ஜூலை 20, 2024

பொதுக்குழு கூட்டம் 20.07.24

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

சிவகங்கை கோட்ட AIPEU அஞ்சல் மூன்றின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை HO வில் 20.7.24 அன்று மாலை 5.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் தோழர் S. கரிகால சோழன் அவர்கள் தலைமை தாங்கினார். அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு, தலமட்ட பிரச்சனைகள் குறித்து தோழர் தோழியர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். செயலர் மதிவாணன் தற்போதைய தொழிற்சங்க அங்கீகார நிலைமை, சமீபகாலமாக கோட்ட ஊழியர்களை தவறாக சித்தரித்து வெளிவந்த மொட்டை கடிதத்தின் மீது தொழிற்சங்கம் எடுத்த மேல் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பொருளாளர் நிதிநிலை குறித்து விளக்கினார். அஞ்சல் நான்கு செயலர் தோழர் P. நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். 

மேலும் அஞ்சல் நான்கின் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கி , இம்மாதம் பணி ஓய்வுபெரும் தோழர் கரிகாலன் அவர்களின் தொழிற்சங்க பணியை பாராட்டியும் தோழமைகள் பேசினார்கள். முடிவில் தோழர் சங்கையா நன்றி கூறினார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1.  ஆகஸ்ட் மாதத்தில் சிவகங்கையில் 29வது அஞ்சல் மூன்று கோட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது.

2. குறைந்த பட்ச நன்கொடையாக ரூ 200 வழங்குவது.
3. ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மொட்டை கடிதம் எழுதியவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், நிர்வாகத்திடம் உள்ள அடிப்படை தகவல்களை கொண்டு கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும்   மூன்று சங்கங்கள் சேர்ந்து கொடுத்த memorandum மீது மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
S. கரிகால சோழன்
தலைவர்

க.மதிவாணன்
செயலாளர்

P. திருக்குமார்
பொருளாளர்

கருத்துகள் இல்லை: