மார்ச் 24, 2023

AIGDSU வின் இரண்டு நாள் வேலைநிறுத்தம்(16 - 03 - 23 மற்றும் 17-03-23) - தற்காலிக ஒத்திவைப்பு

 

இரண்டு நாள் வேலைநிறுத்தம்(16 - 03 - 23 மற்றும் 17-03-23) - தற்காலிக ஒத்திவைப்பு












அன்பார்ந்த GDS தோழர் & தோழியர்க்கு வணக்கம்.

 இலாக்கா மட்ட அளவினில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் (16 - 03 - 23 மற்றும் 17-03-23) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மத்திய சங்கத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

 அடுத்த மாதம் 15-04-23க்குள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணப்படும் என அஞ்சல் இயக்குநர் அலுவலகம் புதுடெல்லி  உறுதியளித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

 எனவே GDS தோழர்கள் அனைவரும் வழக்கம்போல நாளை அலுவலகம் சென்று பணிசெய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 AIG DS யின் வேலைநிறுத்த போராட்ட எதிரொலியின் காரணமாக மத்திய அரசும், அதிகாரிகளும் பணிந்து இறங்கிவந்திருக்கிறது.

 தோழமையுடன்

 S.செல்வன்

கருத்துகள் இல்லை: