ஆகஸ்ட் 26, 2014

அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராக தோழர். N . சுப்பிரமணியன்

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  31.08.2014 அன்று பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   தமிழகத்தைச் சேர்ந்த அன்பிற்கினிய  தோழர்.  N . சுப்பிரமணியன் அவர்கள்  நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக ஏகமனதாக அறிவிக்கப் பட்டுள்ளார் 

சவால்கள் , பிரச்சனைகள் நிறைந்த காலம் இது. இக்கால கட்டத்தில் பொறுப்பு  ஏற்றிருக்கும் அவரது பணி சிறக்க சிவகங்கை கோட்டச்சங்கம்  வாழ்த்துகிறது .


கருத்துகள் இல்லை: