மார்ச் 03, 2021

நவம்பர் 26 , 2020 - மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

 *நவம்பர் 26* மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்  வெல்லட்டும் வெல்லட்டும்


      அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் வணக்கம்.  


             🚩மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம் மற்றும் நம்முடைய மத்திய சங்கங்களின் அறைகூவலை ஏற்று சிவகங்கை கோட்ட ஊழியர்கள்  இந்த மாபெரும்  வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றியடைய செய்யவேண்டும்.


       🚩எந்த ஒரு போராட்டம் என்றாலும் சிவகங்கை கோட்டம்  முன்மாதிரி கோட்டமாக இருக்கும் என்பதில் மாற்று   கருத்தில்லை.


*ஏன் இந்த போராட்டம்? எதற்காக இந்த வேலை நிறுத்தம்?*

 

      🚩2014 லிருந்து பொறுப்பேற்றுள்ள இந்த மத்திய அரசு அதிதீவிர தனியார்மய கொள்கைகளால் நாம்  இது வரை போராடி வெற்றி பெற்ற அனைத்து உரிமைகளையும் ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து பறித்துக் கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.


      🚩 நமது மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் படி மூத்த மத்திய அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ள படி அனைத்து சலுகைகளும் முழுமையாக இன்று வரை வழங்கப்படவில்லை என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.


     🚩இந்த மத்திய அரசு நம்மை ஒவ்வொரு விஷயத்திலும் ஏமாற்றிக் கொண்டே  இருக்கின்றது. மேலும் இந்த மத்திய அரசு தொழிற்சங்க உரிமைகளையும்  ஒவ்வொன்றாக பறிப்பதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.


      🚩 இந்த வேலைகளையெல்லாம்  யாருக்காக செய்து  கொண்டிருக்கிறது  மத்திய அரசு ஊழியர்களுக்காகவா? இல்லை இந்திய 

நாட்டின் மக்கள்  நலனுக்காகவா? யாருக்காக? முற்றிலும் பண முதலைகள் நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுகாக  இதனால் நாட்டிற்கு என்ன லாபம் அல்லது மக்களுக்கு என்ன லாபம்.


         🚩அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அனைத்து அரசுத்துறையையும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நஷ்டம் என்று கூறுகிறது இந்த மத்திய அரசு. தனியார் பணமுதலைகள் நடத்தும்  கம்பெனிகளுக்கு அனைத்து உரிமைகளையும்  கொடுத்துவிட்டால் அரசுத் துறைக்கு நஷ்டம் ஏற்படாமல் என்ன செய்யும்.

    

         🚩மத்தியரசு நம்மை கேட்கலாம் அரசு ஊழியர்களும் தனியார் கம்பெனிகளின் ஊழியர்கள் போல் வேலை பார்த்தால் அரசு துறையில் லாபம் ஈட்டலாம் என்று  அதேவேளையில் மத்தியரசிலுள்ள அனைத்துத் துறைகளிலும் அனைத்துவிதமான நெட்வொர்க் வசதியையும், அடிப்படை வசதியையும்  முழுமையாக அரசுத் துறைகளுக்கு வழங்குகிறதா? இல்லை.

       

          🚩அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் தனியார் துறைக்கு முதலில் கொடுத்துவிடுகிறது. அரசுத் துறைக்கு வழங்காமல் பிறகு தனியார் கம்பெனி போல் வேலையை பாருங்கள் என்றால் எப்படி பார்ப்பது?


        🚩உதாரணத்திற்கு BSNL க்கு இன்றுவரை 4G வழங்கவில்லை ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது. அதற்கு அடுத்தபடியாக விரைவில் 5G யும் வழங்கவிருக்கிறது  என்றும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.


    🚩BSNL க்கு நஷ்டம் என்று கூறி ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல  வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தி அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றி விட்டது இப்படி செய்துவிட்டு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது என்று இந்த  நடுவண் அரசு சொல்வது நியாயமா?


        🚩அதேபோல் ரயில்வே துறையில்  நாடு  முழுவதும் ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் இயக்குவதற்கு  தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு இந்த  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 


      🚩இனிவரும் காலங்களில் ஏழை, நடுத்தர மக்கள் புகைவண்டி (ரயில்) பயணத்தையும் மறந்து விடக் கூடிய சூழ்நிலை மிக விரைவில் ஏற்படப் போகிறது என்பது திண்ணம்.


       🚩இந்த மத்திய அரசு மூச்சுக்கு, மூச்சு ஏழைகளுக்கான அரசு என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறுகிறது. 


     🚩ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு அனைத்து விதமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்து விட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள்.


      🚩 ரயில்வே துறையையும் நஷ்டம் என்று கூறினால் நஷ்டமாகாமல் என்ன செய்யும் . மத்திய அரசு ஊழியர்களையும், மக்களையும் இப்படி ஏமாற்றி கொண்டிருக்கிறது இந்த மத்திய அரசு.


         🚩எந்த அளவுக்கு மத்திய அரசு ஊழியர்களின் பணத்தை தனியார்  கம்பெனிகளுக்கு தாரை வார்க்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் .


       🚩வருகின்ற 31 மார்ச்  2021 வரை அறிவித்துள்ள LTC Special Package  மற்றும்  festival package  இது ஆளும் மத்திய அரசு அறிவித்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பரிசாம்.(இதனுடைய விளக்கம் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் தெரியும் என நம்புகிறோம்) எப்படி ஒரு  ஏமாற்று வேலை.


        🚩 மத்திய அரசு ஊழியர்கள்  பணிக்கு வர இயலாத நாட்களுக்கு  பாதிக்கப்பட்ட  பகுதியில் குடியிருந்தவர்களுக்கு மட்டும் பணிக்கு வராத ஊழியர்களை Duty யாக எடுத்துக் கொள்ளலாம் என்று வெகு நாளைக்குப் பிறகு இந்த மத்திய அரசு  கூறியுள்ளது.


       🚩 ஆனால் மாநில அரசு அதிகாரிகளிடம் (competent authority) கடிதம் வாங்கி வர வேண்டும். ஏன்?


      🚩இந்த அரசாங்கத்துக்கு தெரியாதா? எந்தெந்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக  இருந்தது என்று  அதைக் குறிப்பிட்டு  கொண்டு வரக்கூடிய விண்ணப்பங்களில் முகவரியை பார்த்துக் கொண்டு அந்தந்த கோட்டத்தில் உள்ள அதிகாரிகளே அதற்கு ஆணை பிறப்பிக்கலாமே 

இதற்கு ஒவ்வொரு ஊழியரும் மாநில அரசுத்துறையிடம் சென்று கடிதம் வாங்கி வர வேண்டுமா? அது சாதாரண விஷயமா? அதை உடனே அவர்கள் வழங்கி விடுவார்களா? என்ன கொடுமை இது இப்படி பல விதங்களில் ஏமாற்றும் இந்த மத்திய அரசை பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.


     🚩அடுத்து நம்முடைய அஞ்சல் துறையில் PLI/RPLI  மேலும் PARCEL DIRECTORATE, SPEED POST ARTICLES & MO,s acceptance of all SB deposits அனைத்து பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக common service centre (CSC) யிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

         🚩அதேபோல் 2014 பிறகு மத்திய அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை எந்தவித பணப்பயனும் இல்லாமலும் ஊழியர்களின் ஓய்வூதியம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. 


     🚩அதே போல் 100 ஆண்டுகால போராட்ட 

 💪💪 வரலாறு கொண்ட அரசு ஊழியர்கள்/ ஓய்வூதியர்களின் DA/DR ஜூலை 2021 வரை முடக்கப்பட்டு ஏறக்குறைய *37,000*/-- கோடி ரூபாயை ஏற்கனவே அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.


           🚩இந்த மத்திய அரசு DA     கணக்கிடும் முறையை மாற்றியதால் மேலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை  மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து மத்திய அரசு பறிக்கப்பட உள்ளது.

----------------------------------------

    *அஞ்சல் துறை ஊழியர்களின் கோரிக்கைகள்*

--------------------------------------

1. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்


2. அரசு ஊழியர்களை எந்தவித விசாரணையுமின்றி வீட்டுக்கு அனுப்பும் FR 56 J பிரிவை நீக்குதல்


3. ஊழியர் விரோத சட்டங்களை உடனே திரும்பப் பெறுதல்


4. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக விடுவிக்க  வேண்டும்.


5.

     i:கிராமப்புற அஞ்சலக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். 


     ii. கிராமப்புற ஊழியர்களுக்கு மருத்துவ குழு காப்பீட்டுத்தொகை உடனே வழங்கிட வேண்டும்.

   

   iii.  புறநிலை ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை  உடனே அமல்படுத்த வேண்டும்.


6. ஏழை எளிய மக்களை பாதிக்கும் தபால்துறை, ரயில்வே துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை அறவே கைவிட வேண்டும்.


7. பணி காலத்தில் அரசு ஊழியர்கள் 

இறந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு எந்தவித உச்சவரம்புமின்றி கருணை அடிப்படையில் உடனே பணி வழங்க வேண்டும்.


8. குறிப்பாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


9.காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.


10. பணிகாலத்தில் COVID -19  காரணமாக இறந்த ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம் உடனே வழங்கிட வேண்டும்‌ மேலும் அவருடைய வாரிசுகளுக்கு உடனடியாக வேலையும் வழங்கிட வேண்டும்




      🚩மத்திய அரசை எதிர்த்து நடக்கும் இந்த மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தபால்துறை, வருமானவரித் துறை, பாதுகாப்புத் துறை சாஸ்திரிபவன்/ ராஜாஜி பவன் ஊழியர்கள் ID&RD ஊழியர்கள் கல்பாக்க அணுமின் நிலைய ஊழியர்கள் மத்திய கலால் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் சேர்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.


     🚩ஒன்றுபட்டு போராடாமல் இதுவரை எந்த கோரிக்கையையும்  பெற்றுவிடவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு கோரிக்கையையும் போராட்டம் மூலமாகவே பெற்றுள்ளோம் என்பது


  *NFPE சங்கத்தின் போராட்ட வரலாறு💪* 


     *போராட்டமே ஊழியர்களின் துயரோட்டும்*


 என்பதை மனதில் உறுதி கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு 100 சதவீதம்  வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


💪"தோற்றதில்லை தோற்றதில்லை"


 "தொழிற்சங்கம்

 தோற்றதில்லை"💪


     *🚩அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி களைய முடியாது*🚩

  என்று நம்முடைய தலைவர் 

*பாபு தாராபாதா*

 பாதையில் போராடுவோம் தோழர்களே! தோழியர்களே!! வெற்றி பெறுவோம் தோழர்களே! தோழியர்களே!!

*வெல்லட்டும் வெல்லட்டும்*

 நாடு தழுவிய மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

 *வெல்லட்டும் வெல்லட்டும்*

*போராட்ட வாழ்த்துக்களுடன்*

                                                                       கோட்டச் செயலர்கள் , சிவகங்கை கோட்டம் 

          

கருத்துகள் இல்லை: