மார்ச் 16, 2020



               

  அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
                                         (குரூப் "C" ஊழியர்கள்)
              சிவகங்கை கோட்டம், சிவகங்கை - 630 561
                        
                               ஈராண்டறிக்கை
( உறுப்பினர்களுக்கு மட்டும் - பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது)
இடம் : சிவகங்கை                                                                                              நாள் : 08.03.2020
அன்பிற்கினிய தோழர்களே! தோழியர்களே!!
                    Report of a Trade Union organization conveys its views and critical analysis of national and international matters that concern it. It discusses problems, issues and grievances of the members and seeks remedy. It reminisces the past, understands the present and plans the future.
அனைவருக்கும்  வணக்கம்.  NFPE என்ற  வரலாற்று  பாரம்பரியம்  மிக்க பேரியக்கத்தின்  இணைப்பு  சங்கம்  அகில  இந்திய  அஞ்சல்  உழியர்  சங்கத்தின் குரூப் "C"    ஊழியர்கள்   சிவகங்கை   கோட்டக்    கிளையின்   27- து   மாநாட்டின் ஈராண்டு அறிக்கையினை  உங்கள்  முன்னால்  ஒப்புதலுக்கு  வைப்பதில்  பேருவகை கொள்கிறேன்.
அஞ்சலி
தமிழக முன்னாள் முதல்வர் தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி, சாகித்ய  அகாடமி  விருது பெற்ற  தமிழ்  எழுத்தாளர்  பிரபஞ்சன்,  புதிய  தடம்  பதித்த  தமிழ் சினிமா     இயக்குனர்   மகேந்திரன்,   முன்னாள்   தலைமைத்   தேர்தல்   அதிகாரி T.N .சேஷன்,      பிரபல    சினிமா    நடிகை    ஸ்ரீதேவி,    முன்னாள்  பிரதம  மந்திரி அடல் பிகாரி வாஜ்பாயி,  முன்னாள்  பாராளுமன்ற  சபாநாயகர் சோம்நாத்  சாட்டர்ஜி, , AITUC  யின் தலைவரும்   பிரபல   தொழிற்சங்க   வாதியும்    சிறந்த   பாராளுமன்ற உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தா, பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜேட்லி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்; ஐக்கிய நாட்டு சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான்; இந்த நூற்றாண்டின் பிரபல விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய  அனைவரின்  மறைவுக்கு  இம்மாநாடு கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறது.
தமிழகத்தின்    துயரமான    கஜா    புயலில்    உயிரிழந்த    மக்களுக்கும்; கொரோனா  வைரஸ்  நோயால்  மரணமடைந்த  எல்லா  தேசத்தவர்க்கும்  டில்லியில் நடைபெற்ற குடியுரிமை   திருத்த   சட்டத்திற்கு எதிரான   போராட்டத்தில்  உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும் இம்மாநாடு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
 நமது    கோட்டத்தில்     பணிபுரிந்தவரும்    நல்ல  பல  புதிய    சிந்தனைகள் உடையவரும்,எல்லோரிடமும் இனிக்க  பேசி  அன்பை  பெற்ற  தோழர்  ஜெயசீலன் சேவியர்,  சங்க பிடிப்புள்ள தோழர்கள், ஆரோக்கிய சகாயராஜ், அழகர்ராஜா ஆகியோர் மறைவுக்கும் தனது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது இம்மாநாடு.
கடந்த  கோட்ட   மாநாடு
நமது  சங்கத்தின்  கடந்த  கோட்ட   மாநாடு  26.01.2018  அன்று  சிவகங்கையில் நடைபெற்றது .கீழ்க்கண்ட  நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
                     நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்                          : தோழர். M. கருப்புச்சாமி, Accountant, சிவகங்கை DO.
உதவி தலைவர்கள்  : தோழர். S. இராஜேந்திரன், PA, மானாமதுரை HO.
                  தோழர். K. மூக்கையா,  PM Grade III,  மானாமதுரை HO.
                                             தோழியர். S. தர்மாம்பாள், PM Grade I, காளையார்கோவில்
                  தோழர். V.  ராமர், LSG SPM,  திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட்
செயலர்           :               தோழர். G.  நாகலிங்கம், PA, சிவகங்கை HO.
உதவி செயலர்கள் : தோழர். S. திருக்குமார், SPM, சருகணி SO
                  தோழியர். S.  மீனாள், OA, சிவகங்கை DO
                  தோழர். V.  கருப்பையா, LSG SPM,  போஸ் நகர்
                                                தோழர். R.  கண்ணன், SPM,  நாட்டரசன்கோட்டை
நிதி செயலர்         : தோழர். P. சசிக்குமார், SPM, கண்ணார்தெரு SO.

உதவி நிதி செயலர் :          தோழர். K. மதிவாணன்- I, PA,  இளையான்குடி SO.
அமைப்புச் செயலர்கள் :  தோழர். R.  கிருஷ்ணமூர்த்தி, OA,  சிவகங்கை DO
                       தோழர். G. ராஜேஸ்குமார், PA, சிவகங்கை HO.
                       தோழர். M. பிரவீன்குமார், DSM, சிவகங்கை
.தணிக்கையாளர்   :            .தோழர். S.  தவம், PA,  திருப்புவனம் SO
மாநில சங்க மாநாடு
நமது  தமிழ் மாநில  39-வது  சங்கத்தின்  மாநாடு  கடந்த  பெப்ரவரி  9  முதல்11   வரை   கோயம்புத்தூரில்   வெகு   சிறப்பாக   நடைபெற்றது.   நமது   கோட்டச்  சங்கத்தின்   பிரதிநிதிகளாக   தோழர்   கே.   மதிவாணன்,   தோழர். எஸ். சரவணன் ஆகியோர்   கலந்து   கொண்டனர்.   பார்வையாளராக   தோழர்   ஆர். ராஜா   கலந்து கொணடார். இவர்களுடன் நமது  கோட்டச் சங்கத்தின் முன்னாள் செயலர்கள் தோழர்கள் கே. செல்வராஜ், எஸ்.இராஜேந்திரன், பி. சேர்முக பாண்டியன்   ஆகியோரும்   கலந்து கொண்டனர்.
நமது   பிரதிநிதி   தோழர். கே. மதிவாணன்   அமைப்பு   நிலை   விவாதத்தில் கலந்து  கொண்டு    பேசிய  போது    நமது    கோட்டத்தில்     உள்ள    40  %      ஆள் பற்றாக்குறையை  சுட்டிக்காட்டி அதனால்  உறுப்பினர்கள்  பட்டுவரும்  சொல்லொணா  துயரங்களையும்    கஷ்டங்களையும் விவரித்து    பேசினார்.    அதற்கான     தீர்வை விரைவில் பெற்றுத் தருமாறு  மாநில சங்கத்தை வேண்டினார்.
முன்னாள்   மாநில   அமைப்புச்   செயலர்  தோழர்  கே. செல்வராஜ்   பேசும்   போது மாநிலச்   சங்கத்தின்   பாரம்பரியத்தை   நினைவு   கூர்ந்து   பல்வேறு   சம்பவங்களை வரிசைப்   படுத்தினார்.      மாநாட்டில்      ஏகமனதாக      கீழ்க்கண்ட      தோழர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்    .
தோழர். M. செல்வகிருஷ்ணன்  :               மாநிலத் தலைவர்
தோழர். A. வீரமணி                            :               மாநிலச் செயலர்
தோழர். A. கேசவன்                          :                நிதிச் செயலர்
தோழர். R. கிருஷ்ணமூர்த்தி        :               தென்மண்டலச் செயலர்
புதிதாகத்   தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள்   அனைவருக்கும் இம்மாநாடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது
 கடந்த  ஈராண்டுகளில்  மாநிலச்  சங்கத்தின்  கவனத்திற்கு  நாம்  கொண்டு சென்ற  பிரச்சனைகளில்    தீர்வு காண  அனைத்து  முயற்சிகளையும்  மேற்க்கொண்ட  மாநிலச் செயலர்  தோழர். A. வீரமணி,   முன்னாள் தென்மண்டலச் செயலர் தோழர். சுப்பிரமணியன் ஆகியோருக்கு இம்மாநாடு நன்றி கூறுகிறது.
அகில இந்திய மாநாடு
நமது   அகில   இந்திய   சங்கத்தின்   32 வது   மாநாடு   ஹைதராபாத்தில் 20.10.2019    முதல்    23.10.2019    வரை    நடைபெற்றது.    அதில்  கீழ்க்கண்ட      நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,  
               தோழர் . N. சுப்பிரமணியன் (தமிழகம்)     - தலைவர்
               தோழர். R,N. பரஷார் (.பி)                           - பொதுச் செயலாளர்
                                     தோழர். ல்விந்தர் சிங் (டில்லி)          - நிதிச் செயலர்
நமது  மாநிலச்  செயலர்  தோழர்  A. வீரமணி  உதவிப் பொதுச் செயலராகவும், நீலகிரி   கோட்ட சங்கத்தின்   செயலர்   தோழர்   A.M.  சேகர்   அமைப்புச்   செயலராகவும் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   தமிழகத்திலிருந்து   தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள   அகில   இந்திய   பொறுப்பாளர்களுக்கு   இம்மாநாடு   வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
மஹிளா   கமிட்டியின்   தலைவராக   கீதா   பட்டாச்சார்ஜியும், R.பிரேமா (கேரளா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்    . மஹிளா கமிட்டி உறுப்பினர் பட்டியலில்  தமிழகத்தைச்  சேர்ந்த  தோழியர்கள்  A, வளர்மதி,  M. ரேணுகா,  J.   சாந்தி ஆகியோர்  தேர்வு  செய்யப்பட்டனர்    .  இம்மாநாடு  அவர்கள்  அனைவருக்கும்  தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறது.

NFPE யின் சம்மேளன கவுன்சில்
NFPEயின்  11  வது  சம்மேளனக்    கவுன்சில்    கூட்டம்    உத்தரப்பிரதேசம் மதுராவில்      கடந்த         24.11.2019   முதல்   27.11.2019   வரை   நடைபெற்றது. கீழ்க்கண்டவர்கள்     நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தோழர். P.V  இராஜேந்திரன் (கேரளா)   -      தலைவர்    
 தோழர். R.N. பரஷர் (.பி)             - பொதுச் செயலர்
 தோழர். அஷ்வினிகுமார் (டில்லி)       - நிதிச்செயலர்
 தமிழகத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தைச் சேர்ந்த தோழர் A. வீரன் சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் இம்மாநாடு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் பேரமைப்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமாகும். நமது NFPE சம்மேளனம் அதில் பிரதானப் பங்கு வகித்து வருகிறது.
மகா சம்மேளனத்தின்  26வது        தேசிய  மாநாடு  கடந்த        7.2.2020  முதல் 8.2.2020 வரை நாக்பூரில் நடைபெற்றது. கீழ்க்கண்ட      தோழர்கள் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்    .
தோழர். ரவீந்திரன் B. நாயர் (ITEF) தலைவர், தோழர். R,N. பரஷார் (NFPE) பொதுச் செயலர், தமிழகத்தைச் சேர்ந்த தோழர் R.B. சுரேஷ் (Postal Accounts,, சென்னை) அமைப்புச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கும், அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் இம்மாநாடு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
கோட்ட  நிர்வாகத்துடன்  உறவு
கடந்த        ஈராண்டு  காலத்தில்  திருமதி.  ஆனந்தி  அவர்களும்;  அதன்  பின்னர் இப்போது    திரு.  D ஜெயச்சந்திரன்    அவர்களும்    கோட்டக்     கண்காணிப்பாளராக சிவகங்கை  கோட்டத்தில்    பணிசெய்து  வருகின்றனர்.  திருமதி.  ஆனந்தி  அவர்கள் ஊழியர்களின்    பிரச்சனைகளை    மிக    கனிவோடு    கவனித்து    தீர்த்து  வந்தார். இப்போதைய    கண்கணிப்பாளார்    திரு.  D.  ஜெயச்சந்திரன்    நமது    சங்கங்கள் கொண்டு  செல்லும்  பிரச்சனைகளை   உடனுக்குடன்    தீர்த்து  வைத்து  வருகிறார். ஆள்  பற்றாக்குறையால்  நமது  ஊழியர்களின்  கஷ்டங்களை    புரிந்து  கொண்டு செயல்பட்டு   வருகிறார்.   அவருக்கு   இம்மாநாடு   நன்றி   கூறுகிறது. 
"ஊழியர் நலனில்   அக்கறை   கொண்ட   அதிகாரிகளை   நம்   கோட்டச்  சங்கம்   பாராட்டத்  தயங்கியதில்லை;               அவர்களுக்கு             முழு  ஒத்துழைப்பு கொடுக்கவும் கோட்டச்  சங்கம்                   தயாராக இருக்கிறது" என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
P4, AIGDSU    கோட்டச்   சங்கங்களுடன்     உறவு
நமது  கோட்டத்தில்   அஞ்சல்  மூன்று,  அஞ்சல்  நான்கு  AIGDSU      கோட்டச்  சங்கங்கள்    ஒருங்கிணைந்து    செயல்பட்டு    ஊழியங்களின்    நலன்    காத்து வருகின்றன.   இதனால் தான்   மற்ற   கோட்டங்களில்        காண   இயலாத   ஒற்றுமை இங்கு  காணக்  கிடைக்கிறது .  கோட்டத்தின்   எல்லா  ஊழியர்களும்  கேடர்     பேதமின்றி பரஸ்பரம்    பழகுவதும்,    அன்பு    பாராட்டுவதும்    குடும்ப    உறவாக    எண்ணி ஒருவருக்கொருவர்  நேசிப்பதும்  சாத்தியமானது  இந்த  ஒற்றுமையால்  தான்.  நமது கோட்டத்தின் பாரம்பர்ய  பண்பாடும்  அதுதான்.  இந்த  ஒற்றுமையை  சாத்தியமாக்கிய அஞ்சல்  மூன்று,  அஞ்சல் நான்கு;  AIGDSU     சங்கங்களின்  கோட்டச்   செயலர்கள், சங்கப்   பொறுப்பாளர்கள்   உறுப்பினர்கள்   அனைவருக்கும்   இம்மாநாடு   நன்றி செலுத்துகிறது.
ஆள் பற்றாக்குறையும் உறுப்பினர்களின் துயரமும்
நமது  சங்கத்தைப் பொறுத்தவரை        மிகப்  பெரிய பிரத்யேக     பிரச்சனை ஆள்பற்றாக்குறைதான்.
இன்றைய ஊழியர் நிலவரம்
 Category
Sanctioned Strength
Actual Working Strength
PA Cadre
82
63
LSG Cadre
41
16
Total
123
79
123  பேருக்கு  10 %   லீவ்  ரிசர்வ்  எழுத்தர்  12 பேர்  இருக்க  வேண்டும். ஆக மொத்தம்  135 பேர்  பணியாற்றிட  வேண்டிய  இடத்தில்   இப்போது  79 பேர் மட்டுமே  பணியாற்றி வருகிறோம்.  எனவே  42 %   எழுத்தர்  பற்றாக்குறையில்  இந்தக்  கோட்டம்  இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான்  நமது  உறுப்பினர்கள்  சொல்லொணா வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறோம்.
ஆள் பற்றாக்குறை  பிரச்சனையை  நமது  கோட்டச்  சங்கம்  மாநில  சங்கத்தின்
மூலம்   மண்டல/ மாநில  நிர்வாகத்திற்கு  தொடர்ச்சியாக  கொண்டு  சென்றுள்ளது.கோட்ட     நிர்வாகத்தின்    கவனத்திற்கு    கொண்டு    சென்று    அதன்மூலம்    உயர் அதிகாரிகளுக்கு பிரச்சனையின்   தீவிரத்தை உணர வைத்திருக்கிறோம்.
நமது  உறுப்பினர்கள்  ஆத்திர  அவசரத்திற்கும்  நல்லது  கெட்டதுக்கும்  கூட விடுப்பு     எடுக்க     முடியவில்லை.     இதனால்     குடும்பத்திலும்     உறவுகளிலும் நெருக்கடிக்கு  ஆளாகி வருகிறோம்.  உறுப்பினர்  ஒருவருக்கு  லீவு  பெற்றுத் தருவது மிக  நெருக்கடியான  பிரச்சனையாக  உள்ளது.    SPM   ஒருவருக்கு  லீவு  Sanction  செய்த பின்னர்  அவருக்கு  ஆள் அனுப்ப முடியாத  சூழல்  வேறொரு  அஞ்சலத்தில் ஏற்படும்போது  உறுப்பினர்கள்  மத்தியில்  மனத்தாங்கலும்  வருத்தமும்  மேலிடுகிறது. ஆள்   பற்றாக்குறை     என்ற     பிரச்சனை     பல     பரிமாணங்களில்     நமது உறுப்பினர்களுக்கு  துன்பம்  தருகிறது.  இதனால்  ஏற்படும்  கோபத்தை  காண்பிக்க வேண்டிய  இடம் உயர்மட்ட   அதிகாரிகள்  மீதும்,  அவர்கள்  அமல்படுத்தும்  மத்திய அரசின்   கொள்கைகள்   மீதும்   தான்   என்பதை   உறுப்பினர்கள்   அனைவரும் உணர்ந்து  கொள்ள  வேண்டியது  அவசியமான  ஒன்று.  நமது  தொழிற்சங்கங்கள் இப்பிரச்சனையை    தீர்க்க  தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுத்து  வருவதை உறுப்பினர்கள்  புரிந்து  கொண்டு  இப்பிரச்சனையில்    தீர்வு காண கோட்டச்சங்கத்தின்  அனைத்து  நடவடிக்கைகளுக்கும்        ஆதரவு   தெரிவிக்க வேண்டும்   என   மாநாடு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறது.
சமீபத்தில்   நடைபெற்ற   தேர்வில்   GDS     ஊழியர்களிலிருந்து   6 பேரும்; தபால்காரரிலிருந்து  ஒருவரும்  மொத்தம் 7 பேர்  எழுத்தராகி  உள்ளனர்.  இதுபோல GDS   லிருந்து  PA வாக  ஒரு  "Bulk Recruitment "   செய்யப்பட்டது  வரலாறு  காணாத வெற்றியாகும்.  இதை  தனது  தொடர்   முயற்சியால்  சாத்தியமாக்கிய  அஞ்சல்  மூன்று மாநிலச் சங்கத்திற்கு இம்மாநாடு நன்றி கூறுகிறது.
இந்த  7 பேர்  நியமனம்  ஆள் பற்றாக்குறை  என்ற  பெரும்  பிரச்சனையை மயிலிறகாக   வருடுகிறது.   அவ்வளவுதான் .  பிரச்சனையை   முழுமையாகத்     தீர்க்க காலியிடங்கள் அனைத்தையும்  நிரப்ப  உரிய  "Proposal " களை  மண்டல / மாநில நிர்வாகத்திற்கு அனுப்புமாறு கோட்ட  நிர்வாகத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.சிவகங்கை  கோட்டத்தின்  இப்பெரும்  பிரச்சனையை 
தீர்க்க  மாநிலச் சங்கம் உரிய    நடவடிக்கைகளை            மேற்கொள்ளுமாறும் இம்மாநாடு வேண்டுகோள்  விடுக்கிறது.
 சிவகங்கை  கலெக்ட்ரேட்  அஞ்சலகத்தில்  நம் உறுப்பினர்கள்  படும் அவதிகள்
சிவகங்கை  மாவட்ட    ஆட்சியர்  வளாகத்தில்  உள்ள மிகப்பெரிய  அஞ்சலகம் "சிவகங்கை கலெக்ட்ரேட்" ஆகும்.
சிவகங்கை   HO வாக   1.4.2009 ல்   தகுதி   உயர்வு   செய்யப்பட்டது .  சிவகங்கை HO ஆனதால்  அதன்  கீழுள்ள  8  BO-க்களை  அருகிலுள்ள  "No Delivery  SO"  க்களில் இணைத்தனர்.  பிறகு "No Delivery  SO" க்களில் BO  இருக்கக்  கூடாது  என்று  சொல்லி, சிவகங்கை    நகரிலுள்ள    இன்னொரு    "Delivery Post Office "  ஆன      சிவகங்கை கலெக்ட்ரேட் க்கு   அவற்றை   இணைத்தனர்.   ஏற்கனவே   அதில்   12 BO  க்கள் இருந்தால்  இணைக்கப்பட்ட   8  BO  க்களையும்  சேர்த்து  சிவகங்கை கலெக்ட்ரேட் SO  கீழுள்ள  BOக்கள் மொத்தம் 20 ஆகிவிட்டன.
  ஆட்சியர்      அலுவலக      வளாகத்தில்      இருப்பதால்      கடுமையான வேலைப்பளுவில்  சிக்கித்  தவித்த  ஊழியர்களுக்கு சிவகங்கை  கலெக்ட்ரேட்  SO   வின்    பணிச்சுமை தாங்க   முடியாத   அளவிற்கு   அதிகமாகி விட்டது.   நமது   சங்கத்தின்   பெண்கள் அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்  தோழியர் S. தர்மாம்பாள்  அஞ்சலக  அதிகாரியாக இருந்தபோதும்   அதன்பின்னர்   வந்த   தோழர்   முனி கணேஷ் இருந்த போதும் ஊழியர்களோடு     ஊழியராக     ஒரே  குடும்பமாய்  சேர்ந்து     பணியாற்றியதால் வேலைப்பளுவின்    அழுத்தம்    தெரியாமல்    ஒருங்கிணைந்து    பணிசெய்தனர். அவர்கள்   மாறிச்   சென்றபின்   அலுவலக   நிலைமை   மாறிவிட்டது.   CSI  /  RICT  அமலாக்கம்  போன்றவை  அங்கு  வேலைப்பளுவையும்  அங்கு  பணியாற்றும்  நம் உறுப்பினர்களின்      மன      அழுத்தத்தையும்      அதிகப்படுத்தியது.      எனவே இணைக்கப்பட்ட    8  BO    க்களை   பிரித்து   அருகிலுள்ள   SO    க்களுக்கு   மாற்ற வேண்டும்  என்ற  நமது  கோரிக்கையை  மாநிலச்சங்கம்  மண்டல நிர்வாகத்திடம் தொடர்ந்து     பேச்சுவார்த்தை    நடத்திக்    கொண்டிருக்கிறது.    சமீபத்தில்    நடந்த மீட்டிங்கில் புதிதாக ஒரு SO  உருவாக்கி அதில் இந்த BO  க்களை இணைக்க உரிய ஆய்வும்    பரிசீலனையும்    செய்யப்படும்    என்று    மண்டல  நிர்வாகம் மாநிலத் சங்கத்திடம் உறுதியளித்துள்ளது.  நிர்வாகம்  கடைபிடிக்கும்  மெத்தனப்  போக்கால் இந்தப்  பிரச்சனை  இன்னும்    தீர்க்கப்படாமல்  இழுத்தடித்துக் கொண்டே  போகிறது. எனவே   கோட்ட    நிர்வாகம்   இந்தப்   பிரச்சனையின்   தீவிரத்தன்மை குறித்து   உயர் அதிகாரிகளுக்கு   தெரிவித்து   இதை   விரைவில்     தீர்க்க   உதவுமாறு   இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.   
 அதுவரை     சிவகங்கை     கலெக்ட்ரேட்     அஞ்சலகத்திற்கு கூடுதலாக  "Man Power " தர  கோட்ட   நிர்வாகத்தை  கேட்டுக்கொள்கிறோம்.  சொல்ல முடியாத  அளவுக்கு  துயரங்களை  அனுபவித்து  வருகின்ற  கலெக்ட்ரேட்  அஞ்சலக ஊழியர்களின்     துன்பம்     தணிக்குமாறு     கோட்ட      நிர்வாகத்தை     இம்மாநாடு வேண்டுகிறது.
நமது  கோட்டத்தில்   பயணப்படி  பில்களும் குறைவான  நிதி  ஒதுக்கீடும்
நமது  கோட்டத்தில்   42 %    பதவிகள்  காலியாக  உள்ளதால்  Deputation -ல் செல்வதும்,    அதற்கான    பயணப்படி    கிளைம்    செய்யும்    பில்களும்    முன்பு எப்போதையும்  விட இப்போது அதிகமாகி  உள்ளன.  ஆனால்  பயணப்படி  பில்களை பாஸ்செய்ய      அதற்கேற்ற      அளவு      நிதி      ஒதுக்கீடு      செய்யப்படாததால் நூற்றுக்கணக்கான  பில்கள்  கிடப்பில்    போடப்பட்டிருந்தன.  நாம்  இப்பிரச்சனையை கோட்ட   நிர்வாகத்திடமும் மண்டல / மாநில  சங்கங்களுக்கும்  எடுத்துக் சென்றோம். கூடுதல்  நிதி  ஒதுக்கீடு  செய்ய  தொடர்ந்து    வலியுறுத்தி வந்தோம்.  அதன்  விளைவாக கிடப்பில்     கிடந்த   பில்களில்   பெரும்பாலானவை   அவ்வப்போது   கூடுதல்   நிதி  கிடைக்கப்பெற்று  பாஸ்  செய்யப்பட்டன.  ஆனாலும்  இன்னும்  நமது  உறுப்பினர்கள் சிலரின்  பில்கள்  "Fund " இல்லை  என்ற  காரணத்தால்  கிடப்பிலுள்ளன  .  எனவே கூடுதலாக    நிதிபெற்று    இந்த    நிதியாண்டு    2019-2020க்குள்    கிடப்பிலுள்ள   அனைத்து  பில்களையும் பாஸ் செய்து  தருமாறு  கோட்ட   நிர்வாகத்தை  இம்மாநாடு வேண்டுகிறது.
தொழிலாளர் நல சட்டங்களும் அவற்றை சீர்குலைக்கும்  மத்திய அரசும்:
பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் இந்திய தொழிலாளி வர்க்கம் ரத்தம்  சிந்திப்  போராடிப்  பெற்ற  உரிமைகளும்,  சலுகைகளும் ஏராளம்.    அவை தொழிலாளர் நலம் காக்கும் சட்டங்களாக அமையப் பெற்றுள்ளன.  அம்மாதிரி உள்ள 44 சட்டங்களில் குறிப்பிடத்தக்கவை  
1. Industrial Disputes Act 1927 (தொழிற் தகராறு சட்டம் )
2. Trade Union Act 1927 ( தொழிற் சங்க சட்டம்)
3. Minimum Wages Act 1948 ( குறைந்த பட்ச கூலி சட்டம் )
4. Bonus Payment Act 1965 ( போனஸ் பட்டுவாடா   சட்டம்)
இந்த சட்டங்களே  தொழிலாளர்களின் பாதுகாப்பு  அரணாக விளங்குகின்றன. "Ease of doing Business" என்ற பெயரில் அதாவது "முதலாளிகள் தொழில் செய்வதை எளிமையாக்க" தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தொழிற்சங்க உரிமைகளையும் காவு தர முடிவு செய்த மத்திய அரசுதொழிலாளர்கள்  நல சீர்திருத்தம்” என்று சொல்லி 44 Acts (சட்டங்களை) 4 லேபர் கோடுகளாக ( Labour Codes) சுருக்கி விட்டது அவை.
Labour Code on  Industrial Relations Code, 2019
Labour Code on Wages, 2019
 Labour Code on Social Security, 2019
Labour Code on Occupational Safety, Health and Working Conditions Code, 2019

தொழிற்சாலைகள்    உள்ளிட்ட  பெரு  நிறுவனங்களில்  பணிசெய்யும்  75 % உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட சங்கங்களுக்கு மட்டுமே இனி தொழிற்சங்க அங்கீகாரம்  தரப்படும்.  அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும்  தொழிலாளர்களின் 75% ஆதரவு பெற்ற     அங்கீகாரம்  பெற்ற     தொழிற்சங்கமாக     செயல்படுவது  இனி  எந்த அமைப்பிற்கும் சாத்தியமில்லை.  தொழில் செய்வதை  எளிமையாக்குகிறோம்  என்று சொல்லும்    அரசின்    தீய  நோக்கமே    தொழிலாளர்களின்  பாதுகாப்பை  சீர்கேடு செய்வதும்      தொழிற்சங்கங்களை   முடக்குவதும்      தான்      என்பதை   நாம் உணரவேண்டும்.  இதுபோன்ற  தொழிற் சங்க சீர்கேடு  சட்டங்களை மத்திய  மாநில அரசு   ஊழியருக்கும் நீட்டித்தால்   அரசு   ஊழியர்   நலம் காக்க   தொழிற் சங்கம் நடத்துவதே      மிகச்  சிக்கலாகி  விடும்.    எனவே,    இதுகாறும்    போராடிப்  பெற்ற உரிமைகளைப் பறிக்கும்  Labour Code களை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அரசின் தனியார் மயக் கொள்கைகளும் தபால்துறையும்
ரூ. 1.05 லட்சம்   கோடி   மதிப்பிலான     பொதுத்துறை   நிறுவனங்களின் சொத்துக்களை   விற்க மத்திய அரசு  திட்டமிட்டு   செயல்பட்டு   வருகிறது.   நஷ்டத்தில் இயங்கும்   பொதுத்துறை   நிறுவனங்களின்   பங்குகளையே   விற்கிறோம்.   என்று சொல்லி   வந்த   மத்திய   அரசு   இப்போது   லாபத்தில்   இயங்கிய வருகின்றவற்றை    விற்கும் திட்டவரைவை தனது பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் (BPCL), ஏர் இந்தியா, MTNL,BSNL,NTPC போன்றவற்றின்   பங்குகளை   விற்பதற்கு   எல்லாவித   செயல்களிலும்   ஈடுபட்டு வருகிறது.   நிதி   ஆயோக்கின்   ஆணைப்படி   22,500/-  கோடி  திட்டத்தில்   100 ரூட்களில்  150  தனியார்  ரயில்  விட ஏலம்  கோரியுள்ளது.  தனியார் மயம்  என்ற பெயரில்     ஆறு     ஏர்போர்ட்களை     அதானி     குழுமத்தின்     வசம்     அரசு ஒப்படைத்துள்ளது.
இந்த   சூழலில்   LIC  யின்   பங்குகளை   விற்கப்போவதாய்   நிதி   அமைச்சர் அறிவித்துள்ளார்.  பாதுகாப்பான  வாழ்வுக்கு LIC  பாலிசி  எடு  என்பார்கள்.  இப்போது LICக்கே    பாலிஸி    எடுக்க    வேண்டும்    போலிருக்கிறதே    என்று    சோஷியல் மீடியாக்களில்  நெட்டிஷன்கள்  கலாய்த்ததை  நாம்  பார்த்தோம்.  அந்த  அளவுக்கு LIC    பங்கு  விற்பனை  பேசு பொருளாகி  உள்ளது.  மக்களின்  நம்பிக்கை  பெற்ற, கஸ்டமர்  சேவையில்  சிறந்து  விளங்குகின்ற  கோடிக்கணக்கில்  லாபம்  ஈட்டி தருகின்ற  LIC      தனியார்    மயமாக்குவதுதன்    நோக்கமே    தனியார்    இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு   சாதகமான   சூழலை   உருவாக்கத்தான்.  LIC  யின்   தற்போதைய மதிப்பு 30 லட்சம் கோடியாகும்.
பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கோவில்கள். நாட்டின் வளர்ச்சியில் அவை பெரும் பங்காற்றி வருகின்றன. "செருப்புக்கு  தோல்  வேண்டியே கொல்வரோ செல்வக் குழந்தையினை" என்பான் மகாகவி  பாரதி.  அதைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது.
"LIC     தானே   நமக்கில்லையே"   என்று   நாம்   வாளாவிருக்க  முடியாது. தபால்துறை    செய்து    வருகின்ற    அடிப்படை    தபால்    சேவைகள்    தவிர    பிற சேவைகளான  சேமிப்பு  வங்கி,  PLI/RPLI,   போன்வற்றை  தனிக்  கார்ப்பரேசனாக்கி பின்னர்   தனியாருக்கு   விற்கப்படும்   பேராபத்து   அரசின்   கொள்கை   முடிவாக வரலாம்.  எனவே  அரசின்  தனியார் மயக்கொள்கைகளை  எதிர்த்து  போராடுவதன்  மூலமே அவற்றை தடுக்க முடியும் என்று உறுப்பினர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோருக்கு கவலைதரும் தேசிய அரசியல்
நாம்  அரசு  ஊழியராக  இருந்தாலும்  பொதுமக்களின்  அங்கமே  என்பதை
ஒவ்வொருவரும்     உணர     வேண்டும்.     பொதுமக்களைப்     பாதிக்கின்ற எந்த ஒருபிரச்சனையாக   இருந்தாலும்   அது நம்மையும்   பாதிக்கும்.   அரசியலே   நம் தலையெழுத்தையும்   நாட்டில்   நடக்கும்   எல்லாவற்றையும்   நிர்ணயம்   செய்வதால் நம்மைச் சுற்றி  நடப்பவற்றை கூடுதல் கவனத்துடன்   உள்வாங்கிக்  கொண்டு  புரிந்து கொள்வது அவசியமானது.
இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு  வந்தது  மத்திய  அரசு.  வாக்குறுதிக்கு  மாறாக   அரசின்  பண மதிப்பிழப்பு, GST     போன்றவற்றால்   லட்சக்கணக்கான   தொழில்   யூனிட்கள்   முடக்குப்பட்டன. இதனால் ஏறத்தாழ 6 கோடி பேர் வரை வேலை இழந்து அவதிப்படுகின்றனர் என்று புள்ளி   விபரங்கள்   தெரிவிக்கின்றன.   சமூக நலத்திட்டங்களுக்கு  நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்துவிட்டது.    சமவேலைக்கு    சம  ஊதியம்    என்ற    உச்ச  நீதிமன்ற தீர்ப்புகளை  அமல்  செய்வதற்கு பதிலாக  குறைந்த  பட்ச  மாத  ஊதியம்  ரூ. 4628/- என்று  அரசு அறிவித்துள்ளது. விலைவாசி  கட்டுபாடின்றி உயர்ந்து வருவதை அரசு அறிவிக்கும்  விலைவாசி  புள்ளிகள்  மூலமே  அறியலாம்.  சான்று  வேறு  எதுவும் தேவையில்லை.
புதிய கல்விக் கொள்கைகள் மூலம் பணக்காரர்கள் மட்டுமே  உயர்கல்வி  கற்க முடியும் என்ற நிலையை அரசு உருவாகியுள்ளது.
NDA-II   அரசு  மே  2019-ல்   மீண்டும் ஆட்சிக்கு  வந்தபின்னர்  மதரீதியான பிரச்சனைகளை  மட்டும்  முன்னெடுத்துச்  செல்லும்  வித்தியாசத்தை  அனைவராலும் உணர முடிகிறது.   இந்திய   தேசம்   பல மதங்களின்   பிறப்பிடம்.   வேற்றுமையில் ஒற்றுமை  என்பதே  நம்  முன்னோர்கள்  இந்திய  மக்களுக்கு  கற்றுத்தந்த  கோட்பாடு. அதை சிதைக்கும் வண்ணம் அரசும் ஆட்சியாளர்களும் நடந்து கொள்வது மிகவும் கவலையளிக்கிறது.    அரசியல்    அமைப்புச்    சட்டம்    வழங்கியுள்ள    உரிமைகள் அப்பட்டமாக    மறுக்கப்படுகின்றன.   அரசின்   கொள்கைகளுக்கு   எதிராகக்   குரல் கொடுப்பவர்கள்;   பேசுபவர்கள்;   எழுதுபவர்கள்;   போராடுபவர்கள்   அனைவரையும் "தேசத்துரோகிகள்"  என்ற  ஒற்றைச் சொல்லாலே  வாயடைக்கும்     அபாயகரமான போக்கை  ஆட்சியாளர்கள்  கடைப்பிடிக்கின்றனர்.  இப்போது  "தேசத் துரோகிகளைச் சுட்டுத்  தள்ளுங்கள்"  (Shoot the Traitors )  என்ற  கோஷம்  முழக்கப்பட்டு  வருகிறது. இவை அனைத்தும்   ஜனநாயகத்தில்   நம்பிக்கையுள்ள   அனைவருக்கும்   கவலை தருவதாய் உள்ளன.
அரசுக்கு ஆதரவான மக்களவை உறுப்பினர்கள்; மந்திரிகள் பலரும் இதுமாதிரி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிவருவதை  மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
தீர்ப்பதற்கு காத்திருக்கிற மக்களின் பிரச்சனைகள் ஏராளமாக கிடப்பிலுள்ளன .   ஆனால்   குடியுரிமை   திருத்தச் சட்டம், (CAA)    தேசிய   குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) போன்ற மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டங்களை  கொண்டுவந்து தேசத்தின் பிரதான பிரச்சனைகளிலிருந்து மக்களைத்   திசை   திருப்பும்   வண்ணம்   மத்திய   அரசு   செயல்பட்டு   வருகிறது. இச்சட்டங்களுக்கு எதிர்ப்பாளர்கள்;  ஆதரவாளர்கள்     என்று  மக்களை  இருவேறு கூறுகளாய்   பிளவுபடுத்தி   வைத்திருக்கிற   அரசு   மிகவும்   கமுக்கமாக   எவ்வித விவாதங்களுமின்றி  சட்ட  விரோத  செயல்கள்  தடுப்புச்  சட்டம்  (   Unlawful Activities Prevention Act (UAPA))); தொழிலாளர் நலச்சீரழிவு சட்டங்குள்,  தனியார்மய திட்டங்களை அமலுக்குக்  கொண்டு வந்துள்ளது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி  விகிதம்  சரிந்து வருகிறது.   அதை மீட்டெடுக்க பல்வேறு   யோசனைகளை பொருளாதார நிபுணர்கள் முன் வைத்தாலும்   அரசு   அவற்றைக் கேட்கத் தயாரில்லை.   "எங்கள் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாகச்   செயல்பட்டு   வருகிறது"   என்று   தொடர்ந்து தவறான தகவலையே அரசு சொல்லி வருகிறது.
சர்வதேச அரசியல் சூழல்
அண்டை  நாடான  இலங்கையில் இனப்  படுகொலைக்கு  மூல கர்த்தாவாக செயல்பட்ட  இராஜபக்ஷேயின்  தம்பி கோத்தபய ராஜபக்ஷே ஆட்சிக்கு  வந்தது  தமிழ் மக்களிடம்  பெரும்  அச்சுறுத்தலை  உண்டாக்கியுள்ளது  இனப்படுகொலை  குறித்து ஐநாவில்   நிறைவேற்றப்பட்ட    தீர்மானத்தை   அவர்   நிராகரித்துள்ளார்.   இலங்கை அரசிடம்  நல்ல  உறவு  கொண்டுள்ள    மத்திய    அரசு    நமது    தொப்புள்  கொடி உறவுகளான தமிழினத்தின்   பயத்தை போக்க   ராஜிய ரீதியான   நடவடிக்கைகளை   எடுக்க வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
 கொரோனா வைரஸ் (கோவிட் - 19) என்று அழைக்கப்படும் வைரஸ் நோய்க்கு ஏறத்தாள 93,000 பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3000 க்கு மேல்  மரணமைந்துள்ளனர்.  இதில்  அதிகப் பேர்  சீனாவில்  இறந்துள்ளனர். சீனாவின் வூஹானில் தொடங்கிய இந்த வைரஸ்  நோய்  உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோயால்  பாதிக்கப்பட்ட    மக்களுக்கு  10    நாட்களிலேயே  1000  படுக்கைகள் கொண்ட  மருத்துவமனையை    வூஹான்  நகரில்  கட்டியது  பிரமிப்பை  தந்தது.    இது மாதிரியான   பல அதிரடி   நடவடிக்கைகளை   எல்லா நாடுகளும்   மேற்கொண்டதால்  நோய் பரவுவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க   அதிபர் ட்ரம்ப் வந்தபோது பயன்பட்ட "நமஸ்தே ட்ரம்ப்" என்ற நிகழ்ச்சியால்   இந்தியாவிற்கு   எந்தவித   பிரயோசனமும்      இல்லை.   மாற்றாக அமெரிக்காவிலுள்ள     இந்தியர்களின்  ஓட்டு     வங்கியை  தனக்கு     சாதகமாக்கிக் கொள்ளவே  ட்ரம்ப்க்கு பயன்பட்டது. ட்ரம்ப் புகழ் பாட அரசு  ஏற்பாடு  செய்த ஆடம்பர விழா தான் இது என்ற விமர்சனம் மட்டுமே மிஞ்சியது.
9/11  நிகழ்வுக்குப்  பிறகு     ஆப்கான்  அரசுக்கு  ஆதரவாகவும்  தாலிபான் அமைப்போடு  போராடவும்    தனது    படைகளை  அமெரிக்கா  அனுப்பியது.    18 ஆண்டுகளுக்குப்    பின்    இப்போது    அமெரிக்க    அரசுக்கும்  தாலிபான்களுக்கும் இடையே போடப்பட்ட படை விலகல் ஒப்பந்தம் வரவேற்கத் தக்க ஒன்றாகும்.  ஆனால் ஆப்கானிஸ்தான்  அரசின்  ஸ்திரத்
ஒருங்கிணைந்து "அஞ்சல் மகளிர் குழு" அமைத்து நமது கோட்டத்தில்  மிகச் சிறப்பாக செயல்பட்டு  வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும்  சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடி   வருகின்றனர்.   வேலை   நிறுத்தப்   போராட்டங்கள்,   ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது தோழியர்களை  ஒன்று திரட்டி  அதிக அளவில் அவற்றில் பங்கேற்கச் செய்வது;  தோழியர்களின்  பிரச்சனைகளை கோட்டச்  சங்கத்தின் கவனத்திற்கு எடுத்து வந்து   தீர்வு  காண்பது  போன்ற  சிறந்த  பணிகளை  மகளிர்  குழு  செவ்வனே  செய்து வருவது  மனநிறைவு  தருகிறது.    மகளிர்  குழு    கன்வீனராக  இருந்து    சிறப்பாகச் செயல்பட்டு  வரும்  தோழியர்    S.   தர்மாம்பாள்  அவர்களை  இம்மாநாடு  வெகுவாக பாராட்டுகிறது.
பதவி உயர்வில் சென்றவர்களுக்கு பாராட்டு
சிவகங்கை  கோட்டத்திலிருந்து  தோழர்  M.  கருப்புசாமி;  தோழியர்  S.  மீனாள் இருவரும்  உதவி  கணக்கு  அதிகாரிகளாக  பதவி  உயர்வு  பெற்று    நாக்பூருக்கும்; சென்னைக்கும் சென்றுள்ளனர்.
தோழர்  M.   கருப்புசாமி  பல்லாண்டு  காலம்  கோட்டச்   சங்கத்தின்  செயலராக செயல்பட்டார் .   அற்புதமான   தோழர் . அவரின்   எளிமையான   பழக்க   வழக்கம்;   அனைவருடனும்      அன்பாக   பழகும்   சுபாவத்தால்      எல்லோராலும்   வெகுவாக  ஈர்க்கப்பட்டார்.   எதையும்   எவ்வித பரபரப்புமின்றி எளிதாகச் செயலாற்றும் அதிசய தொழிற் சங்க தலைவராக   இருந்த தோழர் M.  கருப்புசாமி பதவி உயர்வில் சென்றது நமது கோட்டச்  சங்கத்திற்கு  இழப்பு என்றாலும் அவர் மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்று சிறக்க    அவரை  வாழ்த்துவதோடு    அவரின்    சீரிய    சங்க  செயல்பாடுகளுக்கு இம்மாநாடு நன்றி பாராட்டுகிறது.
தோழியர்  S.மீனாள்  மகளிர்  குழுவின்  கன்வீனராக     இருந்து     சிறப்பாக செயல்பட்டார்.      ஊழியர்களின்   பிரச்சனைகளைத்     தீர்ப்பதில்     தீவிர   அக்கறை கொண்டவர்.   அவரின்   பதவி   உயர்வு   நமது   சங்கத்திற்கு   இழப்பு என்றாலும் மென்மேலும்  பதவி  உயர்வு  பெற்று   வாழ   வாழ்த்தும்  இம்மாநாடு  அவரின்  சங்க ரீதியான செயல்பாட்டிற்கு நன்றி கூறுகிறது.
பணி நிறைவு செய்தவர்களுக்கு நன்றியும் பாராட்டும்
கடந்த        ஈராண்டுகளில்  கீழ்க்கண்ட       நமது    சங்க  உறுப்பினர்கள்  தங்களது பணியை நிறைவு செய்தனர்.
 1.           தோழர். S இராஜேந்திரன்                மானாமதுரை HO
2              தோழர். S முருகேசன்         இளையான்குடி
3.            தோழியர் S. சிலம்பாயி    சிவகங்கை HO
4.            தோழியர். பானுமதி            இளையான்குடி

தோழர் S  இராஜேந்திரன் நமது P3  சங்கம் மட்டுமன்றி P4,  GDS  சங்கங்களின் கோட்டச்   செயலராக  செயல்பட்டார் .   அனுபவம்  நிறைந்த  சிறந்த  தொழிற்சங்கவாதி. Outsider ஆக   பணியை  துவக்கி  Accountant   வரை  பதவி  உயர்வு  பெற்றவர். தொழிற்  சங்க  அரங்கிலும்,    அலுவலக  வாழ்விலும்    முன்மாதிரியான  அவருக்கு மானாமதுரையில்  பாராட்டு விழா நடைபெற்றது.
தோழர் S முருகேசன் தபால்காரராக இருந்தபோது அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்டச்   செயலராக  சிறப்பாகச்  செயல்பட்டார்     பழகுவதற்கு  இனிமையானவர். தோழியர்கள் S.  சிலம்பாயி, பானுமதி ஆகியோர் சங்கத்தின் மீது   பிடிப்புள்ளவர்கள். சங்கம் அறிவித்த சகலவித போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
பணிநிறைவு  செய்த நால்வரையும் இம்மாநாடு பாராட்டி நன்றி தெரிவிப்பதோடு அவர்கள் நல்ல உடல், மன ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது.
சிவகங்கை தலைமை அஞ்சலக கட்டிட பிரச்சனை
சிவகங்கையில் புதிதாக இலாகா  கட்டிடம் கட்டுவதற்காக தோழர் S. குணசேகரன் MLA  வாக இருந்தபோது அரசியல் ரீதியாக பல்வேறு   முயற்சிகளை மேற்கொண்டது  நமது  கோட்டச்   சங்கம்.  பாராளுமன்ற  உறுப்பினர்கள்    மூலம்  நமது  துறையின் மந்திரிக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.
கட்டிடம் கட்டு தேவையான இடத்தை     மாநில அரசு நிர்வாகம் ஒதுக்கித் தந்தால் சிவகங்கையில் இலாகா கட்டிடம் ஒன்று புதிதாக கட்டித் தர நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக நமது துறையின் மந்திரி தெரிவித்திருந்தார்.
சிவகங்கை மாவட்ட   நிர்வாகம்  LIC  கட்டிடத்தின் அருகே உள்ள நிலத்தை  நமது இலாகாவுக்கு    ஒதுக்கி  இருப்பதாய் முதலில்  சொல்லி வந்தது.  ஆனால் அதை தர இயலாது வேறொரு இடத்தை    தருகிறோம் என்று சொல்லியே இழுத்தடிக்கும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து   வருகிறது.   நமது கோட்டச்  சங்கம்   சிவகங்கை   மாவட்ட   நிர்வாகத்திடம்     இப்பிரச்சனையில்  விரைவில்    தீர்வுகாண  தொடர்ந்து    வலியுறுத்தி வருகிறது.
நாம்  நமது  அஞ்சல்  கோட்ட   நிர்வாகத்திடம்    இப்பிரச்சனையை    மாவட்ட   ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில்   தீர்வு காணுமாறு தொடர்ந்து   வலியுறுத்தி வருகிறோம்.  நமது கோட்ட  கண்காணிப்பாளர்களும்  மாவட்ட   ஆட்சியரை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து  தவறாது பேசி வருகின்றனர்.  ஆனால் எந்தவித தீர்வும்  இதுவரை  எட்டபடவில்லை.    வாடகை  கட்டிடத்தில் இயங்கும்  சிவகங்கை தலைமை அஞ்சல் கட்டிடத்தில் உள்ள இட நெருக்கடியால் உள்ளுக்குள் நடப்பதற்கு கூட இடமின்றி  ஊழியர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.   தபால் காரர்களைப் பார்க்க  வயதான வாடிக்கையாளர்கள் மிகவும்  ஸ்டீப் ஆன படிக்கட்டுகளில் சிரமப்பட்டு ஏறி  டெலிவரி பகுதி  இயங்கும்  மாடிக்கு  வரவேண்டியுள்ளது.    பொதுமக்களுக்கான கவுண்டர்கள்  பகுதியில்  போதுமான    இடமில்லாததால்   சில  நாட்களில்  வாசலுக்கு வெளியே  வாடிக்கையாளர்கள்  கியூ  கட்டி  நின்று     கஷ்டப்படுகின்றனர். 
எனவே, பொதுமக்களின்    சிரமங்களை  களைய  சிவகங்கை    நகரின்  பிரதானப் பகுதியில் போதுமான   இடத்தை         தலைமை   அஞ்சலகம்   கட்டுவதற்கு      விரைவில் ஒதுக்கித்தருமாறு தமிழக அரசின் மாவட்ட   நிர்வாகத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சிவகங்கை கோட்ட  / HO களின் வரலாறும் நமது தொழிற்சங்கமும்
சிவகங்கை  கோட்டத்திற்கு நீண்ட  நெடிய  வரலாற்றுப்  பின்னணி  உள்ளது. 40வது        ஆண்டை நோக்கி  பயணிக்கும் இக்கோட்டத்தை நமது  சங்கம்  தொடர்ச்சியாக மேற்கொண்ட பாதுகாப்பு    நடவடிக்கைகளால்   தக்க   வைத்திருக்கிறது. இல்லையென்றால்  எப்போதே  இக்கோட்டத்தை   இலாக்காவின்  உயர்  அதிகாரிகள் ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.  
இதன் வரலாற்றை உறுப்பினர்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக இந்த ஈராண்டு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
LSG ஆபிஸாக இருந்த மானாமதுரை அஞ்சலகம்  HO-வாக 01.04.1973 ல் தகுதி உயர்த்தப்பட்டது,  அப்போது  அது  இராமநாதபுரம்  அஞ்சல்  கோட்ட   நிர்வாகத்தின்  கீழ் இருந்தது

01.12.1980 அன்று மானாமதுரை  HO  வும் அதன் கீழுள்ள 42  SO  க்களும் அவற்றில் உள்ள BO க்களும் உள்ளடக்கிய  மானாமதுரை அஞ்சல் கோட்டம்  புதிதாக உருவானது.
அதன்பின்னர்      மாவட்ட     எல்லைகளை   அடிப்படையாகக்   கொண்டு அஞ்சலகங்களை மறுசீரமைப்பு (Reorganisation of Post Offices within District Boundaries) செய்ய  வேண்டும்  என்ற திட்டத்தை        மாநில  அஞ்சல்  நிர்வாகம்  அறிவித்தது.    "சிவகங்கை மாவட்டத்தில்     மானாமதுரை, காரைக்குடி என்ற   இரண்டு கோட்டங்கள்   உள்ளன. அவற்றை  இணைத்து  ஒரே கோட்டமாக மற்ற மாட்டோம்.  மானாமதுரை கோட்டம் முன்பு எப்போதும் போல் இருக்கும்"  என்ற  உறுதிமொழி  தந்தால்  இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம்.     இல்லையெனில்  எங்களின்  வேலைநிறுத்தப்  போராட்டம்  துவங்கும்   என்று   பேச்சுவார்த்தையின்போது   நமது   கோட்டச்  சங்கங்கள் கறாராக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தன.
அந்த உறுதிமொழியை பெற்றதன் அடிப்படையில் 01.04.1995 அன்று   மானாமதுரை  கோட்டத்திலிருந்து  கமுதி,   கமுதி  டவுண்,   கோட்டைமேடு, அபிராமம், பேரையூர், பார்த்திபனூர்   மணடலமாணிக்கம், ஆனந்தூர், சனவேலி,   சின்னக்கீரமங்கலம்   அஞ்சலகங்கள்   இராமநாதபுரம்   கோட்டத்திற்கும்  , நரிக்குடி, வீரசோழன்   என்ற   இரண்டு   அஞ்சலகங்கள் விருதுநகர் கோட்டத்திற்கும் இங்கிருந்து மாற்றப்பட்டன.
  காரைக்குடி கோட்டத்திலிருந்து திருப்பத்தூர், திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் ,    SM  ஹாஸ்பிட்டல், கண்டவராயன்பட்டி   அஞ்சலகங்களும்,      இராமநாதபுரம் கோட்டத்திலிருந்து இளையான்குடி,  இளையான்குடி  புதூர்,  இளையான்குடி  வெஸ்ட், சூராணம், சாலைக்கிராமம் போன்ற அஞ்சலகங்களும்   மானாமதுரை கோட்டத்திற்கு மாற்றப்பட்டு     புதிதாய்  இங்கு  வந்து  சேர்ந்தன.     அதன்பின்  அஞ்சல்  கோட்ட  நிர்வாகத்தின்   தலைமையிடம்    மாநில   அரசின்   மாவட்ட      நிர்வாகத்தின் தலைமையிடத்தில் தான்  இருக்கவேண்டும் என்று  சொல்லி மானாமதுரையில் இருந்த கோட்ட   அலுவலகத்தை    சிவகங்கைக்கு  மாற்ற    மண்டல /  மாநில  நிர்வாகங்கள் முயன்றன.
சிவகங்கைக்கு  மாற்றிய பின் அங்கு  தலைமை அஞ்சலகம் இல்லை.  எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு கோட்டங்கள் தேவையில்லை   என்று சொல்லி சிவகங்கை  கோட்டத்தை ஒழித்துவிடலாம் என்று   நினைத்த  அதிகாரிகளின்   தீய எண்ணத்தை  புரிந்துகொண்டனர்  நம் சங்கத் தலைவர்கள்.  எனவே  "சிவகங்கையில் உள்ள அஞ்சலகத்தை தலைமை அஞ்சலகமாக"   தகுதி உயர்வு செய்தால் மட்டுமே இதை  அனுமதிப்போம் என்று பிடிவாதம்  காட்டியது        நமது  சங்கம்.             இலாகா அதிகாரிகள் அதற்கான  உறுதிமொழியைத் தந்தனர்.  அதன் பின்னரே 01.04.1998 அன்று கோட்டத்தின் தலைமையிடம்  மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு மாற்றப்பட்டது
. ஆனால்        அதிகாரிகள் தங்களின் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டனர் . சிவகங்கை                 மாவட்டத்தில்   ஒரே கோட்டமாக     காரைக்குடி  மட்டுமே இருக்கும் என்ற செய்தியை அவ்வப்போது   உலாவவிட்டு நம் மனநிலையை ஆழம் பார்த்து வந்தனர். நம் சங்கம்  அரசியல் ரீதியாகத்  தொடர்ந்து   கொடுத்துவந்த அழுத்தத்தின் பயனாகவே 01.04.2009 அன்று  சிவகங்கையில் புதிதாக  ஒரு தலைமை அஞ்சலகம் உருவானது.
அந்த ஆணையை முன்னாள் நிதியமைச்சர் . சிதம்பரம் அவர்களே நேரில் வந்து நம்மிடம் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.
எனவே,   01.04.2020 அன்று   மானாமதுரை தலைமை அஞ்சலகமாகி 47 ஆண்டுகளும்,  சிவகங்கை  தலைமை  அஞ்சலகமாகி  10  ஆண்டுகளும்  முடியும். 01.12.2020 அன்று  நமது அஞ்சல் கோட்டம் உருவாகி 40 ஆண்டுகள் முடியும்.  ஏப்ரல் 1-ம்  தேதியை    தலைமை  அஞ்சலக  தினமாகவும்,    டிசம்பர்  1-ம்  தேதியை  கோட்ட  அலுவலக தினமாகவும் ஒவ்வொரு ஆண்டும்   இனி கொண்டாடுவோம்.   சிவகங்கை கோட்டத்தை  தொடர்ந்து    பாதுகாத்து  வந்த  நம்  கோட்டச்   சங்கத்தின்  செயல்களை என்றென்றும்  நன்றியுடன்  நினைவுகூர்வோம்.    அந்த  திசை  வழியில்  பயணித்து சிவகங்கை கோட்டத்தை என்றென்றும் காப்போம்.
கோட்டச்  சங்கத்தின் சாதனைகள்
கோட்ட   சங்கம்  ஊழியர்களின்  பல  பிரச்சனைகளை  முன்னெடுத்து   தீர்வு கண்டது. அவற்றில் சில...
           ஊழியர்களின் விடுப்பு எதுவாயினும் அதற்கு தகுந்த ஏற்பாடு செய்து, நிர்வாகத்துடன் இணைந்து செய்து கொடுத்தது ஊழியர்களின் நலன் காத்தது.
           Computer UPS, Genset மற்ற உபகரணங்களை உடனுக்குடன் கோட்ட  நிர்வாகத்திடம் முறையிட்டு சரி செய்து தந்தது.
           தேங்கிக் கிடந்த TA பில்கள் மற்றும் RTF பில்களை ஊழியர்களுக்குப் பெற்றுத் தந்தது.
           LSG PA க்களுக்கு அந்தந்த ஊழியர்களின் விரும்பிய   இடமே (நமது கோட்டத்திற்குள்) கேட்டுப் பெற்றுக் கொடுத்தது.
           ஒவ்வொரு  வருடமும் Rotation Transfer -ன் போது  பெரும் பகுதி ஊழியர்களின் விருப்ப இடமே  பெற்றுத் தந்தது.
           ஒவ்வொரு மாதாந்திர கூட்டத்தின் போதும் ஊழியர்களின் பிரச்சனைகளை தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாகப் பெற்று அதற்கான   தீர்வையும் பெற்றுத் தந்தது.
           பல அஞ்சலகங்களுக்கு  அடிப்படை   வசதிகளான            புதிய நாற்காலிகள் மற்றும் நாற்காலிகளைப் புதுப்பிக்க கோட்ட  நிர்வாகத்திடம்  அனுமதி பெற்றுத் தந்தது.
           பெண் ஊழியர்களுக்கு  Child Care Leave  பெற்றுக் கொடுத்தது.
           ஊழியர்களுக்கு CSI புத்தாக்கப் பயிற்சி வகுப்பு நடத்தியது .
           Training/Deputation  செல்லும் ஊழியர்களுக்கு Advance of TA             வை அதிகப் படுத்தி வாங்கிக் கொடுத்தது.
கோட்ட  சங்கம்  பங்கேற்று  நடத்திய இயக்கங்கள்
           25.03.2018 ல் கோட்ட  சங்கம் சார்பில் மகளிர் கருத்தரங்கம் நடத்தியது .
           08.04.2018 - தோழர். பி.சேர்முக பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுவிழா
           25.04.2018 ல் Chief PMG  அலுவலகம் சென்று தர்ணாவில் பங்கேற்றது.
           01.05.2018 மே தின விழா அனைத்து அலுவலகங்களிலும்   
                 கொண்டாடபட்டது.
           10.06.2018 தோழர். எஸ். இராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுவிழா
           09.07.2018 - 17.07.2018 முதல் பகுதிக் கூட்டம்  நடத்தப்பட்டது.
           06.09.2018 ல்    கோட்ட  அலுவலகம் முன்பாக தல மட்ட பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் ம் நடத்தியது .
           06.09.2018-ஞ்   கோட்ட          அலுவலகம்               முன்பாக        GDS      ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்  நடத்தியது .
           18.12.2018 முதல் 22.12.2018 வரை GDS  கமிட்டிக்காக ஆர்ப்பாட்டம்  நடத்தியது .
           20.06.2018  CSI/SAP  பிரச்சனைகளுக்கு பிளாக் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது .
           13.11.2018 மதுரை      RO  முன் CSI/SAP     பிரச்சனைகளுக்கு                ஆர்ப்பாட்டம் கலந்துகொண்டது.
           26.02.2019 கோட்ட  அலுவலகம்முன்பாக GDS  ஊழியர்களுக்காக  ஆர்ப்பாட்டம் நடத்தியது .
           20.08.2019 கோட்ட  அலுவலகம் முன்பாக RPLI/SSA  கணக்கு பிடிக்கச் சொல்லி Torture  செய்யும் நோக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது .
           25.09.2019 கோட்ட  அலுவலகம் முன்பாக GDS  ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம் ம் நடத்தியது .
           26.12.2019-  தொழிற்சங்க கருத்தரங்கம் &  தோழர்.  கே.  செல்வராஜ்  அவர்களுக்கு பாராட்டு விழா.
           08.01.2020 ஒரு நாள் ஸ்டிரைக் செய்தது.
           02.02.2020 தொழிற்சங்க பயிற்சி வகுப்பு.
நிறைவுரை:- சங்கப் பணி, அலுவலகப் பணி நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல்
சிவகங்கை   கோட்டத்திற்கென்று நீண்ட   நெடிய      தனித்த   வரலாறும், பாரம்பரியமும்,  பண்பாடும்  உள்ளது.    கேடர்     பேதமற்ற    உணர்வு  நிலை  எல்லா ஊழியர்களிடம்     மேலோங்கி  இருப்பதற்கு    இவைதான்  காரணம்.    100  சதவிகித வேலைநிறுத்தம்  சாத்தியமாவதும் இதனால்தான்.  அஞ்சலகத்துறையில் பணிசெய்யும் ஒவ்வொருவருக்கும்   "அஞ்சலக   அலுவல்   பணியும்   தொழிற்   சங்க   பணியும்" நாணயத்தின் இரு பக்கங்களே.  நாணயத்தின் ஒரு பக்கம் மங்கிப் போனாலும்  அது செல்லாததாகிவிடும்.  எனவே, நாம் ஒவ்வொருவரும்  அலுவலகப் பணி, சங்கப் பணி இரண்டிலும்   சரியாகச் செயல்பட வேண்டியது அவசியம்.   அஞ்சலகத்தில் பணியை முடிப்பதோடு ஒதுங்கிக் கொள்ளாமல்,   தொழிற்சங்கத்தின் எல்லா செயல்பாடுகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.   ஒ ற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!.
ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு- நம்மில்
ஒற்றுமை நீங்கில்  அனைவருக்கும் தாழ்வே
நன்றிது  தேர்ந்திடல்  வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது  வேண்டும்?
                                                                                                              - மகாகவி பாரதியார்
ஒற்றுமையால் மட்டுமே நமக்கு வாழ்க்கை உண்டு என்ற ஞானத்தைப் பெற்று சங்கத்தில் ஒவ்வொருவரும் சீரிய வழியில் செயல்படுவோம்.
செயற்குழுவின் சார்பாக
பொதுக்குழுவில் சமர்ப்பிப்பவர்
G நாகலிங்கம்
கோட்டச்  செயலர்
08.03.2020


ஈராண்டு அறிக்கையை பி.டி.எப் PDF  format ல் பதிவிறக்கம் செய்ய கொடுக்கவேண்டிய லிங்க் 

கருத்துகள் இல்லை: