மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2013 முதல் 8% DA உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வந்தது .ஊழியர்களின் பொறுமை எல்லை மீறியது .
மகாசம்மேளனம் போராட்ட அறைகூவல் விடுத்தது
இதனிடையே நேற்று 18.04.2013 ( வியாழன்) கூடிய கேபினட் DA உயர்வு வழங்க முடிவெடுத்துள்ளது .
அதன் செய்தி கீழே தரப்பட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு
By புது தில்லி
First Published : 19 April 2013 01:05 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
இது தொடர்பாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:இப்போது 72 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அந்தத் தேதியை கணக்கிட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8,629 கோடி கூடுதல் செலவு ஏற்படும்'' என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் அகவிலைப்படியை 72 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. அது கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக