கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வாழ்க்கை பற்றிய ஆவணப் படத்திற்கு தேசிய விருது
GDS Employees ( Gramin Dak Sevaks) என்ற கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வாழ்க்கை பற்றி Ms தீபிகா பரத்வாஜ் ( Deepika Bharatwaj) என்ற பத்திரிக்கையாளர் எடுத்த ஆவணப்படம் தேசிய அளவிலான விருது பெற்றது . Centre for Civil Society என்ற அமைப்பு டில்லியில் 2009 ஆகஸ்ட் 20 முதல் 30 வரை நடத்திய ஆவணப்படத் திருவிழாவில் ( Jeevika Asia Livelihood Documentary Festival ) இவ்விருது வழங்கப்பட்டது . அரசு ஊழியர்கள் என அழைக்கப் பட்டும் சலுகைகள் ஏதுமின்றி பணியாற்றுகின்ற கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அன்றாடம் எதிர் கொள்கின்ற சிக்கல்கள் சவால்கள் குறித்து இப்படம் பேசுகிறது . வேலையில் அன்றாடம் அவர்கள் படும் அவலங்களைப் புட்டுவைகிறது .நல்வாழ்வு பெற்றிட அவர்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களை அது விவரிக்கிறது .இந்த அமைப்பின் நோக்கமெல்லாம் கிராமிய,நகர்புற ஏழை எளிய மக்களின் துன்ப துயரங்களை ஆவணப் படங்கள் மூலமாக பொதுமக்கள் . பத்திரிகைகள் ,மீடியாக்கள் நீதிமன்றங்கள் ,நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு உணர்த்துவதே ஆகும் . இம்முறை அவர்கள் தேர்ந்தெடுத்தது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பற்றியாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக