்ணிலடங்கா புத்தகங்களை எழுதியவர்.எழுதிக்கொண்டு இருப்பவர். இனியும் எழுதப் போகிறவர்.


                                  அவரை வாழ்க பல்லாண்டு என நமது சிவகங்கை கோட்டச் சங்கங்கள் வாழ்த்துகின்றன.



கருத்துகள் இல்லை: