சம்மேளன அறைகூவலின் 10 அம்ச கோரிக்கைகள்:
தோழமைகளுக்கு வணக்கம்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவல்படி சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (16/12/2025) மாலை 5.30 மணியளவில், மத்திய அரசு, நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கோட்ட முச்சங்கங்களின் பேரியக்கங்கள் (NFPE - P3/NFPE - P4 மற்றும் AIG DSU) முடிவெடுத்திருக்கின்றன.
எனவே தோழமைகள் அனைவருமே அலை கடலென திரண்டு, ஆர்ப்பாட்ட நிகழ்வினில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கிய கோரிக்கைகள்:
8வது ஊதியக் குழுவில் குறிப்பிட்ட பணிகளின் வரம்பினை மாற்றி, ஊழியர் சங்க (NCJ CM) கருத்துக்களின் பரிந்துரைகளையும் இணைத்து, ஊதிய மறு சீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்
அடிப்படை ஊதியத்துடன் 50% இணைத்து 01/01/2026 முதல் 20% த்தினை இடைக்கால நிவாரணமாக (IR) வழங்கப்பட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கான பரிந்துரையில் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது.
கோவிட் தொற்றுநோயின் போது முடக்கப்பட்ட 18 மாத DA/DR தவணைகளை அனைவருக்குமே வழங்கப்பட வேண்டும்.
இறந்த ஊழியர் வாரிசுக்கு பணி நியமனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட 5% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
வணிகம் என்ற பெயரில் GDS ஊழியர் அனைவரையும், தினம், தினம் அலைக்கழிப்பு செய்து மன உலைச்சலுக்கு ஆட்படுத்தும் கொடுமையான செயலினை நிறுத்திட வேண்டும்.
அவுட்சோர்சிங் / கார்ப்பரேட்மயமாக்கலை நிறுத்தி, காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
பறிக்கப்பட்ட அங்கீகார சங்கங்களுக்கு மீண்டும், அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
AI GDSU ன் பொதுச் செயலருக்கு மீண்டும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
GDS ஊழியர்க்கு, ஊதியக்குழு அமைத்து, இலாக்கா ஊழியர் அந்தஸ்து வழங்க பரிந்துரைக்க வேண்டும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்...
P மாதவன்
செயலர் P3
P. நடராஜன்
செயலர் P4
A. ரெத்தின பாண்டியன்,
செயலர் AI GD SU
சிவகங்கை DN
✨👍✨👍✨👍✨👍✨
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக