மாலைமலர் - 08.07.2017
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஞானயா உடல்நலக் குறைவால் காலமானார்
பதிவு: ஜூலை 08, 2017 16:06
கோவை:
மார்க்சீய அறிஞர் என்பதற்கான முழு தகுதியையும் கொண்ட தோழர் ஞானையா இன்று தனது 97 வயதில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.30-க்கு இயற்கை எய்தினார்.
ஞானையா மரணம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தபால் தந்தி ஊழியர் சம்மேளத்தின் இந்திய பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மிக சிறந்த தொழிற் சங்க இந்திய தலைவராக திகழ்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, மாணவ பருவத்திலேயே தன்னை தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்துக் கொண்டு தண்டனை பெற்றவர். இவர் கட்சியின் தேசியக் குழுவிலும் மாநில செயற்குழுவிலும் சிறப்புற பணியாற்றியவர். கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர். மூத்த தலைவர்.
கம்யூனிஸ்டு இயக்கம், இந்திய தனித் தன்மைகளையும், தமிழகத்தின் தன்மைகளையும் கணக்கில் கொண்டு தனது எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதில் உறுதியோடு செயல்பட்டார். அதற்கான பல ஆய்வு கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த புரிதலோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். 85 வயதிலிருந்து இன்று வரை 20 க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். எல்லாம் இந்திய கம்யூஸ்டு இயக்கத்திற்கான புதிய கருத்து கோள்களை கொண்டவை.
இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்டு கொள்கைகளிலும், அது வெற்றி பெற்றே தீரும் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டு அயராது உழைத்த தோழர் ஞானையா அவர்களுக்கு வீரவணக்கமும் புகழ் அஞ்சலியும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஞானையா எழுதிய இந்தியா: வரலாறும், அரசியலும் என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சீய அறிஞர் என்பதற்கான முழு தகுதியையும் கொண்ட தோழர் ஞானையா இன்று தனது 97 வயதில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.30-க்கு இயற்கை எய்தினார்.
ஞானையா மரணம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தபால் தந்தி ஊழியர் சம்மேளத்தின் இந்திய பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மிக சிறந்த தொழிற் சங்க இந்திய தலைவராக திகழ்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, மாணவ பருவத்திலேயே தன்னை தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்துக் கொண்டு தண்டனை பெற்றவர். இவர் கட்சியின் தேசியக் குழுவிலும் மாநில செயற்குழுவிலும் சிறப்புற பணியாற்றியவர். கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர். மூத்த தலைவர்.
இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்டு கொள்கைகளிலும், அது வெற்றி பெற்றே தீரும் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டு அயராது உழைத்த தோழர் ஞானையா அவர்களுக்கு வீரவணக்கமும் புகழ் அஞ்சலியும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஞானையா எழுதிய இந்தியா: வரலாறும், அரசியலும் என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மாலை மலர் : http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/08160620/1095310/CPI-pary-veterian-leader-gnanaiya-died-in-kovai.vpf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக