ஜூலை 08, 2017

Nonagenarian leader of P&T Employees D.Gnaniah Red Salutes!

                     தொலைத் தொடர்பு ஊழியர்களின் பிதாமகன் ,NFPTE  இயக்கத்தின் முன்னாள் சம்மேளனச்செயலர் , பொதுவுடமை இயக்க போராளி,  மனிதநேய சிந்தனையாளார், மார்க்சிய எழுத்தாளர் அருமைத்தோழர்  ஞானத்தந்தை தோழர் ஞானையா  இன்று 8/7/2017 அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் ஞானையா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நமது தோழர்களின் whatsapp பதிவுகள்.

The senior most leader of P&T Employees movement as on date amongst us Comrade D.Gnaniah has passed away this day morning at about 4.30 A.M. He was one of our legendary leaders of P&T Movement and CG Employees movement. He was 96 years old and 97 running as on date. He was the only surviving leaders of NFPTE formation time of 1954 and with  breathing his last, the void is complete. He was the Secretary General of NFPTE during the historic time of 1968 CG Employees Strike; He was the leader who signed as the Staff Side Secretary of P&T Departmental Council in the famous Productivity Linked Bonus to P&T Employees on the face of a strike threat given out by NFPTE. He was a leader well proficiency and ease with HIndi language in addition to English and Tamil and used to make forceful Hindi speeches in North India and National Conventions. A Revolutionary throughout his life and he had visited several Socialist Countries in his life time. A famous writer who had written several books on 'Socialist' ideals. A militant leader who had led several strikes of P&T employees. A leader remembered by all the past and present leaders of P&T trade union movement and CG Employees movement. He joined as a member of AIPRPA (All India Postal & RMS Pensioners Association)  when the team of AIPRPA leaders led by its General Secretaru visited on him in his house at Coimbatore two years back.He graced the 2nd State Conference of AIPRPA held at Coimbatore despite his advanced age and physical condition. His presence and inspiring speech at the above conference at his age of 95 enthused one and all present in the Conference. He was admitted in hospital and remained in treatment for four or five days before he succumbed to nature today morning at 4.30 A.M. His departure is an irreparable loss to the P&T movement and CG Employees movement and Pensioners Movement and in one sentence to the entire working class movement of India. The funeral of the legendary leader is likely to be around the afternoon of tomorrow (9.7.2017) at Coimbatore after the arrival of his daughter from USA. The further details of funeral can be ascertained from our Coimbatore AIPRPA leaders Comrades D.Sivaraj and S.Karunanidhi (9486616236 & 9443914456). The photograph shows Comrade D.Gnaniah seated next to our Patron of Tamilnadu AIPRPA Comrade AGP on his left and K.R GS of AIPRPA on his right while Comrade Gnaniah graced the 2nd Conference of State AIPRPA. The AIPRPA CHQ dips its banner in honour and memory of the great leader Comrade D.Gnaniah!
- KR GS AIPRPA -

------------------------------------------------------------------------------------------------------------------------
NFPTE சம்மேளனத்தின்
முன்னாள் மா பொதுச்செயலாளரும்
வலது கம்யூனிஸ்ட் கட்சியின்
தொழிற்சங்க ஒப்பற்றத்தலைவரும்
மறைந்த தலைவர்
ஐயா திரு A.பிரமநாதன் அவர்களுடனும்
மறைந்த தலைவர்
தோழர் O.P.குப்தா அவர்களுடனும்
தொழிற்சங்கப்பணியில்
                             இணைந்து
தபால் - தந்தி ஊழியர்களின் பிரச்னைகளை
போராட்டத்தின் மூலம் வென்றெடுத்தவரும்
கொங்கு நாட்டின் தொழிற்சங்க சிங்கமாக
திகழ்ந்தவரும்
தியாகத்தலைவர் தோழர் D.ஞானய்யா
அவர்கள்
தனது  97 _ வது வயதில் உடல் நலிவுற்று
வயது முதிர்ச்சி காரணமாக
இயற்கை எய்தினார் என்பதை
மிகுந்த வேதனையுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்...
            அன்னாரை இழந்து வாடும்
குடும்பத்தாருக்கும்
உழைக்கும் வர்க்கத்தினருக்கும்
மறைந்த
                ஐயா A.P.பேரவை சார்பாக
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்!

K.சிவராமன்
தலைவர்

V.இராசேந்திரன்
பொது செயலாளர்

--------------------------------------------------------------------------------------------------------------------- 

Veteran Senior Trade Union Leader and former Secretary General of the united NFPTE movement  Com.D. Gnanaiah (96) passed away this morning at  Coimbatore.
         Funeral will be held tomorrow Sunday (9/7/2017)  at Coimbatore. 
        NFPE HQ conveys its heartfelt condolences to the bereaved family members and pay respectful homage to the departed soul.
R N Parashar
Secretary General

NFPE & G/S P-III 
http://nfpe.blogspot.in/2017/07/com.html#links
---------------------------------------------------------------------------------------------------------------------
Selvaraj AO: மாமனிதர் தோழர்  ஞானையா. 🙏_

நேற்று இரவு முழுவதும் எனக்கு  உறக்கம் வரவில்லை.
கண்களை இறுக்கி மூடினாலும் அவரின் கம்பீர உருவமும் கணீர் குரலும் ஆளுமை கலந்த சிரிப்பும் மீண்டும் மீண்டும் என்னுள்ளே.
 1981 அல்லது 1982 துவக்கத்தில் தோழர்கள் ஆதி மற்றும் கருனாநிதி நான் அருமைத் தோழர் கே ஆர் தலைமையில் இராஜபாளையம் தொழிற்சங்க கல்வி முகாமில் தோழரை சந்தித்ததில் இருந்து நேற்று வரை நிகழ்வுகள்
நிழற்படமாய் தோன்றின..                       
[3:38 PM, 7/9/2017] Selvaraj AO: அதற்கு பின் அவர் தலைமையில் நிர்வாகக்குழு  உறுப்பினர் பல ஆண்டுகளாக அஞ்சல் பகுதியின் சார்பாக.
மிகப்பெரிய தலைவர்களான தோழர்கள் ஜெகன் ஆர் கே முத்தியாலு இவர்களுக்கு சமமாக விவாதங்களில் எனது கருத்துக்களையும் அங்கீகரிப்பது என எனது வளர்ச்சிக்கு உரமிட்ட நிகழ்வு ஏராளம்.
தோழர் கருணாநிதி புளியடிதம்மத்தில் தோழர்  ஞானையா வைத்து நடத்திய மிகப்பெரிய கல்வி முகாம் அதனைத் தொடர்ந்து மானாமதுரையில் CSI பள்ளியில்  நாம்   நடத்திய கல்வி முகாம் இவை எல்லாம் அவர் பலமுறை மகிழ்வுடன் நினைவு கூர்ந்த நிகழ்வுகள்.
அதற்கு பின்பும் தோழர் சி கே மதி தலைமையில் தொடர்ந்த நிர்வாகக்குழு.
தேசிய நிர்வாகக் குழுவில்  அஞ்சல் அரங்கில் நான்  உறுப்பினர் ஆக தோழரும் கலந்து கொண்ட விவாதங்கள்.
இப்படியே தொடர்ந்து மானாமதுரையில் இறுதியாக  தோழர் கலந்து  கொண்ட நூல் வெளியீடு தொடர்பான சிறப்பு கூட்டம்
NFPTE  வைர விழாவில் சிவகங்கையில் தோழர் கலந்து கொண்டது.அதற்கு  முன்பாக தோழர் கே ஆரின் சிறப்பான பனி ஓய்வு  பாராட்டு விழாவில் கலந்து சிறப்பித்தது. 
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொறுப்பு நான் ஏற்றபோது வாழ்த்தி வழி காட்டியது.
கோவையில் நடந்த நானும் ஓடினேன் புத்தக வெளியீட்டு விழாவில் நானும் ஓடினேன் என கடந்த கால முற்றாக ஏன் தலைப்பை வைத்திருக்கிறீர்கள். நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது தானே சரியான தலைப்பாக  இருக்கும் என எனது வேண்டுகோளாய் வைத்தது  என இரவு முழுவதும் ரீவைண்டிங் ஆகிக் கொண்டு இருந்தது.

இறுதியாக நான் 23.06.17 காரைக்குடி வருவதற்கு முன்பாக  இப்போது அவர் எழுதி முடிக்காமல் இருக்கும் புத்தகத்திற்கு தேவையான நூலை தில்லியில் வாங்கிவர பனித்துஅது அவரை சென்றடைந்ததும்  என்னை அலை பேசியில் அழைத்து நன்றி தெரிவித்த  அந்த பிதாமகன் அந்தோ மருத்துவமனையில் சடலமாக.
நான்  இன்றாவது  உறங்குவேனா. 🙏🙏🙏.

_______________________________________________________________________________

செஞ்சுடர் அணைந்தது
 
NFPTE  இயக்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் டி ஞானையா  இன்று ( 08.07.2017 )அதிகாலை 04.30 மணி அளவில் மறைந்தார் . அவருக்கு வயது 97. தமிழகத்தின் தலை சிறந்த  மார்க்சிய சிந்தனையாளர்களுள் ஒருவராய் திகழ்ந்தார் .  அவருக்கு ஒரே மகள் .கணவருடன் கொச்சியில் இருக்கிறார். அவரது பேத்திகள் இருவரும் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். .அவரது  மனைவி 1993ல் மரணமடைந்தார்.

அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து.

தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை  திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941  அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942  முதல் 1946  வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .

திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE  செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும்  தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல்  1960 வரையிலும் மற்றும் & 1976 முதல்  1978 வரையிலும் NEPTE  யின்  Secretary General ஆக இருந்தார்

அவர் ஒரு  சிறந்த மார்க்சிய பேரறிஞர்

தமிழக அஞ்சல்  துறை தமிழ் மண்ணுக்கு  தந்த அறிவுஜீவிகளில் ஒருவர் இவர்  . மார்க்சிய பேரறிஞர் ..சீன எல்லைப் பிரச்சனை ;பாகிஸ்தான் பிரிவினை ; சாதி ,மதம் , சமூக நீதி, மதவாத எதிர்ப்பு அரசியல் என பரந்து  பட்ட எல்லையில்லா ஞானம் உள்ளவர். நல்லதோர் சமூக சிந்தனையாளர். அவருடன் உரையாடினால் அவரது உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் . இடதுசாரிக் கட்சி தலைவர்களும் அபிமானிகளும் , மார்க்சிய சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும்  பல் வேறு விசயங்கள் குறித்து விவாதிக்க எப்போதும் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருப்பார்கள்.  . இடதுசாரி ஒற்றுமை பற்றி அதிக ஆர்வம் காட்டி வந்தார் .அவரது அபாரமான நினைவாற்றல் ஓர் அதிசியம்  . பிரிட்டன், பிரான்ஸ் ,சோவியத் யூனியன் ஜெர்மனி, டென்மார்க்,ஹங்கேரி, பல்கேரியா அமெரிக்கா  என பல நாடுகள்  பயணித்தவர்.

19.09.1968 மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை  நாயகன்

.NFPTE தபால் தந்தி தொழிற்சங்கத்தின் மா பொதுச் செயலராக பல ஆண்டு காலம் டில்லியில் இருந்தவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து 19.09.1968 ல் நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தியதற்காக  ஜெயில் சஸ்பென்சன் டிஸ்மிசல் என தண்டனை பெற்றவர். இதன் மூலம் NFPTE அமைப்புக்கு பெருமை சேர்த்தார்,

டில்லியில் இருந்தபோது 1975 ம் ஆண்டின் அவசர சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர், தொழிற்சங்க பணிக்காக மூன்று முறை கைது , ஒரு முறை டிஸ்மிஸ் எமர்ஜென்சியின் போது Premature Retirement என பல தண்டனைகளுக்கு ஆளானாலும் ஒவ்வொரு முறையும் அவற்றை வென்று பணிநிறைவு செய்து ஒய்வு பெற்றார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவாராக இயக்கப் பணி

பணி நிறைவுக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியில் பணி செய்தார் .  தமிழகத்தில் அவர் கால் படாத இடமில்லை , தொழிற்சங்க வகுப்பு எடுப்பதிலும் இயக்கங்களை வலுப் படுத்துவதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன் படுத்தினார் . படிப்பும் எழுத்துமே என் பணி என  வாளா இருந்து விடாமல்  இயக்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் . தன் வாழ்கையை முழுமையாக வாழ்ந்து முடித்தார்

.தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .

 அவரது  நூல்களில் சில

• இஸ்லாமும் இந்தியாவும் ,
• விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் ,
• மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்,
• இந்திய சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும்,
• பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?,
• சர்வதேச பயங்கரவாதமும் இந்து பயங்கரவாதமும்
• அமெரிக்க ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும்
• சாதிமுறையை தகர்க்க முடியுமா
• இந்துத்துவா பாசிசம்
• வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள்
• காய்தே ஆஸாம் முகமது அலி ஜின்னா – உண்மை சித்திரம்
• நானும் ஓடினேன்

• Glimpses of a Unique Union ( The Trade Union Movement of P&T Workers of India)
• Islam and India
• Terrorism sources and solutions
• Obamas of America and Dalits of India

இவை தவிர அவரசியல் விழிப்புணர்வூட்டும்  சிறு பிரசுரங்கள்  நிறைய எழுதியுள்ளார் .உலக கம்யூனிச வரலாறு குறித்து அவர் தற்போது எழுதி வந்த புத்தகம் முற்றுப் பெறவில்லை .

ஒழுக்கம்,அன்பு,நேர்மையின் உருவாக கடைசி வரை வாழ்ந்தார்.  இறுதி மூச்சு நிற்கும் வரை மார்க்சிய நெறிமுறை களிலிருந்து   சிறிதும் பிசகாமல் வாழ்ந்தார். அவரது மறைவு  மத வாத சாதிவாத சக்திகளுக்கு எதிராக போராடிவரும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் பேரிழப்பாகும் ,

 அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை யாக்குகிறேன் .
.... முகநூல் பதிவில் ப.சேர்முக பாண்டியன் முன்னாள் செயலர் பி3 NFPE சிவகங்கை

_______________________________________________________________________________
தோழர் ஞானையா எழுதி வைத்தது.
எனது இறுதி சாசனம் – MY Last Testiment
7.2.2001 D.ஞானையா D.Gnanaiah 7.1.2001
80 வயது நிறைவு.   80 completed

 மரணத்திற்குப் பின் மிஞ்சுவது உடல் மட்டும்தான். அந்த உடலை எரித்தாலோ அல்லது ;புதைத்தாலோ மிஞ்சுவது எலும்புக் கூடுதான். இதுவே விஞ்ஞ னம். இதற்கு மாறான கருத்துக்களெல்லாம் மூட நம்பிக்கைகளே. மரணத்திற்குப் பிறகு மிஞ்சுவது நமது சந்ததிகள், உற்றார், உறவினர், நண்பர்கள், தோழர்கள் மற்றும் மனித குலமுமாகும். நம்மைப் பற்றிய நினைவுகளுக்கு இவர்களில் சிலர் அஞ்சலி செலுத்துவார்கள். நாம் வாழ்ந்த பொழுது நாம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ள பங்கு நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும்.

 மரணத்திற்குப் பிறகு ஆன்மாவோ, ஆவியோ, மறுபிறவியோ அல்லது உயிர்த்தெழுதலோ உண்டென்று நம்புவது கற்பனையே; கட்டுக் கதைகளும் கூட.

 உடலிருந்தால் தான் “ஆன்மா” என்று ஒன்று இருக்க முடியும். உயிர் உள்ளவரைதான் அதுவும் இருக்க வாய்ப்புண்டு. ஆன்மா என்பது உண்மையில் மனசாட்சியே. மனச்சாட்சி என்பதும் ஒரு  சமூக பிரக்   . சமுதாய கருத்தோட்டத்தில் நிலவிவரும் நல்லொழுக்க நெறிகள்-கோட்பாடுகளைப் பற்றி உள்ளத்தின் ஆழத்தில் வலுவாக பொதிந்து நிற்கும் உணர்வு நிலைதான் ஆன்மா என்று அடையாளம் சுட்டப்படுகின்றது. உயிர் பிரிந்துவிட்டால் உடல் அழிந்து விடுகிறது. உடல் அழிந்த பிறகு மனசாட்சியோ அல்லது ஆன்மாவோ அல்லது வேறு எந்த உணர்வும் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை. இதற்கு மாறான கருத்துக்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளே(Superstition)

--------------------------------------------------------------------------------------------------------------------------
தலைவர் ஞானையா அவர்களுடான எனது கடைசி உரையாடல்
நான் அஞ்சல் துறை தொழிற்சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினர் பொறுப்பு மிகுந்த பதவிகள் ஏதும் வகித்ததில்லை. தொழிற்சங்கத்தலைவர்களோடும் தனித்த முறையில் பேசுவதற்கு இன்று வரை தயக்கம். ஆனால் தலைவர் ஞானையா அவர்களுடன் எவ்வித தயக்கமின்றி பேசலாம். ஆறு மாதங்களுக்கு முன் தலைவர் ஞானையா அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ராமசந்திர குஹா அவர்களது தென்னாப்பிரிக்காவில் காந்தியையும் தேவேந்திரநாத் தேசாய் அவர்களது ஓம் நமோவையும் படித்திருந்தேன். தேசாய் அவர்களது கீழைமார்க்சியம் குறித்த சிந்தனைகளையும் பௌத்தம் சமணம் குறித்த சந்தேகங்களையும் தெளிவு படுத்தினார். தூங்கப்போவதாகவும் அடுத்த நாள் விளக்கமாக பேசலாம் என்பவையே என்னுடன் பேசிய கடைசி வார்த்தைகள்.
எமிலி டிக்கன்ஸ் கடைசி வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது
"திரும்பி அழைக்கப்பட்டேன்
சூழ்ந்து வருகிறது அந்தி இருள் குளிர்."

இன்று என்னைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஒரு உயர்ந்த ஆதர்சம் அணைந்துவிட்டது.
கருப்பையா சென்னை

_______________________________________________________________________________

N MEMORIAM
Homage to the Departing leader

D.Gnaniah

Our great scholar
Learned writer
Unassuming Historian
Towering personality of left movement in India
Veteran II world war soldier
Undiminished attitude towards labour problems
Great sympathisers of underprivileged
My friend, philosopher and guide in all walks of my life

Who breathed his last on 8th July 2017

RED SALUTE COMRADE D.G

_____________________________________________________________________________

தோழர் ஞானையா அவர்களின்
இறுதி சாசனம்










கருத்துகள் இல்லை: