நவம்பர் 18, 2020

கூட்டுப்பொதுக்குழு கூட்டம் -காரைக்குடி தோழியர் காயத்ரி குடும்ப நிதியளிப்பு -18.11.2020

                            

                                     நமது கோட்டத்தின் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கங்களின் கூட்டுபொதுக்துக்குழு கூட்டம் 18.11.2020 அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் மூன்று தலைவர் தோழர் ராமர், AIGDSU தலைவர் தோழர் குருநாதன் ஆகியோர் தலைமையில்   நடைபெற்றது.   26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்த கோரிக்கைகளின் அம்சங்கள் குறித்து மூன்று செயலர்களும்  விளக்க உரையாற்றினர்.


                               நமது முன்னாள் அஞ்சல் மூன்று  கோட்ட செயலரும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் அமைப்பு  செயலாளருமான தோழர் K.S அவர்களும், முன்னாள் அஞ்சல் மூன்று செயலர் தோழர் V.மலைராஜ் அவர்களும் கலந்துகொண்டு போராட்ட  வாழ்த்துறை வழங்கினர்.

                               தொடர்ந்து மறைந்த  காரைக்குடி  தோழியர் காயத்ரி அவர்களின் குடும்பத்தினருக்கு நமது கோட்ட சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று  தோழர் தோழியர்கள், ஓய்வு பெற்ற,பணிமாறுதலில் சென்ற தோழர் தோழியர்கள் வழங்கிய நிதி ரூபாய் ஒரு லட்சம்  நமது கோட்ட சங்கங்களின் சார்பில்  வழங்கப்பட்டது. தோழியர் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் காரைக்குடி AIGDSU செயலாளர் தோழர் முருகன், தலைவர் தோழர் சிவா மற்றும் அஞ்சல் நான்கு தோழர் தர்மலிங்கம் ஆகியோர் சிவகங்கை கோட்ட சங்கங்களின் இச்செயலை பாராட்டி பேசினர்.


                                நிகழ்வின் ஒருபகுதியாக நமது அஞ்சல்  மூன்று சங்கத்தின்  அமைப்பு செயலாளரும்   திருப்புவனம் SO-வின் எழுத்தருமாகிய  தோழர் B.போற்றிராஜா  அவர்களுக்கு ஆய்வாளராக தேர்வுபெற்று திருவாடனை உபகோட்ட அதிகாரியாக பணி ஏற்பதை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுபரிசு வழங்கப்பட்டது.


                        26.11.2020 வேலை நிறுத்தத்தை நமது சிவகங்கை கோட்டத்தின் பாரம்பரிய ஒற்றுமை தொடரும் விதமாக 100 சதவீதம் வெற்றிகரமாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                                இறுதியாக அஞ்சல் மூன்று பொருளாளர் தோழர் S.திருக்குமார் நன்றியுரை வழங்கினார்.  சங்கங்கள் சிறப்பாக செயல்பட நிதி அவசியம், அதற்க்கு மனமுவந்து  போனஸ் நன்கொடை வழங்கிய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் நன்றி, குறிப்பாக அஞ்சல் மூன்று தோழர், தோழியர்கள்  100 சதவீதம் நன்கொடை வழங்கி தங்கள் பங்களிப்பை உறுதி  செய்துள்ளார்கள் இது மகிழ்ச்சியான செய்தி என கூறினார்.

                                        

கருத்துகள் இல்லை: