அதிகாரி அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று கேட்டிருப்பீர்கள்.
அவர்கள் நம்மை(GDS) எந்நிலையில் வைத்துள்ளார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் 2025 முதல் இந்த நிதியாண்டில் நாம் செய்ததை எல்லாம் மறந்துவிட்டு வெறுமனே இந்த மாதக் கணக்கை மட்டும் வைத்து கொண்டு மிரட்டும் விதம் அனைவருக்கும் பெரும் இடியை இறக்கி இருக்கிறது.
நான் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான்:
1. BPM சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்லுங்கள், OB-CB முறையாக வைத்து கொள்ளுங்கள், மக்களிடம் நன்றாக பழகுங்கள்(அவர்கள் தான் நமது உண்மையான எஜமானர்கள்), அலுவலகத்தை சரியான நேரத்திற்கு மூடுங்கள்.
2. முறையாக தபால்களை பட்டுவாடா செய்யுங்கள், EMO, இதர பண பரிவர்த்தனைகளை முறையாக கையாளுங்கள், முறையான REMARKS எழுதுங்கள்.
மற்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்ச வேண்டாம். அவர்களும் சேவை செய்ய வந்துள்ளார்கள் நாமும் சேவை செய்ய தான் வந்துள்ளோம். யாருக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை ❗
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக