நவம்பர் 26, 2016

Red salute to Fidel Castro!

க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்


90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் அறிவித்துள்ளார். க்யூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, 1959ல் இருந்து 2008 வரை க்யூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ.

பிடல் காஸ்ட்ரோ வரலாறு

காஸ்ட்ரோவின் இயற்பெயர் பிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ்

1926ல் கியூபாவின் ஹொல்கூன் மாகாணத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ

கியூபாவில் புரட்சியின் போது சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து போராடினர்

ராணுவ  ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக போராடி ஆட்சியை பிடித்தவர் பிடல்

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ

1976 முதல் 2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ -கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் கேஸ்ட்ரோ இவருடையது. வக்கீலாகத் தன் தொழிலில் ஈடுபட்ட கரும்புப்பண்ணை பணக்கார விவசாயியின் பையன் முதலாளித்துவத்தை எதிர்க்கிற ஆளாக நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் அவர் நாட்டின் சூழல். ஒரு பக்கம் மக்கள் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தார்கள். வறுமை மக்களை வாட்டிகொண்டு இருக்க,அடிப்படை வசதிகள் இல்லாமல் நாடே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பொழுது அமெரிக்காவின் பெருநிருவனங்களைக் காக்கும் பணியைத் தான் செவ்வனே க்யூபாவின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். மாடு திருடி பிழைத்தவர் எல்லாம் தலைவன் ஆகி நாட்டைக் காலி பண்ணி கொண்டு இருந்தார்கள்.



காஸ்ட்ரோ எக்கச்சக்க நிலங்கள் கொண்டிருந்தவரின் மகன். பாடிஸ்டா எனும் ஆட்சியாளன் (அமெரிக்காவின் கைப்பாவை )தேர்தல் நடத்துவதாகச் சொல்லிவிட்டு தேர்தலை நடத்தாமல் போக அதில் போட்டியிட்ட காஸ்ட்ரோ அதிர்ந்து போனார் ;அவனுக்கு எதிராக ஒரு புரட்சி நடத்தி அதில் பலபேரை இழந்த பின் நீதிமன்றத்தில் அவரை நிறுத்திய பொழுது வரலாறு என்னை விடுதலை செய்யும் என அவர் ஆற்றிய உரை சிலிர்க்க வைப்பது -வெகு சீக்கிரமே அரசாங்கம் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் விடுதலை செய்தது -சே குவேராவுடன் சேர்ந்து பன்னிரண்டு தோழர்களுடன் உதவியோடு கொரில்லா போரை ஆரம்பித்து ஆட்சியை எளிய மக்களின் துணையோடு பிடித்துக் காண்பித்தார்.

அவர் ஆட்சியை ஒழிக்க அமெரிக்க எடுத்த முயற்சிகள் ஏராளம் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் என்கிற ஆவணப்படமே வந்தது .

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெயை ரஷ்ய நிறுவனங்களிடம் வாங்க சொன்னார் .அவர்கள் நோ சொன்னார்கள் .தேசிய மயமாக்கினார் .அடிமாட்டு விலைக்குக் கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ரூட் கம்பெனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து டாட்டா காண்பித்து அனுப்பினார் .அமெரிக்கா என்னடா இது எனச் சுதாரிப்பதற்குள் இப்படி நடந்ததும் சர்க்கரையை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றது . இதற்குதான் காத்திருந்தேன் என அமெரிக்காவின் வங்கிகள்,நூற்றி அறுபத்தி ஆறு கம்பெனிகள் என எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார் கேஸ்ட்ரோ . ரஷ்யா கைகொடுத்தது.நடுவில் ஒரு ஆயிரத்து நானூறுபேரை அமெரிக்கா இவரின் ஆட்சியை ஒழிக்க அனுப்பி முகத்தில் கரிப்பூசிகொண்டது.



காலி என அமெரிக்கா நினைத்த,காலியாக்க நினைத்த காஸ்ட்ரோ மற்றும் க்யூபா பல்வேறு பொருளாதாரத் தடைகள்,சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் நடை போடவே செய்தது . மக்கள் ஓயாமல் உழைத்தார்கள். உலகில் மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம்,கல்வி ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் பணம் மொத்த வருமானத்தில் அதிகமே. மனித வள குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு சிரிக்கிறது. க்யூபா அமெரிக்காவின் காலின் கீழ் உள்ள முள் போல உலக வரைபடத்தில் இருக்கும். அது காலில் தைத்த முள் இல்லை;கண்ணில் தைத்த முள். அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.
இது மட்டும் இன்றி கியூபா வில் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி கொடுத்தவர்.*

தனது 32வது வயதில் அதிபர் பொறுப்பை ஏற்றவார்.
பிடல் காஸ்ட்ரோ நினைவாக- ஒரு முறை அமெரிக்க சி.ஐ.ஏ உளவு துறை காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட படையை அனுப்பியது அதில் 300 பேரை கைது செய்து தனது வீட்டு சிறையில் அடைத்து வைத்தார் பின்னார் அவர்களை விடுதலை செய்ய அமெரிக்காவிடம் அவர் கேட்டது எங்கள் நாட்டு குழந்தைகள் படிக்க பென்சிலும்,காகிதமும் மற்றும் அவர்கள் பசி போக்க ஒரு ஆண்டுக்கு தேவையான கோதுமை தாருங்கள் என கேட்டார் இவரை போன்ற ஒரு தலைவரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
மேலும் இவரை கொல்ல அமெரிக்கா 638 முறை முயற்சி செய்து தோற்று போனது அமெரிக்காவை கலங்கடித்த ஒரே உலகத்தலைவர் என்றால் அது புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ

புரட்சியாளன்
மண்ணில்
புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறான்

புரட்சியின் முகவரியே
மானுடத்தின் வீரமே
பிடலே
ஒப்பனை இல்லாத மனித மே
உழைக்கும் வர்க்கத்தின்
ஒப்பிலாத் தோழனே

சே குவாராவோடு
சேர்ந்து வா

மிச்சம் இருக்கிறது
கள்ள நரிகள்
வெள்ளை தோல்
போர்த்து...

மீண்டு வா தலைவா...
ஏகலைவன்கள்
ஏங்குகிறோம்
ஏதேச்சதிகாரம் மாௗ

மீண்டு வா பிடல்
மீட்க வா...

செந்திற வானில்
சுடரொளி
நட்சத்திரமாய்
வழி காட்டு...

மீண்டும் வா...
புரட்சியே மீள வா...

NFPE Sivaganga Division
வீரவணக்கம் செலுத்துகிறது.

RED SALUTE TO FIDEL CASTRO

கருத்துகள் இல்லை: