ஏப்ரல் 14, 2015

பன்முகத்தத்தன்மை கொண்ட மாமனிதர் அம்பேத்கார்


சமூக சீர்திருத்தவாதி, சமூகப்போராளி , அரசியல் தலைவர் , பொருளாதார வல்லுநர், சட்ட மேதை என  பன்முகத்தத்தன்மை கொண்ட மாமனிதர்  அம்பேத்கார்


சட்ட மேதை பா சாஹேப் அம்பேத்கார் 
இன்று மாமேதை அம்பேத்கார் பிறந்த நாள் . அவர்  14.04.1891 ல் பிறந்ததார் .  தாழ்த்தப்பட்டவர்கள் .கல்விகூடங்களுக்குள்  நுழைய முடியாத காலத்தில் பல துயரமான சோதனைகளை தாங்கிக்கொண்டு  உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்தார் .அம்பேத்கார். .  தான் எடுத்துச் செல்லும் கோணிச் சாக்கில் தான் பள்ளியில் அமர்வார்  . பள்ளியில் உள்ள பானையில் தண்ணீர் குடிக்க முடியாது . உயர் சாதியை சார்ந்த ஒருவர் கையில் தான் தண்ணீர்  ஊ ற்றுவார்  . அதுவும் அங்குள்ள பியூன்  தான் அதை செய்வார் . . அந்த பியூன் வரவில்லை என்றால் தாகத்திற்கு  தண்ணீர் கிடைக்காது  என்பதை  " No Peon, No water "  என வேதனையோடு நினைவு கொள்வார்  அம்பேத்கார் .

தன்னுடைய  மெரிட்டால் பெற்ற பரோடா மன்னரின் உதவித்தொகை  மூலம் வெளிநாட்டில் படித்தார் .அவரது படிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது .அவரின்  ஆய்வும் தேடுதலும் தொடந்தது .தான் பட்ட அவமானங்களும் துயரங்களும் அவரை தலித்  விடுதலைக்கான  போராட்டத்திற்கு தூண்டு கோலாய்  அமைந்தன .

அவரது ஆய்வு நூல்கள் அவரது நுட்பமான அறிவாற்றலுக்கும் சுய சிந்தனைக்கும்  சான்றாக விளங்குகின்றன .அவர் சமூக சீர்திருத்தவாதி, சமூகப்போராளி , அரசியல் தலைவர் , பொருளாதார வல்லுநர், சட்ட மேதை என  பன்முகத்தத்தன்மை கொண்ட  மாமனிதராக விளங்கினார் . இந்திய அரசில் சட்டத்தை செதுக்கிய ச்தளைச் சிற்பி .அவர் .இந்தியாவைப் பீடித்திருந்த தீண்டாமை என்ற கொடிய நோயை  ஒழித்துக்கட்ட அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம் . அவை  இன்னும்  முடிவடைய வில்லை.அவரை அகர்ஷ சக்தியாக  ஏற்றுக்கொண்ட பலரும் அப்பணியை தொடர்கின்றனர். இப்போதைய இந்திய அரசியல் சூழலில்  ஏற்ப்பட்டுள்ள  "சாதி மதப்  பித்தை வளர்க்கும் வலதுசாரி பிற் ப்போக்கு சக்த்திகளின் வளர்ச்சி" அவரது கனவை நனவாக்குவ தில் தடைகற்க்களாய் இருக்கிறது என்பது தான் வேதனையான உண்மை .
 . 

கருத்துகள் இல்லை: