மார்ச் 01, 2014

10% DA hike for central staff from 01.01.2014

10% DA hike for central staff from 01.01.2014

நேற்று ( வெள்ளிக்கிழமை ) கூடிய மத்திய அமைச்சரவை  மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%  அகவிலைப் படி உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது .
 எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த "அடிப்படை ஊதியத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை இணைப்பு " பற்றி தனது இடைக்கால அறிக்கையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன. 1 முதல் அகவிலைப்படி 10% உயர்வு




மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 90 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.
அகவிலைப்படியை உயர்த்தும் அரசின் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த உயர்வு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
7வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொதுத் தேர்தலுக்கான அட்டவணை சில தினங்களில் அறிவிக்
கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் அகவிலைப்படியை உயர்த்தும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரிலும் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி 90 சதவீதமாக மத்திய அரசு அறிவித்தது, அது 2013-ம் ஆண்டு ஜுலை 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது.
அதேபோல் இப்போதும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் அடிப்படை ஊதியத்தில் 100 சதவீதம் என்ற விகிதத்தில் அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் பெறுவார்கள் என அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 11,074.80 கோடி செலவாகும். ஜனவரி 2014லிருந்து பிப்ரவரி 2015 வரையி
லான 14 மாத காலத்துக்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ. 12,920.60 கோடி செலவாகும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பை நிர்ணயிப்பது தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவேண்டும் என 7வது ஊதியக் குழு கருதினால் அதுபற்றி பரிசீலித்து உரிய மாற்றங்களை பரிந்துரைக்கும்.
18 மாதங்களில் ஊதியக் குழு பரிந்துரை
ஊதியக் குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அது வழங்கும். சில விவகாரங்களில் தமது பரிந்துரைகளை இறுதி செய்து முடித்தால் அப்போதே அதற்கான இடைக்கால அறிக்கையை அரசுக்கு அனுப்பும்.
அடிப்படை ஊதியத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை இணைப்பது பற்றி தனது இடைக்கால அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரைக்க முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டும் இணைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியரின் ஒட்டுமொத்த சம்பளம் தோராயமாக 30 சதவீதம் உயரும் என்று தெரிகிறது. 
நன்றி : தி  தமிழ் ஹிந்து 

மதிய அரசு இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு

Release of additional installment of dearness allowance to Central Government employees and dearness relief to Pensioners, due from 1.1.2014
The Union Cabinet today approved the proposal to release an additional installment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners with effect from 01.01.2014, in cash, but not before the disbursement of the salary for the month of March 2014 at the rate of 10 percent increase over the existing rate of 90 percent.

Hence, Central Government employees as well as pensioners are entitled for DA/DR at the rate of 100 percent of the basic with effect from 01.01.2014. The increase is in accordance with the accepted formula based on the recommendations of the 6th Central Pay Commission.

The combined impact on the exchequer on account of both dearness allowance and dearness relief would be Rs. 11074.80 crore per annum and Rs. 12920.60 crore in the financial year 2014-15 ( i.e. for a period of 14 months from January 2014 to February 2015). 


Courtesy : Press Information Bureau , GOI


கருத்துகள் இல்லை: