நவம்பர் 28, 2016

சிவகங்கை HO-விற்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் கேட்டு அமைச்சரிடம் மனு.

சிவகங்கை தலைமை அஞ்சலகத்திற்கு சொந்த கட்டடிடம் கட்ட இடம் ஒதுக்க வேண்டி  நமது தொழிற்சங்கம் மூலம் பலமுறை நிர்வாகத்திடமும், அரசிடமும் கோரிக்கைகள் விடப்பட்டன.  ஆனால் தொடர்ந்து நமது கோரிக்கை  எங்காவது  ஓரிடத்தில் பதிலின்றி கிடப்பில் போடப்படுகிறது. சொந்த கட்டிடம் இல்லாத காரணத்தினால் நமது DOP ATM சிவகங்கை HO வில் அமையவில்லை.  மானமதுரை தலைமை அஞ்சலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட முழு முதற்  காரணம்  நமது NFPE தொழிற்சங்கத்தின் அயராத முயற்சி.   அந்த காலகட்டத்தில் பல தடைகள் ஏற்பட்ட பொழுதும் அயராது பணியாற்றி மானாமதுரை HO விற்க்கு சொந்த கட்டிடம் கட்ட பெரும் முயற்சி எடுத்தவர் நமது தோழர் P. சேர்முகபாண்டியன் (AO, NEW DELHI) அவர்கள்.அவர் சிவகங்கை HO விற்கும் சொந்த கட்டிடம் கட்ட பலமுறை முயற்சியும், நமது தொழிர்சங்கத்திற்கு தொடர் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.


   இந்த முறை நமது சிவகங்கை சட்டமன்ற தொகுதி MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கதர் கிராமத் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றிக்கும்,  மாண்புமிகு அமைச்சர் பாஸ்கரன் அவர்களிடம் 26.11.2016 அன்று கீழ்க்கண்ட மனு நேரில் அளிக்கப்பட்டது.  அமைச்சர் ஆட்சியரிடம் சொல்லி இருப்பதாகவும் விரைவில் இடம் ஒதுக்க ஆவணம் செய்வதாகவும் கூறினார்கள். 


 1 கருத்து:

Unknown சொன்னது…

Very Good Effort.Wish your effort meet all success till consummation of Own building.