ஏப்ரல் 13, 2015

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்

இன்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்.

எளிய சொற்களில் சமூகக் கருத்துக்களை தமிழர்தம் நெஞ்சங்களில் விதைத்தவர். சிறுவர்களாய் இருக்கும் போது அவரது பாடல்களைக் கேட்ட தலைமுறை சமூக அக்கறை கொண்டவர்களாகவும் , மூடப்பழக்கத்திற்கு எதிரானவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
.தனது 29 வது வயதில் மரணமடைந்த அவர்  17 வகைத் தொழில்கள் செய்தவர். இறுதியில் கவிஞராக பரிமளித்தார்.பொது உடமை சித்தாந்தத்தை உயிரென மதித்தவர்.அவரது பாடல்கள் எம். ஜி.ஆரின் திரையுலக, அரசியல் வளர்ச்சிக்கு துணைபுரிந்தன.அவரது பெருமையினைப் போற்றுவோம்.

சிறுவர்களுக்கு பட்டுக்கோட்டை சொன்னது பெரியவர்களுக்கும் முழுமையாக பொருந்தும்  

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா (மனிதனாக)
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா (வளர்ந்து) 

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா! 

கருத்துகள் இல்லை: