ஜூலை 16, 2025

நமது மூத்த தோழர் ஆறுமுகம் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்


நமது மூத்த தோழர் ஆறுமுகம் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்

 தொழிற்சங்கத்தின் மீது மிகவும் தீவிர பற்று கொண்டவர் அனைத்து தொழிற்சங்க நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவர் 

தோழர் அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்

அவர்களுடன் முத்துப்பட்டியில் பணிபுரிந்த பொழுது எண்ணற்ற விஷயங்களை கற்றுத் தந்துள்ளார்

தோழர் அவர்கள் தொழிற்சங்க வழிகாட்டியாகவும் தொழிற்சங்க புத்தகமாகவும் இறுதிவரை தனது பணியை நிறைவு செய்துள்ளார் 

மனம் நிறைந்த பணி ஓய்வு வாழ்த்துக்கள்💐

ஜூலை 15, 2025

AIPEU gr C DERECOGNITION news July 15 2025

Cheers to our victory🚩🚩

At last Supreme Court has dismissed the SLP filed by our Department regarding our de recognition case against Jharkhand High Court Judgement. 

On behalf of Tamilnadu circle we once again convey our heartiest greetings to our great leaders who had involved in true spirit for this legal fight.

We will stand with our CHQ and the federation leaders to implement the orders very soon

S.K.Jacob raj
Circle Secretary 
AIPEU Gr C
Tamilnadu

ஜூலை 14, 2025

AIPEU P4 Agitation July 14 2025

அஞ்சல் நான்கு அகில இந்திய சங்க போராட்ட இயக்கங்களில் நாமும் முழுமையாக பங்கேற்போம்!
----------------------------------------
 அஞ்சல் நான்கு அகில இந்திய சங்கத்தின் துரிதமான நடவடிக்கைகள் விளைவாக ஒரு போராட்ட அறிவிப்பு. 

IDC திட்டம் துவங்கப்பட்டு இவ்வளவு விரைவில் 40 கோரிக்கைகளை வடிவமைதுள்ள அஞ்சல் நான்கு அகில இந்திய சங்கத்திற்கு வாழ்த்துகள். 

அகில இந்திய சங்கம் IDC திட்ட அமலாக்கத்தின் விளைவை மிக கூர்மையாக கவனித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 

உடனடியாக

 24.07.2025 அன்று கோட்ட மட்டத்தில் ஆர்பாட்டம்.

25.07.2025 அன்று மாநில நிர்வாக அலுவலகம் முன் முழுநாள் தர்ணா

12.08.2025 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் முழுநாள் தர்ணா

22.08.2025 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்.

தோழர்களே களம் காண தயாராவீர் !

அஞ்சல் மூன்றும் உங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

நன்றி
தோழமையுடன்
S.K.ஜேக்கப் ராஜ் 
மாநிலச் செயலாளர் 
அஞ்சல் மூன்று

ஜூலை 09, 2025

வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் சிவகங்கை Ho முன்பு

வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் சிவகங்கை Ho முன்பு தோழர்.மதிவாணன் - P3, தோழர். அம்பிகாபதி GDS ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

மூன்று சங்கத்தை சார்ந்த செயலர்கள் மற்றும் பகுதி வாரியாக கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக தோழர். நாகலிங்கம் P3 அவர்கள் கோரிக்கை பற்றி எழிச்சியாக கோஷமிட்டு, நன்றியுரையாற்றினார்கள்..