பிப்ரவரி 19, 2014

சிவகங்கைக் கோட்டத்தில் ஈடி ஊழியர்களின் போராட்டம் நூறு சதவிகித வெற்றி .

சிவகங்கைக் கோட்டத்தில் ஈடி ஊழியர்களின் போராட்டம் நூறு சதவிகித வெற்றி .
 18.02.2014  செவ்வாய் முதல் இந்தியா முழுவதும் நடைபெற்றுவரும் ஈடி ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் சிவகங்கைக் கோட்டத்தில் கடந்த இரு தினங்களாக நூறு சதவிகித வெற்றி பெற்றது .
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுவரும் ஈடித் தோழர்கள் சிவகங்கை தலைமை அஞ்சலகம் ,மானாமதுரை தலைமை அஞ்சலகங்கள் முன்பாக  கடந்த இரு தினங்களாக நடை பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளாக கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை ஓங்கி ஒலித்தனர் .
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி வரும் தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம் செலுத்துகிறோம் .  
தினமணி 19.02.2014  சிவகங்கை மாவட்ட செய்தியில் நமது காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து வந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது .
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
By dn, சிவகங்கை
First Published : 19 February 2014 03:26 AM IST
ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை துவங்கினர்.
 கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு (ஜி.டி.எஸ்.) இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், 7ஆவது ஊதியக் குழுவின் வரையறைகளுக்குள் ஜி.டி.எஸ். ஊழியர்களையும் கொண்டு வரவேண்டும், பணியில் இருக்கும் போது இறந்து போன ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் பிப்.18 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜன.29ஆம் தேதி அஞ்சல் துறை முதல்வரிடம் முறையான அறிவிப்பு செய்திருந்தது.
 இதனைத் தொடர்ந்து சிவகங்கை கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் கிராமப்புறங்களில் பணியாற்றும் அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர்.
 வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விளக்கும் வகையில் சிவகங்கை தலைமை அஞ்சல் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க சிவகங்கை கோட்டத் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி, மாநில உதவிச் செயலர் எஸ்.செல்வன், கோட்டச் செயலர் எம்.குருநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானாமதுரை: மானாமதுரை தலைமை தபால் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், கண்டரமாணிக்கம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றும் 400 க்கும் மேற்பட்ட கிராமிய தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகளில் தபால் பட்டுவாடா, முதியோர் உதவித்தொகை வழங்கல், மணியார்டர் சேவை, முக்கிய நகர் பகுதிகளிலிருந்து கிராமங்களுக்கு தபால் பைகளை கொண்டு செல்லுதல் என கிராமிய தபால் ஊழியர்களால் நடைபெறும் பல பணிகள் முடங்கின.  கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என மானாமதுரை தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் கிராமிய தபால் ஊழியர்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை: