1.1.2013 லிருந்து வழங்கப்பட வேண்டிய 8% DA உயர்வு- அரசு ஆணை இன்னும் வெளிடிடப்படவில்லை - என்ன காரணம் ?
விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் DA உயர்வுக்கான ஆணை ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும் . பத்து பதினைந்து ஆண்டு களுக்கு முன் பு ஒவ்வொரு DA உயர்வும் நாம் போராட்டம் நடத்தித்தான் பெற்று வந்தோம் . இப்போது அப்படி இல்லை . பிறகு இந்த DA உயர்வுக்கு மட்டும் என்ன ஆனது என்ற கேள்வியும் குழப்பமும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது .
02.04 .2012 ( செவ்வாய்)கேபினட் மீட்டிங்கின் போது நிதி மந்திரி திரு ப.சிதம்பரம் ஜப்பான் சென்று விட்டதால் கேபினட்டில் DA உயர்வு குறித்த அஜெண்டா எடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டது .
09.04 .2012 ( செவ்வாய்)கேபினட் மீட்டிங்கின் போது பிரதம மந்திரி ஜெர்மனி சென்று விட்டதால் கேபினட்டில் DA உயர்வு குறித்த அஜெண்டா எடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டது .
இன்று 16.04.2013(செவ்வாய்) வழக்கம் போல் நடைபெறும் மத்திய கேபினட் கூட்டம் நடைபெறும் . அதில் DA உயர்வு குறித்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என பரவலாக சொல்லப் படுகிறது ; பேசப் படுகிறது ..
நாளைய தின பத்திரிகைகள் இது குறித்து நல்ல செய்திகள் வெளியிடும் என நம்புவோமாக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக