ஏப்ரல் 11, 2015

ஜெயகாந்தன் என்றோர் எழுத்தின் இமயம் சரிந்தது

ஜெயகாந்தன் என்றோர்  எழுத்தின் இமயம் சரிந்தது 


ஜே கே என்ற ஜெயகாந்தன் ஓர் எழுத்தின் இமயம்  , விளிம்பு நிலை மனிதர்களை தன கதைகளின் நாயகர் நாயகிகளாக்கியவர் ,. ஞான பீட விருது பெற்றவர் . சாஹித்திய அகடமி விருது உட்பட பல விருதுகள் அவரிடம் வந்து சேர்ந்தன .
சிறு வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து கம்யூன் வாழ்க்கையை வாழ்ந்தவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஜனசக்தி அச்சகம் அவரை தாலாட்டி வளர்த்தது .மகாரிஷிகள் என காரல் மார்க்சையும் எங்கல்சையும் சொல்வார் . அது வினோதமான வாக்கியமாகப் படலாம் ,அதற்கு அவரே விளக்கமும் சொல்வார் .யாரொருவர் மனித குலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக சிந்திக்கிறார்களோ அவர்களே  மகா ரிஷிகள் என்பார், ஒருவகையில் அதுவும் சரிதான் .
பாரதியில் தோய்ந்தவர் . திமிர்ந்த ஞான செருக்கு மிகுந்தவர் . அவரது ஆளுமை வியப்பளிக்கும்.அவரை ஆதர்சன சக்தியாகக் கொண்டு உருவான எழுத்தாளர்கள் ஏராளம் .அவருக்கு ஏகலைவனைப் போன்று  ஏராளமான  மாணாக்கர்கள் உண்டு .சொல்லொன்றும் செயலொன்றுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் மத்தியில் தன எழுத்தைப் போலவே உண்மையாய் வாழ்ந்தார் பேசினார்  .


அவரின் மறைவு உடலுக்குத்தான் . தனது எழுத்தால் தமிழ் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருப்பார் .
ஜே.கே  மறைவிற்கு நமது சிவகங்கைக் கோட்ட NFPE  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது 

கருத்துகள் இல்லை: