அக்டோபர் 09, 2020

Comrade Bapu Tarapada Mukherji , the pioneer of Indian Postal and Telegraphs Trade Union Movement - His Presidential Address on 09.10.1921 in Lahore conference a Historic Document

 
நூறாண்டைநெருங்கும் உரை- நமக்கு வழிகாட்டும் ஒரு வரலாற்று ஆவணம்*

 

வங்கம் தந்த சிங்கம் பாபு தாரபாதா முகர்ஜி  இந்திய தபால் தந்தி துறையின் தொழிற்சங்க பிதாமகன்.

அப்போது  09.10.1921  முதல்  11.10.1921 வரை நடைபெற்ற  லாகூரில்  அகில இந்திய மாநாடு லாகூரில் நடைபெற்றது . அம் மாநாட்டின் துவக்க நாளன்று அதாவது 09.10.1921 அன்று அவர் ஆற்றிய உரை தபால் தந்தி ஊழியர்களுக்கு மட்டுமல்ல இந்திய தொழிலாளி வர்க்கத்திற்க்கு வழிகாட்டும்  ஒரு  வரலாற்று ஆவணம்  . 99  ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இப்போதும்  அவரது உரை மிகப் பொருத்தமாக உள்ளது . அவரது உரையின் முக்கிய வரிகளை இன்றும் இந்திய தொழிலாளி வர்க்கம் அதன் கோஷமாக முழக்கிக் கொண்டிருக்கிறது .

 

பணிநீக்கம்

அவரது உரையால் ஆத்திரம் அடைந்த  வெள்ளையர் அரசாங்கம்  அரசுக்கு எதிராக அவர் பேசியதை சுட்டிக்காட்டி அவருக்கு குற்றப்பத்திரிகை அனுப்பியது . குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு  மன்னிப்புக்கேட்க சொன்னது , மன்னிப்பு கேட்டால் பதவி உயர்வு தருகிறோம் என்று ஆசை காட்டியது . அதற்கு அவர்  மயங்கவில்லை . நான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டால் எனக்கு நானே பொய்யன் ஆகிவிடுவேன் . எனவே மன்னிப்புக் கேட்க மாட்டேன் , நான் பேசியது அனைத்தும் உண்மையே என்று துணிச்சலாக  பதில் சொன்னார் .

 

 வரமான பணிநீக்கம்

எனவே அவரது  அந்த  லாகூர் உரைக்காகவே அன்றைய இந்திய பிரிட்டிஷ் அரசு அவரை பணிநீக்கம் செய்தது . அந்த பணிநீக்கமே தபால் தந்தி தொழிலாளர்களுக்கு வரமானது . அதன் பின் முழுநேர தொழிற்சங்க தலைவராக இந்தியா முழுதும் சென்று தபால் தந்தி ஊழியர்களை தட்டி எழுப்பி தபால் தந்தி பகுதியில் உறுதியான தொழிற்சங்கத்திற்கு  அஸ்திவாரம் இட்டார் . 1929 ல் அவர் இறக்கும் வரையில் தனது தொழிற்சங்க பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.

 

முதல் முழக்கம்

அவரது வீர உரையும் அவரது தியாக வரலாறும்

“முதல் முழக்கம் - பாபு தாராபாதா முகர்ஜியின் வரலாறும் வீர உரைகளும்”  என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது .பாவை பப்ளிகேஷன் வெளியிட்ட அந்த புத்தகத்தின் ஆசிரியர்  திரு  அ.சோமசுந்தரம். இன்றைய இளைய தலைமுறை அவரது முழு உரையையும் படிக்கவேண்டும் .

 

லாகூர் உரையின் சாரம்-“organize-ஒன்றுபடு”  என்பதே 

அவரது லாகூர் உரையின் சாரமே organize அதாவது ஒன்றுபடுங்கள்  என்ற தொழிலாளி வர்கத்தின் தாரக மந்திரத்தை வலியுறுத்துவது தான் . “ Organize என்ற சொல்லுக்கு செயல்வடிவம் கொடுங்கள்  அதன் மூலமே உங்களது   துன்ப துயரங்கள் தீரும்”   என்பதே தொழிலாளர்களுக்கு  பாபு தாராபாதா முகர்ஜி  தொடந்து சொல்லிவரும் செய்தி .

 

அவரின் முழக்கங்கள் சில

அவரின் சில முழக்கங்களை இன்றும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் முழங்கிக் கொண்டு இருக்கிறோம். அவற்றை மீண்டும் நினைவுகூர்வோம்.  


"Ah Brothers, workers are not beggars;  they are the salt of the earth they are the only people who produced wealth

 

 *தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல . உலகத்தின் அத்தனை செல்வத்தையும் அவனே படைக்கிறான் . எனவே  இந்த மண்ணின் சாரம்சம் அவனே.*  

 

Consider, brothers, what this world would be, were the workers to stop work Not a grain of cereals would be produced, not a yarn would be spun and woven, not a brick would be laid, not a tenement would be built”

*தொழிலாளர்கள் தங்கள் வேலையை நிறுத்திவிட்டால் இந்த உலகம் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு குண்டுமணி தானியம் கூட விளையாது; ஒரு முழம் துணி கூட உருவாகாது; ஒரு செங்கல் கூட அசையாது.  எந்த ஒரு கட்டிடமும் எழும்பாது*

 

"Take it from me, Brothers, that petitions and memorials and supplications will count for nothing as long as you do not organise yourselves in a manner to convince the Government that you will no longer stand nonsense

 

நாம் காட்டும் அலட்சியத்தையும் அவமானத்தையும் இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில்  நீங்கள் ஒன்றுபடாத வரை உங்களது கோரிக்கை மனுக்களும்   பெட்டிசன்களும் உங்களுக்கு எந்தவித பலனையும் அளிக்கப்  போவதில்லை

 

 

You have immense potentiality capable of moving heaven and earth Organise this power Organise with a purpose.  Organise with determination." and I promise you success will knock at your door

 

நீங்கள் விண்ணையும் மண்ணையும் அசைக்கும் பேராற்றல் உடையவர்கள் . அந்த வலிமையை ஒன்று திரட்டுங்கள் ; ஒரே நோக்கத்தோடு ஒன்றுபடுங்கள் ;  அதிலும் உறுதியோடு ஒன்றுபடுங்கள் . இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டால் வெற்றி நிச்சயம் உங்கள் கதவுகளை தட்டும்

 

 

Brother, shake off the hypnotic spell, the somnambulence of past life, wake up and be self-conscious appraise your value at its real worth. Don’t remain forgetful of dignity of labour, realise your own strength , march double quick to the goal with heart within and God overheard

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

நமது தொழிற்சங்க பிதாமகன் தோழர் பாபு தாராபாதா முகர்ஜி சொன்ன ஒன்றுபடு போராடு வெற்றிபெறு  என்ற திசைவழியில் நாம் ஒன்றுபடுவோம் போராடுவோம்  வெல்வோம். பாபு தாராபாதா முகர்ஜியும்   மகாகவி பாரதியும் ஒரே மாதிரித்தான் சொல்லியிருக்கிறார்கள் .

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்

 

என்கிறான் மகாகவி பாரதி .

ஒன்றுபடும் ஞானம் பெறுவோம், நம் முன்னுள்ள பிரச்சனைகள் அனைத்தையும் வென்றெடுப்போம்  

 

---- பி,சேர்முக பாண்டியன் மதுரை

ஆகஸ்ட் 06, 2020

தோழர் விஜயகுமார் GDS-SV SIVAGANGA HO பணி ஓய்வு விழா - 06.08.2020!

   சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் கடந்த 39 ஆண்டுகளாக புறநிலை ஊழியராக சிறப்புடன் பணியாற்றி இன்று (07.08.2020) பணி ஓய்வு பெற்றார்  தோழர் விஜயகுமார். அவருக்கு சிவகங்கை கோட்ட சங்கங்களின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சிவகங்கை அஞ்சல் மனமகிழ் மன்றம் சார்பில்   விழா சிறப்புடன் நடைபெற்றது.


ஜூலை 20, 2020

பதவி உயர்வு பாராட்டு விழா-தோழர் S.பெர்க்மான்ஸ் தாஸ் ADS

                      நமது அஞ்சல் மூன்று கோட்டச்சங்கத்தின் உதவிச்செயலாளர் தோழர் S.பெர்க்மான்ஸ் தாஸ் அவர்கள் AAO தேர்வில் தேர்ச்சி அடைந்து கணக்கு அதிகாரியாக பதவியேற்க  POSTAL ACCOUNTS OFFICE நாக்பூர் செல்கிறார்.   

                 அவருக்கு   மானாமதுரை தலைமை அஞ்சலகம் மனமகிழ் மன்றம் பாராட்டு விழா நடைபெற்றது.  நம் கோட்ட சங்ககங்களின்  சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.  

                     தோழரின் கணக்கு அதிகாரி பணி சிறக்க வாழத்துக்கள்! 

ஜூலை 01, 2020

மரங்களில் மனிதக் காய்கள்- தோழர் K.S கவிதை

மரங்களில் மனிதக் காய்கள்நாற்றுப் பறித்து முடித்த 
நாற்றங்கால் தரும் மணம்!

நடவு வயலில் பரம்படித்த 
சேற்றில் ஓர் மணம்!

நடுகை திரும்பி காற்றில்
அலையும் நாற்றிலும் நறுமணம்!

பிஞ்சு நெல்லைப் பிரசவிக்கும் 
பொதியிலும் ஓர் மணம்!

நிறம் பழுத்த நெற்கதிர்கள்
நிலம் நோக்க வரும் மணம்! 

கதிர் அறுத்த வயலும் 
காற்றில் தரும் மணம்!

நெல் உதிர்த்த தாழ்கள் 
வைத்தூறாய் மாறலில் ஓர்மணம்! 

அவியும் நெல்லிலும் மணம்
ஆக்கிய சோற்றிலும் மணம்!

இத்தனை மணம் தந்த 
இவன் மட்டும் மணக்கவில்லை? 

உடுத்த பருத்தி தந்தும் 
உலவுவது அரை உடம்பாய்! 

விளைந்த பொருளுக்கு விலையுமில்லை 
வாழும் வகையும் தெரியவில்லை! 

வைத்த கடன் திரும்பவில்லை 
வளர்த்த மரம் காய்க்கவில்லை! 

அதனால்-

தாம்புக் கயிற்றில் தொங்குகிறான் 
தானே மரங்களில் காய்களாக!

தானே அழிந்திடும் தனிப்பெரும் மனிதனை 
தக்கவைக்க தகவமைப்போம்!

---காரைக்குடி கார்மேகம் செல்வராசு
ஓவியம் : 
மதி (Divisional Secretary Gr C)


ஜூன் 30, 2020

தோழர் K.செல்வராஜ் (TRR) அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தோழர் K.செல்வராஜ் POSTAL ASSISTANT (LSG) SIVAGANGA HPO அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா-30.06.2020................................................
                  கடந்த 31 ஆண்டுகளாக நமது இலாக்காவில் சிறப்புடன் பணியாற்றி இன்று (30.06.2020) பணி ஓய்வு பெறுகிறார் தோழர் K. செல்வராஜ் II.

                       அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் தோழர். நமது NFPE இயக்கத்தில் மாறாத பற்று கொண்டு எவ்வித சஞ்சலகங்களுக்கும் இடமளிக்காமல் ஈடுபாடுகொண்ட தோழராக விளங்கினார். திருப்பத்தூர் பகுதியில் நமது தொழிற்சங்க நிகழ்வுகளுக்கு முன்னணியில் இருந்து அனைத்து ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களிலும் தவறாது கலந்துகொண்டு தொழிற் சங்கத்திற்கு வழுச்சேர்த்தவர். அவர் என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு!

                தோழருக்கு சிவகங்கை HO மற்றும் திருப்பத்தூர் SO அஞ்சலகங்களில் பணி ஓய்வு பாராட்டு விழா  நடைபெற்றது! திரளான தோழர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.தோழரைப்பற்றி தோழர் PSP அவர்களின் பதிவு :

                   I know Com K.Selvaraj Tiruppattur  since Tiruppattur area was attached to erstwhile Manamadurai Division.

                    He is one of the comrade in our Division who is having utmost faith in the Trade union. He has  participated all the struggles  .He always  maintain calm and composure  with a  smile at all times ." He never complains about others. None complains against him". It is a rare quality I find in him. It shows that he  adjusts with l all the staff  with his love wherever he worked.

                    With your retirement , Sivagangai  division  will miss a   senior comrade who has reposed full confidence upon our union.

                     My best wishes to  his daughters  good and prosperous future.

........P.Sermuga Pandianஜூன் 14, 2020

தோழர் உலகநாதன் என்ற சங்கரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா

தோழர் உலகநாதன் என்ற சங்கரன் ABPM குமாரவேலூர் BO சருகணி   அவர்களுக்கு பணி  நிறைவு பாராட்டுவிழாமானாமதுரை சப்-டிவிசன் சருகணி So/ குமாரவேலூர்  BO  வில் GDS MD யாக பணிபுரிந்த மூத்ததோழர். உலகநாதன் என்ற சங்கரன் செயற்குழு உறுப்பினர் AIGDSU  அவர்கள் 06-06-2020 அன்று பணி ஓய்வு  பெற்றார்

தாேழா் சங்கரன் குமாரவேலூர் ABPM ஆக  பணிநிறைவுவளமுடன் 29 ஆண்டுகள் உழைத்து இன்று பணி ஓய்வு பெறுகிறார்..அவருக்கு சருகனி SO வில் பணிநிறைவு பாராட்டு விழா சங்கத்தலைவர் குருநாதன் அவர்கள் , சங்க செயலாளர் செல்வன் அவர்கள் , P3 சங்க பொருளாளர் திருக்குமார் அவர்ரகள் மற்றும் சருகனி SPM ராஜேஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

தோழரின் பணி ஓய்வுகாலங்கள் முழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட கோட்ட சங்கம் மனதார வாழ்த்துகின்றது.பணிநிறைவெய்திய தோழர் சங்கரன் குடும்பத்தினருடன் நலமுடன் நீடு வாழ வாழ்த்துக்கள்.
                                                  💐🌹🌷🌻🌺🌸💐🌹🌻🌺

K.மதிவாணன்
செயலர் P3
P நடராஜன்
செயலர் P4
S செல்வன்
செயலர் AlGDSU
சிவகங்கை கோட்டம் 

தோழர்.T.பொன்னையா அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா


 தோழர்.T.பொன்னையா GDSBPM  T.புதுப்பட்டி  BO ,திருப்பத்தூர் அவர்களுக்கு  பணி ஓய்வு பாராட்டுவிழா 

               தோழர்.T.பொன்னையா அவர்களுக்கு  பணி ஓய்வு பாராட்டல்.

சிவகங்கை கோட்டம் - திருப்பத்தூர் so T. புதுப்பட்டி BO வில் GDSBPM ஆக கடந்த 40 வருடங்களாக பணிபுரிந்து வரும் அருமை தோழர்.T.பொன்னையா AIGDSU செயற்குழு உறுப்பினர் அவர்கள்  (05-06-2020) பணி நிறைவு பெற்றார் .அவருக்கு திருப்பத்தூர் அஞ்சலகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது . அதில் AIGDSU  கோட்டச் செயலர் தோழர்  S.செல்வன் உட்பட  பி 3 பி 4 AIGDSU  பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு அவரைகவுரவித்து பேசினார் .

தோழரின் பணி ஓய்வு காலங்கள் முழுதும் சீரும் சிறப்புமாக அமைந்திட தொழிற்சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றன🙏


K.மதிவாணன் 
செயலர் P3
P.நடராஜன்
செயலர் P4
S. செல்வன்
செயலர் AIGDSU
சிவகங்கை🙏💐

ஜூன் 12, 2020

தோழர் M.சண்முகம் BPM Kalakkanmoi BO A/w நடராஜபுரம் பணி ஓய்வு விழா 12.06.2020

இன்று பணி ஓய்வு பெறும் மூத்த தோழர் M.சண்முகம் BPM Kalakkanmoi BO A/w நடராஜபுரம் அவர்களின் பணி ஓய்வு விழா நடராஜபுரம் SO வில் 12.06.2020 அன்று நடைபெற்றது. தோழரின்  பணி ஓய்வு காலம் குடும்பத்தாருடன் சிறப்பாகவும் இனிமையாகவும் அமையட்டும்.

தோழியர் திருமதி க. சாரதமணி BPM இடையமேலூர் BO பணி ஓய்வு விழா 11.06.2020


சிவகங்கை சப்-டிவிசன் , சிவகங்கை கலெக்ட்ரேட் So/ இடையமேலூர் Bo வில் GDS BPM யாக 36 ஆண்டுகளாக பணிபுரிந்த மூத்ததோழியர் திருமதி க.சாரதாமணி (AIGDSU செயற்குழு உறுப்பினர்)அவர்கள் இன்று11-06-2020 நாளை பணி ஓய்வு பெற்றார்கள்

தோழரின் பணி ஓய்வுகாலங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட கோட்ட சங்கம் மனதார வாழ்த்துகின்றது.

மே 30, 2020

தோழியர் S. புஷ்பவள்ளி தோழர் R கிருஷ்ணன் தோழர் S. அழகேசன் பணி ஓய்வு

இன்று பணிஓய்வு பெரும் தோழியர் S புஷ்பவள்ளி அவர்களின் பணி ஓய்வு விழா மானாமதுரை HO,  தோழர் R கிருஷ்ணன் பணிஓய்வு விழா சிவகங்கை HO, தோழர் S.அழகேசன் பணி ஓய்வு நிகழ்வு திருப்பத்தூர் SO ஆகிய இடங்களில் சிறப்புடன் நடைபெற்றது.  தோழர்கள் தோழியர் பணி ஓய்வு காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்!